(வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் அஹ்மத் (அலை) அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வியும் அதற்க்கு அவர்கள் அளித்த பதிலும்) கேள்வி : கீழ்க்காணும் திருக்குர்ஆன் வசனம் மஸீஹ்(அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார் கள் என்பதற்கு சான்று பகர்கிறது. அதாவது "வ இன் மின் அஹ்லில் கித்தாபி இல்லா ல யுமினன்னா பிஹீ கப்ல மௌதிஹீ (4:160) 'மஸீஹின் மரணத்திற்கு முன் எல்லாரும் அவரிடத்தில் நம்பிக்கை கொள்வார்கள்'. எனவே இந்த வசனத்தில் பொருளிலிருந்து வேதத்தை யுடையவர்கள் எல்லோரும் நம்பிக்கை கொள்ளும் வரையில் மஸீஹ் உயிரோடு இருக்க வேண்டியது அவசியம் எனத் தெரிகிறது. பதில் : கேள்வி கேட்டவர் தவறான கருத்துக் கொண்டுள்ளார். அதாவது வேதத்தையுடையவர் களில் எல்லாப் பிரிவினர்களும் மஸீஹின் மரணத்திற்கு முன் அவரிடம் கட்டாயம் நம்பிக்கை கொண்டாக வேண்டும் என்பதுதான் இந்த வசனத்தின் பொருள் என்று அவர் எண்ணிக் கொண்டார். ஏனெனில் அந்த வசனத்தின் பொருள் கேள்வி கேட்டவர் புரிந்து கொண்டதுதான் என்று நாம் கற்பனையாக ஏற்றுக் கொண்டாலும் அவர் உயர்த்தப்பட்ட காலத்திலிருந்து இறங்கும் காலம் வரையில், உலகில் இறந்து விட்ட வேதத்தையுடை யவர்களும், தற்போது இருப்பவ...