Saturday, June 18, 2022

ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம் மாதாந்திர தர்பியத்து கூட்டம் களியக்காவிளை கிளை!

களியக்காவிளை கிளையின் மாதாந்திர தர்பியத் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12/06/2022) நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

இக்கூடத்தில் தமிழக மாநில அமீர் முக்கராம் ஹஸ்ரத் ஸலீம் ஸாஹிப் அவர்கள், தப்லீக் செயலாளர் முக்கராம் கலீல் ரஹ்மான் ஸாஹிப், தர்பியத்
செயலாளர் நூர்தீன் ஸாஹிப், துணை பொதுசெயலாளர் நஸீர் ஸாஹிப், ஊடகத்துறை செயலாளர் ஜஃபருல்லாஹ் ஸாஹிப் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் மற்றும் முஹம்மது ரஃபி ஸாஹிப், அஜ்மல் ஸாஹிப், ஸபீர் ஸாஹிப், அத்தாஸ் ஸாஹிப் உள்ளிட்ட பல கிளைகளைச் சார்ந்த உறுப்பினர்களும் வருகைத் தந்து சிறப்பித்தார்கள்.

கிளை தர்பியத் செயலாளர் ஜனாப் ஸஜி ஸாஹிப்பின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் களியக்காவிளை ஜமாத்தின்
கிளை 
உறுப்பினர் ஜலீஸ் சாஹிப் அவர்கள் குர்ஆன் திலாவத் செய்தார்கள். மேலும் களியக்காவிளை கிளை உறுப்பினர் மற்றும் ஸிராஜ் மக்கீன் ஜவஹரத்துல் கமால் மாநில தர்பியத் செயலாளருமான சஃப் னா சாஹிபா அவர்கள், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமது (அலை)அவர்களின் "துர்ரே ஸமீன்" என்னும் கஸீதா தொகுப்பிலிருந்து "ஹம்தோம் ஸானா உஸிகோ" என்ற நஸம் பாடினார்கள்.
நன்னடத்தை என்ற தலைப்பில் தலைமை உரையாற்றிய ஜனாப் ஸஜி ஸாஹிப் பேசுகையில், "இந்நூற்றாண்டின் இறைத் தூதரை ஏற்றுக் கொண்ட நாம் உலகிலேயே மிகச் சிறந்த அதிர்ஷ்டசாலிகள் என்றும், காலகட்டத்தின் கலீஃபத்துல்லாஹ் அவர்களின் உதடுகளிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் அடிபணிவதன் மூலம் நாம் ஒவ்வொருவரும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உண்மை அடியாராக மாற வேண்டும் என்று கூறினார்கள். அதனைத் தொடர்ந்து கிளைத் தலைவர் மற்றும் தப்லீக் செயலாளருமான ஜனாப் அஸீம் அஹமது ஸாஹிப் அவர்கள், "ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் அவர்களின்
ரிஸாலத்திற்கு முந்தைய கால (தூய) வாழ்க்கை; என்ற தலைப்பில் உரை நிகழ்தினார்கள். பின்னர் மாநில தப்லீக் செயலாளர் முக்கராம் கலீல் ரஹ்மான் ஸாஹிப் பேசினார்கள். அவர்கள் பேசுகையில், இப்போது தப்லீக் மற்றும்
தர்பியத் துறையில் (விஷயத்தில்) களியக்காவிளை கிளை முன்னணியில் இருப்பதாகவும், ஒவ்வொரு கிளையும் அவ்வாறே முன்னோக்கி செல்ல வேண்டும் என்று கூறியதோடு திருக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களிலிருந்து நல்லொழுக்கம் போதனைகளைக் குறித்து சுருக்கமாகவும் அருமையாகவும் உரையாற்றினார்கள். அதைத் தொடர்ந்து மாநில தர்பியத் செயலாளர் ஜனாப் நூர்தீன் ஸாஹிப் அவர்கள் "தர்பியத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கம் குறித்து பேசியதோடு ஒவ்வொரு கிளைகளிலும்
இத்தகைய மாதாந்திர கூட்டத்தின்போது வழக்கமான திலாவதே குர்ஆன், நசம் மற்றும் சொற்பொழிவுகளுக்கு மேலதிகமாக அதாவது வழக்கமான திலாவத்தே குர்ஆன், நஸம் மற்றும சொற்பொழிவுகள் கூடாமல் வுளு, அதன் நோக்கம், பலதரப்பட்ட தொழுகை, அதன் முறைகள் மற்றும் பிஃக் தொடர்பான ஹதீஸ்கள் போன்றவை நடத்துவதற்கான புதிய வகுப்பு திட்டம் குறித்தும் விளக்கினார்கள். பின்னர் மாநில துணை பொதுச் செயலாளர் ஜனாப் நஸீர் ஸாஹிப்,
நம்பிக்கையாளர்களின் ஒற்றுமை குறித்து ஹதீஸின் போதனைகளின் அடிப்படையில் மிக அழகாகவும் மனம் கவரும் வாகையிலும் உரையாற்றினார்கள். தொடர்ந்து "ஸஹாபாக்களின் வாழ்க்கை" என்ற தலைப்பில் ஜனாப் முஹம்மது ரஃபி
ஸாஹிப் பேசியதை அடுத்து மதிப்பிற்கும் மரியாதைக்கும் கண்ணியத்திற்குமுரிய மாநில அமீர் முக்கராம் ஹஸ்ரத் சலீம் சாஹிப் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் தர்பியத் என்றால் என்ன? அதற்கு பொருள் - "கற்பது" என்பதல்ல மாறாக "கற்பித்தல்" என்பதாகும். என்றும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் புறமிருந்து வந்த உண்மையான ஆன்மீகத்தை ஏற்று கொண்ட பிறகு, மிக உயர் தரமான இடத்தை அடைந்த நீங்கள் உங்கள் ஆத்மாவை (ரூஹ்) ஷைத்தானின் தாக்குதலிலிருந்து பாதுகாக்க "தர்பியத்"
மிக அவசியம் என்றும் அமீர் ஸாஹிப் அவர்கள் கூறினார்கள். நமது ஆத்மா அடைந்திருக்கும் உயர்ந்த இடத்தை பாதுகாக்க நாம் ஒரு ஆன்மீக வளையத்தை உருவாக்க வேண்டும் என்றும் இல்லையெனில் ஷைத்தான் உங்களை அவ்விடத்தில் அமரவிடாமல் தூக்கி வீசி விடுவான் என்றும் ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் அவர்களின் போதனைகளின் ஒளியில் அமீர் ஸாஹிப் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். மேலும், "நான் நம்பிக்கைகொண்டுள்ளேன், அதனால் எனக்கு தர்பியத்தின் தேவையில்லை எனது எல்லா தவறு மற்றும் குற்றங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான்" என்று கூறுவது முற்றிலும் முட்டாள்தனம் என்றும் நீங்கள் நம்பிக்கைகொண்ட பிறகு அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுன்னத்தை பேணி நடக்காத வரை, நீங்கள் நல்லொழுக்கம் கொண்டவராக மாறாத வரை உங்கள் ஆன்மீகத்தை பாதுகாப்பது மிகக் கடினம் என்றும் ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் அவர்களின் போதனைகளை மேற்கோள் காட்டி அமீர் சாஹிப் அவர்கள் கூறினார்கள். தொடர்ந்து
மனிதனின் இயல்பான நிலைக்கும் நல்லொழுக்க ஆன்மீக நிலைக்கும் இடையிலுள்ள நெருங்கிய தெடர்பு குறித்து திருக் குர்ஆன் மற்றும் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் போதனைகளின் அடிப்படையில் பல்வேறு விளக்கமளித்த அமீர் ஸாஹிப் அவர்கள் தனது உரையின் இறுதியில் "இளைஞர்களுக்கான அறிவுரைகள்" என்ற தலைப்பில் ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் அவர்கள் ஆற்றிய ஜும்ஆ பேருரையை மேற்கோள் காட்டி வழங்கிய அறிவுரை, கூட்டத்தில் கலந்துகொண்ட சகோதர சகோதரிகளுக்கு ஆன்மீக நிறைவைத் தரும் களமாக அமைந்தது. அல்ஹம்துலில்லாஹ் ஸும்மா அல்ஹம்துலில்லாஹ். "களியக்காவிளை கிளை பொருளாளர்" ஜனாப் ஐவர் ஸாஹிப் அவர்கள்
நன்றியுரை நிகழ்த்தினார்கள். தொடர்ந்து மாநில தர்பியத் செயலாளர் ஜனாப் நூர்தீன் சாஹிப் அவர்களின் தலைமையில் அஹது மற்றும் துஆ நடைபெற்றதையடுத்து விருந்து உபசரிப்புடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. அல்ஹம்துலில்லாஹ். இந்த நிகழ்ச்சி அனைத்தையும் மதிப்புற்குரிய மாநில ஊடகத்துறை செயலாளர் ஜனாப் ஸபருல்லாஹ் ஸாஹிப் அவர்கள் நேரடியாக பதிவு செய்தார்கள். மேலும் ஜூம் மூலம் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஜமாஅத்துல் சஹீஹில் இஸ்லாம் உறுப்பினர்கள் கண்டுகளித்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

உம்மத்தின் நோய்கள் (பகுதி 2)

10 ஜூன் 2022 / 09 துல் கஹ்தா 1443ஹி

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹது, தவூத் மற்றும் சூரா அல் ஃபாத்திஹா ஓதியப் பிறகு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் உம்மத்தின் நோய்கள் (பகுதி 2) என்ற தலைப்பில் தனது ஜும்மா பேரூரையை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ். ஸும்ம அல்ஹம்துலில்லாஹ். தற்போதைய‌ காலகட்டத்தில் இஸ்லாத்தை பாதிக்கின்ற காரணங்கள் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் ஒரு மாற்றத்தைத் தூண்டுவதற்கு முன்னெடுக்கப்படும் தீர்வுகள் குறித்துத் தொடர்ந்து எனது வெள்ளிக்கிழமை சொற்பொழிவை வழங்கும் தவ்ஃபீக்கை எனக்கு அளித்துள்ளான். இன்ஷா அல்லாஹ் படிப் படியாக நான் இந்தத் தலைப்பின் பக்கம் வருவேன்.

நான் கடந்த வெள்ளிக்கிழமை உங்கள் முன் மேற்கோள் காட்டியதைப் போன்றே அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

"இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, நிராகரிப்பாளராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்".    (அல் மாயிதா 5: 79-80)

நமது தேசத்திற்குரிய நபி(ஸல்) அவர்கள் இந்த குர்ஆனிய வசனங்கள் குறித்து மேலும் விவரங்களை வழங்கி, அவற்றின் மீதான விளக்கத்தின் ஒளியை [i.e. புரிந்துணர்வை] வழங்கி யுள்ளார்கள் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரலி) அறிவித்தார்கள்:

இஸ்ரவேல் சந்ததியினரைப் பாதித்த (மார்க்கத்தின்) வழியிலான முதல் குறைபாடானது, (அவர்களில் ஒரு) மனிதர் இன்னொருவரைச் சந்தித்து அவரிடம் கூறுவதாவது:

அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதிலிருந்தும் விலகி இருங்கள், ஏனெனில் இது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல!பின்னர் அவர் மறுநாள் அவரைச் சந்திப்பார், அவரிடத்தில் எந்த மாற்றமும் இருப்பதில்லை,ஆயினும் இது அவருடன் (ஒன்றாக)உண்பதையும், அவருடன் குடிப்பதையும், அவருடைய சபைகளில் அமர்வதையும் தடுப்பதில்லை.இந்த நிலை வரும்போது, அப்படிப் பட்டவர்களுடன் அவர்கள் இணைந்ததன் காரணமாக அல்லாஹ் அவர்களின் இதயங்களை தீய வழிகளின் பக்கம் கொண்டு சென்றான்'.

அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் இதனை ஓதினார்கள்:

"இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து, நிராகரிப்பாளராகி விட்டவர்கள், தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்டளைக்கு) மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள். இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும்.

இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களைவிட்டு ஒருவரையொருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையெல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். (நபியே!) அவர்களில் அநேகர் காஃபிர்களையே உற்ற நண்பர்களாகக் கொண்டிருப்பதை நீர் காண்பீர். அவர்கள் தமக்காக முற்கூட்டியே அனுப்பிவைத்தது நிச்சயமாக கெட்டதேயாகும். ஏனெனில் அல்லாஹ்வின் கோபம் அவர்கள் மீதுள்ளது. மேலும் வேதனையில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் மீதும் நபியின் மீதும், அவர் மீது இறக்கப்பட்ட (வேதத்)தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தார்களானால், அவர்கள், காஃபிர்களைத் (தங்களின்) உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொண்டிருக்கமாட்டார்கள். ஆனால் அவர்களில் அநேகர் பாவிகளாகவே இருக்கின்றனர்." (அல் மாயிதா 5: 79-82)

அதன் பிறகு ஹஜ்ரத் முஹம்மது நபி (ஸல்) தொடர்ந்தார்கள்:

“அவ்வாறன்று! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து, அநீதி இழைப்பவரின் கையைத் தடுத்து அவர் நியாயமாகச் செயல்படுமாறு வற்புறுத்தவும், உண்மையைக் கடைப்பிடிப்பதற்கும் நீங்கள் சுமத்தப் படுகிறீர்கள் (வழி நடத்தப்படுகிறீர்கள்)

அல்லது அல்லாஹ் உங்களில் சிலரது உள்ளங்களை மற்ற(தீய)வர்களின் இதயங்களுடன் இணைத்து அவர்களை சபித்தது போல் உங்களையும் சபித்துவிடுவான்”. (அபூதாவூத், திர்மிதி)

[ஹஸ்ரத் ஜரீர்] கூறியதாக ஹஸ்ரத் ஜரீரின் மகனிடமிருந்துள்ள அறிவிப்பாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(குற்றமிழைப்பவர்களைத் தடுக்கும் ஆற்றலும், திறனும் கொண்ட மக்களாக) அவர்கள் வலுவாகவும்,ஓர் உயர்ந்த அந்தஸ்துடனும், அவர்கள் தம்மை மாற்றிக் கொள்ளாதவர்களாகவும் இருக்கின்றவரை, பாவங்களைச் செய்தவர்களாகமாட்டார்கள், ஆனால், (அந்நிலையில்) அல்லாஹ் அவர்கள் அனைவர் மீதும் தண்டனையை இறக்கியதாக எந்த சமுதாயமும் இல்லை'' (இப்னு மாஜா)

ஹஜ்ரத் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: "கலிமா - லா இலாஹ இல்லல்லாஹ் - இதனை யார் ஓது கின்றார்களோ அவர்களுக்கு நன்மை பயக்கும்.மேலும் அவர்கள் எதுவரை அதன் உரிமைகளைப் புறக்கணிக்காமல் இருக்கின்றார்களோ அது வரையில் துன்பங்கள் மற்றும் துரதிர்ஷ்டங்களில் இருந்தும் அவர்கள் பாதுகாக்கப் படுகின்றார்கள்".

ஸஹாபாக்கள் (ரலி) வினவினார்கள்: "அதன் உரிமைகளைப் புறக்கணித்தல்" என்பதன் பொருள் என்ன?" (அதற்கு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: “பாவங்கள் வெளிப்படையாகச் செய்யப்படும் போது, அவர்கள் அதனை ​​தடுத்து நிறுத்த மாட்டார்கள்,அவர்களை (பாவங்கள் செய்வதிலிருந்தும்) தடை செய்ய மாட்டார்கள்".

ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அன்னாரது அருளுக்குரிய முகத்துடன் வந்தார்கள். ஏதோ மோசமான சம்பவம் நிகழ்ந்ததுள்ளது என்பதை உணர்ந்தேன். அன்னார் எதனையும் கூறவில்லை.ஒளு செய்துவிட்டு நேராக பள்ளி வாயிலுக்கு சென்றார்கள்.நானும் கூட அன்னார் என்ன கூறுவார்கள் என்பதைக் கேட்பதற்காக பள்ளி வாயிலின் சுவர் அருகே நின்றேன். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தும் மேடையின் மீது நின்று, அல்லாஹ்வைப் புகழ்ந்த பிறகு கூறினார்கள்:

"ஓ முஸ்லிம்களே! நன்மையை ஏவுமாறும், தீமையைத் தடுக்குமாறும் அல்லாஹ் உங்களுக்கு விதித்துள்ளான், அவ்வாறு இல்லையென்றால், ஒரு காலம் வரும் (அப்போது) நீங்கள் பிரார்த்திக்கும்போது [அவனை அழைப்பீர்கள்] ஆனால் அவன் [உங்கள் பிரார்த்தனைகளுக்கு] பதிலளிக்க மாட்டான், நீங்கள் அவனிடம் ஓர் ஆதரவைக் கேட்பீர்கள், (ஆனால்) அவன் அதனை உங்களுக்கு வழங்க மாட்டான், நீங்கள் அவனிடம் உதவியைக் கேட்பீர்கள், (ஆனால்), அவன் [உங்களுக்கு அந்த உதவியை செய்ய] மறுத்து விடுவான்".

ஹஸ்ரத் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘எப்போது எனது உம்மத் இந்த உலகத்திற்கு [மறு உலகை விட] முன்னுரிமை கொடுக்கத் தொடங்குமோ, மேலும், அதனை கண்ணியத்திற்க்குரிய அடிப்படை ஆதாரமாகக் கருதத் தொடங்குவார்களோ, [அப்போது] [அல்லாஹ்வின் மீதான] அச்சமும், மற்றும் இஸ்லாத்தின் மீதான மதிப்பு [முக்கியத்துவமும்] அவர்களின் இதயங்களிலிருந்து மறைந்து போய்விடும். அவர்கள் நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதை விட்டுவிடும்போது, ​​அவர்கள் இறைவெளிப்பாட்டின் அருள்களை இழந்துவிடுவார்கள், மேலும் அவர்கள் ஒருவரையொருவர் விமர்சிக்கத் தொடங்கும்போது, ​​அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் இருந்து வீழ்ந்து விடுவார்கள்.”

இந்த பிரச்சினையின் (ஆணி)வேர் (எது?)

நான் உங்கள் முன் வைத்த ஹதீஸ்களில் இருந்து “அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்” (நன்மையை ஏவித் தீமையைத் தடுத்தலாகிய) இந்தப் பணியை [மக்கள் மீது - முஸ்லிம்கள் மீது] கொண்டு வந்ததன் முதல் காரணம் கோபம், அதிருப்தி மற்றும் இறுதியில் அல்லாஹ்வின் சாபம் ஆகும். மேலும் உம்மத்-ஏ- முஹம்மதியாவைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் இந்தப் பணியை புறக்கணித்தால் அல்லது விட்டுவிட்டால், அவர்கள் அனுபவிக்கும் தண்டனை கடந்த கால சமூகங்களைக் காட்டிலும் மிகக் கடுமையானதாக இருக்கும். ஏனென்றால், அவர்கள் தங்கள் முதல் கடமையை அங்கீகரிக்கத் தவறிவிட்டனர் என்பதாலும், அவர்களது வாழ்க்கையின் ஒரேப் பணியை புறக்கணித்து விட்டனர் என்ற காரணத்தினாலும் ஆகும்.

இந்த காரணத்திற்காகவே, ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் "அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்" என்ற இந்தச் செயலை "தீன்-இ-இஸ்லாத்தின் அடிப்படையான மற்றும் மிகக் குறிப்பான அடையாளமாகும்" என்று கட்டளையிட்டு (அடிப்படைத்) தகுதியுடையதாக ஆக்கினார்கள். மேலும், இந்த பணியை விட்டுவிடுவது இஸ்லாத்தின் தரகுறைவையும், மறைவையும் ஏற்படுத்தி விடும்.

அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு ஹதீஸில் இவ்வாறுக் குறிப்பிடப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் எவர் ஒருவர் ஒரு தீமையைக் கண்டாலும் அவர் கண்டிப்பாக அதனைத் தனது கைகளால் தடுக்கவேண்டும் வேண்டும் (மாற்ற); அவரால் அவ்வாறு செய்ய முடியவில்லை என்றால், அவரது நாவால் தடுக்க வேண்டும்; அவரால் அதனையும் செய்ய முடியவில்லை என்றால், பிறகு அவரது உள்ளத்தால் தடுக்க வேண்டும் (வெறுத்து விட ஒதுக்கி விட வேண்டும்); அதுவே ஈமானின் - நம்பிக்கையின் கடைசி நிலையாகும்." (முஸ்லிம்)

இந்த ஹதீஸின் விரிவான பதிவு ஒன்றில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸூத்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: எனக்கு முன் அல்லாஹ் அனுப்பி வைத்த நபிமார்களுக்கும் உதவியாளர்களுக்கும், தோழர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்தந்த நபியினுடைய சுன்னத்தை ஏற்று நடந்துள்ளார்கள். இவர்களுக்கு பின்னால் வரக்கூடிய சமூகம் அந்தத் தோழர்கள் செய்யாததை செய்ததாகச் சொல்வார்கள், அவர்களுக்கு ஏவப்படாததையெல்லாம் செய்வார்கள். எவனொருவன் தனது கையினால் இவர்களுடன் ஜிஹாது செய்கிறானோ அவன் மூமினாவான். தனது நாவினால் எவன் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். எவன் தனது உள்ளத்தால் ஜிஹாது செய்கிறானோ அவனும் மூமினாவான். இதன் பின்னர், ஒரு கடுகளவேனும் ஈமான் என்பது கிடையாது”, (முஸ்லிம்)

"அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்" (நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்) என்ற பணியானது இஸ்லாத்தின் அதே வலுவானத் தூணாகும், அதன் மீதே ஈமானின் (இறை நம்பிக்கையின்) ஒவ்வொரு கிளையும் தாங்கி நிற்கிறது என்பதில் சந்தேகமில்லை. நிச்சயமாக, அனைத்து நபிமார்கள் (அலைஹிமுஸ்ஸலாம்) அவர்களும் இந்த பணிக்காகவே அல்லாஹ்வால் (தபாரக) அனுப்பப்பட்டார்கள்.

துரதிர்ஷ்டம் காரணமாக, நாம் இந்த பணியைப் புறக்கணித்து விட்டால், அதனை நாம் மறந்து விட்டால், அதை நாம் செய்வதை நிறுத்திவிட்டால், நுபுவ்வத்தின் (நபித்துவத்தின்) உண்மையான நோக்கம் சிதைந்து போய் அதன் அர்த்தத்தை இழந்துவிடும் என்று நாம் கூறலாம். இந்த சூழலில் தான் மனிதனின் முதல் செல்வமாக நாம் கருதக்கூடிய மனசாட்சியானது கெட்டுப்போய் சீரழிந்துவிடும். மனம் கணத்துப்போய் இருளாகிவிடும். பாவம் மற்றும் ஆணவத்தின் கதவு திறக்கப்பட்டு உலகம் முழுவதிலும் மக்கள் காட்டுமிராண்டிகளாக ஆகிவிடுவார்கள். மனிதனின் எந்தக் கண்டுபிடிப்பும் ஆபத்தானதாக மாறுவதுடன், அது அவனுக்கே தீங்கைக் கொண்டு வந்து விடும்.

மனிதனிடையே உள்ள உறவு ஒழுக்க ரீதியாக தாழ்ந்துப் போய்விடும். ஆனால், மனிதன் இவை அனைத்தையும் தீர்ப்பு நாளில், அல்லாஹ்வின் முன் தோன்றி அவன் தனது செயல்களுக்காகக் கணக்குக் கொடுக்கக் கூடிய நாளில் உணர்ந்து கொள்வான். இது நிறைவேறக்கூடியதும், நாம் அஞ்சக்கூடியதுமான ஒரு பெரும் துரதிஷ்டமாகும். மேலும், இது நமது கண் முன்னே அனைத்து எல்லா உண்மையுடடனும் பௌதீகமாக உருப்பெற்று விடும். (அந்நாளில் வெளிப்படையாகக் காட்சி அளிக்கும்)

அல்லாஹ் திருக் குர்ஆனில் கூறுகிறான்: இன்னும் அல்லாஹ்வின் கட்டளையானது தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (அல் அஹ்ஜாப் 33:39).

நாம் (இதனை) கூறுவதற்கு நியமிக்கப்பட்டுள்ளோம்: “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்”(அல்-பகரா 2:157).

அறிவு மற்றும் வழிகாட்டலின் கட்டுமானங்கள் தகர்க்கப்பட்டுள்ளன; நன்மை மற்றும் இந்த அறிவின் பலன் முற்றிலுமாக மறைந்து போய்விட்டது. இதன் விளைவாக, வெறுப்பு மற்றும் அவமதிப்பு எல்லா இடங்களிலும் படையெடுத்துவிட்டன. மனிதனுக்கும் அவனது படைப்பாளனுக்கும் இடையே உள்ள உன்னதமான மற்றும் நெருக்கமான உறவானது இப்போது இதயத்தில் இல்லை; மாறாக, மனிதர்கள், விலங்குகளைப் போலவே, ஆசைகளுக்கு அடிமையாகிவிட்டனர். நிச்சயமாக இன்றைய உலகில், முஸ்லீம்கள் அரிதாகவே இருக்கிறார்கள். இஸ்லாத்தைப் பரப்புவதற்காக தவிர்க்க முடியாத தியாகங்களை தாங்கிக் கொள்ள தயாராக இருப்பவர்களை கண்டுபிடிப்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக உள்ளது.

தீன் - இஸ்லாம் மார்க்கம் படுகொலை செய்யப்பட்டு கீழே வீசி எறியப் ப்படக்கூடிய இந்த தற்போதைய நிலையை மாற்ற தைரியமாக நிற்கும் எந்த முஸ்லிமும், தீனை பரப்புவதற்காக நபித்துவத்தின் நடைமுறையை (சுன்னத்தை) உயிர்ப்பிக்க அவர் தன்னால் முடிந்த அளவுக்கு அனைத்தையும் செய்து அவர் இந்த பொறுப்பை அவரது தோள்களில் ஏற்றுக் கொள்வதற்கு எப்போதும் ஒரு படி முன்னோக்கி இருக்கிறார் என்றால் அவர் நிச்சயமாக எல்லா மக்களிலும் மிகவும் உன்னதமான மற்றும் புகழ்பெற்றவராக கருதப்படுவார்.

இன்று, அல்லாஹ் தனது அடியார்களின் மீது கருணை காட்டி உங்கள் துன்பத்தைப் புரிந்துகொண்டு, அவனது தீனை புதுப்பித்து இஸ்லாத்தை மீண்டும் உங்கள் இதயங்களில் கொண்டு வர அவனது கலீஃபத்துல்லாஹ்வை உங்களிடையே அனுப்பியிருக்கிறான் என்பதால் நீங்கள் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள். இந்த பணியில் அல்லாஹ்வுக்கு அவனது எளிய அடியானுக்கு உதவி செய்ய நேர்மையான இதயத்துடன் எவர் முன் வருவாரோ, அவர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி ஆவார். மேலும், அவருக்கு அல்லாஹ்விடமிருந்து மகத்தான கூலி கிடைக்கும். அல்லாஹ்வின் தூதருடைய காலம் [வரலாற்றின் ஒரு (சிறப்பு மிகு) காலம்] இது அனைவருக்கும் வழங்கப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்!.

எனவே, நபி கரீம் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா(ஸல்) அவர்களின் பரிபூரணமான மற்றும் கீழ்ப்படிதலுள்ள தொண்டனாக இருக்கின்ற அல்லாஹ்வின் நபியை- தூதரை எவர்கள் அடையாளம் கண்டு உறுதியாக நம்பிக்கை கொண்டு (அவருக்கு) கட்டுப்படுவார்களோ, பின்னர் உலகில் அல்லாஹ்வின் ஒளியை உலகில் பரப்பும் மனத் திறனை அந்த மனிதரும் பெற்றுக்கொள்வார். இன்னும் "அம்ர் பில் மரூஃப் வ நஹி அனில் முன்கர்" (நன்மையை ஏவுதல் தீமைகளைத் தடுத்தல்) என்ற இப்பணியை செய்யும் ஆற்றலையும் அவர் பெற்றுக்கொள்வார்.

உலகம் துயரம் மிகுந்த வேதனையில் இருந்து கொண்டிருக்கக் கூடிய இதுபோன்ற சூழ்நிலைகளில் என்ன செய்ய வேண்டும் என்பதை நிதானமாக சிந்தனை செய்ய நாம் நேரம் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த நாட்களில் பரவி வரும் சோம்பேறித்தனம் மற்றும் அலட்சியத்திற்குப் பின்னால் மிகத் தெளிவான காரணங்கள் உள்ளன. இன்ஷா அல்லாஹ், அடுத்த வெள்ளிக்கிழமை எனது குத்பாவில் நான் இந்த காரணங்களைப் பற்றி கூறுவேன்.

மனிதனின் முயற்சியும், உறுதியான நம்பிக்கையும் இன்றி, அல்லாஹ் அவனது மூச்சுக் காற்றை [அதாவது இறைவனின் ஆவியில் உள்ள உயிரை] மனிதனின் வாழ்வின் மீது வைக்க மாட்டான் என்பதை மனிதன் உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதனிடம் அல்லாஹ் எதிர்பார்க்கக் கூடிய அல்லாஹ்வின் அற்புதங்களின் தெளிவான சான்றை காண்பதற்காக மனிதன் முயற்சி செய்ய வேண்டும். அல்லாஹ்வின் பாதையில் அவர் முயற்சி செய்யும் போது, அல்லாஹ் அவருடன் இருக்கிறான் என்பதற்கான அடையாளங்களை அவர் காண்பார் மேலும் தாவத்-இ- இல்லல்லாஹ் - வின் அது பற்றிக் கூறுவதென்றால் மற்ற மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தலின் பணியை நிறைவேற்றுவதில் முன்னேற்றம் அடையும்போது அவர் அல்லாஹ்வின் ஆதரவைப் பெறுவார்.

அல்லாஹ்வின் தூதரின் காலகட்டத்தில், நமது தற்போதைய காலத்தைப் போன்றே, இந்த தூதர்- சீர்திருத்தவாதியின் உண்மையான ஸஹாபிகள் அவரையும், அவரது குறிக் கோள் - பணியையும் உறுதியாக நம்புகின்றார்கள். இந்த பணியில் அவருக்கு உதவ அவர்கள் எதையும் செய்யத் தயாராக உள்ளனர், மேலும் அவரது பணியிலும், அல்லாஹ்வின் தூதராகிய, அவனது கலீபத்துல்லாஹ்விற்கு மேலிருந்து இறங்கும் வெளிப்பாடுகளிலும் அவர்களுக்கு எந்த சந்தேகமும் இருப்பதில்லை. அதன் பிறகு,

அப்படிப்பட்டவர்களுக்கு அல்லாஹ் அத்தகைய வழிகளைத் திறக்கிறான், அதனால் அவர்களும் "நன்மை செய்தல் [ஏவுதல்] தீமைகளைத் தடுப்பது" என்ற தங்களது பணியைச் செய்யும் திறனைப் பெற்றுக் கொள்வார்கள். மேலும் இந்த பணியில் அவர் தடுமாறாமல் இருந்தால், அல்லாஹ் இந்த வகையான நபரைப் பற்றி மகிழ்ச்சியடைவான். ஏனென்றால், ஒரு சிறிய தவறு (கூட) அவரது நம்பிக்கையை இழக்கச் செய்து விடும்.

ஆகவே, ஓர் உண்மையான முஃமின் உறுதியாகவும், நேர்மையாகவும் இருந்து, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து, காலம் கனியும் போது, ​​அல்லாஹ் அவருக்கு இம்மையிலும் மறுமையிலும் அவனது அருளின் கதவைத் திறந்து விடுவான்.

இன்ஷா அல்லாஹ், ஆமீன்.

Friday, June 17, 2022

முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்களின் தூதுச்செய்தி

இறை வெளிப்பாடுகள், அறிவுரைகள்
மற்றும் எச்சரிக்கைகள்:

எனது அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே! குழந்தைகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

(சாந்தி, கருணை மற்றும் இறைவனின் அருள்கள் உங்கள் மீது நிலவட்டுமாக!) அல்ஹம்துலில்லாஹ்! மார்ச் 08, 2020 அன்று லுஹர் மற்றும் அஸர் தொழுகைக்குப் பின்னர், என்னைப் படைத்த ரப்புல் ஆலமீனிடம் பல்வேறு துஆக்களை செய்த பிறகு, அல்லாஹ் (தபாரக்) எனக்கு பல இறை வெளிப்பாடுகளை வழங்கினான். இந்த வஹீகள் என்னை துன்பத்திற்குள்ளாக்கிய பல கடினமான சோதனைகளுக்கும், (அதன் காரணமாக) என்னுடைய உடல்நலம் பாதிப்படைந்ததற்குப் பிறகு வெளிப்படுத்தப்பட்டன; அவற்றை எல்லாம் நினைத்து, என் கண்களில் கண்ணீர் மல்க, நான் அல்லாஹ்வை வேண்டி அவனுடைய ஒப்பற்ற (அசாதாரணமான) உதவியை நாடினேன். பிறகு நான் ஒரு பலவீனமான நிலையில் வீழ்ந்து விட்டேன். இந்த நிலையில்தான், அல்ஹம்துலில்லாஹ் ஸும்ம அல்ஹம்துலில்லாஹ், சர்வ வல்லமை மிக்க இறைவன், ஓர் அசாதாரணமான வாசனையை வெளிப்படுத்தி அதன் மூலம் சமஸ்கிருதத்தில் வார்த்தைகளை வெளிப்படுத்தி எனக்கு உள தைரியத்தை வழங்கினான். இந்த நறுமணம் வெளிப்பட்ட பொழுது, நான் புகைப்படலத்தையும் கண்டேன். அதன் பிறகு தான், இந்த வெளிப்பாடுகள்

சமஸ்கிருதத்தில் என் மீது இறங்கியது:

"யவத் ஸ்தஸ்யந்தி ஜிராயா சரிதாஷ் சா மஹிதலே தவாத் ராவத் பகவான்கதா லோகேஷு ப்ரச்சரிஷ்யதி."

பூமியின் மீது மலைகளும் ஏரிகளும் இருக்கின்ற வரை, சர்வவல்லமையுள்ள இறைவன் இந்த உலகத்தில்அவனது ஒளியை அனுப்புவான்.

அஸதோ மா ஸத் கமாயா, தமாஸோ மா ஜ்யோதிர் கமாயா, மிரித்யர்ம அம்ரிதம் கமாயா.

உண்மையற்றவற்றிலிருந்து என்னை சத்தியத்தின் பக்கம் வழிநடத்துவாயாக! இருளில் இருந்து ஒளியின் பக்கம் வழிநடத்துவாயாக!! மரணத்திலிருந்து என்னை நித்தியதின் (முடிவில்லா வாழ்வின்) பக்கம் வழிநடத்துவாயாக!

பின்னர், அல்லாஹ் எனக்கு (இவ்வாறு) வெளிப்படுத்தினான்:

“அல்லாஹ்(அவனே எந்தத்) துணையும் இன்றி அவனது கலீஃபாவைத் தேர்வுசெய்கிறான். அது மனித கரங்களால் அல்ல. இது அல்லாஹ்வின் அருளாகும்; (அது) அதற்கு தகுதியானவருக்கு உரியதாகும். அல்லாஹ் (தபாரக்வதாலாவால்) தேர்ந்தெடுக்கபட்ட கலீஃபா உயிர் கொடுப்பவர் (ஆன்மீக) ஆவார். எனவே இதில் எந்த சந்தேகமும் எழ வாய்ப்பில்லை."

"மனிதர்களின் கைகள் செய்த செயல்களின் காரணத்தால் கடலிலும் நிலத்திலும் குழப்பம் தோன்றியுள்ளது. (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்களின் செயல்களுல் சிலவற்றை அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான். (திருக் குர்ஆன் 30:42)

"கொரோனா வைரஸ்"

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தின் போது 'மனிதகுலம் ஆபத்தில் உள்ளது.' அதனால் மனிதகுலத்தின் மீது பொதுவாக ஒரு கொடிய வைரஸ்(கிருமி) விழும் (அதாவது தாக்கும்) என்று அல்லாஹ் (சுப்ஹான) பல முறை (எனக்கு) வெளிப்படுத்தினான். 2002 முதல் 2003 ஆம் ஆண்டு வரை, மனிதகுலத்தையும் அதுவும் குறிப்பாக நம்பிக்கையாளர்களை எவர்கள் துன்புறுத்தினார்களோ அவர்களை எச்சரிக்க மீண்டும் மீண்டும் ஃகலீஃபத்துல்லாஹ்விற்கு (அதாவது இந்த எளிய அடியானுக்கு) இறைவெளிப்பாடு வந்தது. இன்று நாம் அறிந்த (இவ்)உலகம் முந்தைய நூற்றாண்டின் உலகத்திலிருந்தும் மிகவும் வேறுபட்டுள்ளது. உலகம் எல்லாத் துறைகளிலும் முறையாக வளர்ச்சி அடைந்ததுடன் இறைவனின் திருப்திக்கு வழிவகுக்கும் பாதையிலிருந்தும் மக்கள் விலகிச் சென்றுவிட்டார்கள். அவர்கள் தூய்மை மற்றும் நல்லொழுக்கத்தின் வரம்புகளை மீறிவிட்டார்கள். புனிதப்படுத்தப்பட்டுள்ள சட்டங்களை முறித்துவிட்டார்கள். மேலும், இவ்வுலக பொருட்களின் மீது இந்நாள் வரை மிகுந்த நேசத்துடனும், தற்பெருமையுடனும் சுய திருப்தியுடனும் கூடியதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவை அனைத்துமே அவனது பார்வையின் கீழ் இறைக் கட்டளைகளைப் புறக்கணிப்பதன் மூலமும், பெருங் கொடுமையான செயல்களைச் [அதாவது கடுமையான குற்றங்களைச்] செய்வதன் மூலமும், ஒரு வெளிப்படையான கிளர்ச்சி மற்றும் வெட்கமில்லாத இழிசெயல்களினால் அவனை புண்படுத்தியதன் காரணத்தினாலேயே ஆகும்.

மக்களின் பெளதீக மற்றும் மார்க்க நல்வாழ்வை நெறிப்படுத்துவதற்காக இறைவன் அனுப்புகின்ற அவனது (வழிகாட்டும்) தலைவர்களுக்குக் கீழ்ப்படியாதவர்கள் மீது இறைவனின் பழிவாங்குதல் (தகுந்த தண்டனை) விதிக்கப் படுகின்றது. இந்த மக்கள் கிளர்ச்சி செய்வதோடு கட்டளைகளையும் தகர்த்து (பயனற்றதாக்கி) விடுகின்றார்கள். அவர்கள் சட்டவிரோதம், அநீதி மற்றும் கர்வத்துடன் செயல்படுவதன் மூலம் எதிர்ப்பு மற்றும் விரோதத்தைக் கொண்டு முன்னேற்றத்தை தடுத்துவிடுகின்றார்கள். அவ்வாறு செயல்படும் போது இறைவனால் நிறுவப்பட்டுள்ள தொடர்பையும் துண்டித்து விடுகின்றார்கள். சர்வ வல்லமையுடையவனின் எல்லையற்ற ஞானத்துடன் கொண்டு வந்துள்ளவற்றை நிராகரித்துவிடுகின்றார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவனது உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தத் தெளிவானதும் அசைக்க முடியாததுமான வாதங்களுடன் தோன்றக் கூடிய இறைத்தூதரை நிராகரிப்பவர்களின் மீது இறைவனின் கோபம் விழுகிறது. அவர்கள் அவருடைய அடையாளங்களை தங்களது சொந்த குறைமதி மனப்பான்மையைக் கொண்டு மறுக்கின்றார்கள்; அவர்கள் அவரை அவமதிக்கிறார்கள்; அவரை தண்டிக்கிறார்கள்; அவரை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அவரை மார்க்கத்தின் எதிரி என்று அறிவிக்கிறார்கள். இன்னும் அவரது கொலை செய்ய கூட திட்டமிடுகிறார்கள்.

உலகின் பல பெரிய நாடுகளையும், மிக சக்திவாய்ந்த நாடுகளையும் தங்களது முழங்கால்களுக்குக் (கீழ்) கொண்டு வந்திருக்கின்ற, இறைவனின் கோபத்திற்க்கு முன் உதவியற்றதாக்கியுள்ள அத்தகையதொரு வைரஸ்(கிருமி) தான் கொரோனா வைரஸ் ஆகும். உலகில் சக்திவாய்ந்தவர்கள் என்று வாதம் செய்பவர்களே! நீங்கள் பூமியில் தெய்வங்கள் என்று கூறிக்கொள்பவர்களே! மீண்டும் சிந்தித்துக்கொள்ளுங்கள்! நீங்கள் உண்மையிலேயே சக்திவாய்ந்தவர்கள் என்றால், ஏன் இவ்வளவு பயம் (உங்களுக்கு)? பள்ளிக்கூடங்கள், கிடங்குகள், பல்பொருள் அங்காடிகள், கடைகள் மற்றும் அலுவலகங்களை ஏன் மூடுகின்றீர்கள்? உங்களையே நீங்கள் சக்தி வாய்ந்தவர்களாகவும் செல்வச் செழிப்புடையவர்களாகவும் கருதுகிறீர்கள் என்றால் ஏன் இவ்வளவு பயம்? சர்வதேச விமான நிறுவனங்களின் முன்பதிவுகள் இப்போது குறைந்துவிட்டது. ஒரு குறிப்பிட்ட பயம் நிலவுகின்றது. முன் பதிவுகள் (எல்லாம்) கீழே குறைந்து வருகின்றது. மக்கள் பயணம் செய்வதற்கு முன்பே தயங்கு கின்றார்கள். மேலும், சிலர் தங்கள் பயணங்களை தாமதப்படுத்த விரும்பு கின்றார்கள்.

பல நாடுகளில் கொரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும், சீனா, இத்தாலி இன்னும் மற்ற பல நாடுகளிலும் இறப்புகள் பதிவாகியுள்ளன. கொரோனா வைரஸ் தங்களது நாடுகளில் ஏற்படுத்திய இறப்புக்களின் எண்ணிக்கையை குறித்த உண்மையை வெளிப்படுத்தாத அரசாங் கங்களைக் கொண்ட நாடுகளும் உள்ளன. உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு நபரின், ஒவ்வொரு குடும்பத்தின் ஒவ்வொரு நாட்டின்(சிறிய,பெரிய நாடுகள், மற்றும் தீவுகளிலும் கூட அனைவரது) உள்ளத்திலும் ஒரு பயம் (உண்டாகி) உள்ளது.

பல்வேறு நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் கொரோனா வைரஸ் என்ற ஒரு கொள்ளை நோயை சர்வ வல்லமையுள்ள இறைவன் அனுப்பியுள்ளான். இந்த வைரஸ் அதனுள் எந்த வித அனுதாப உணர்வும் கருணையும் முழுமையாக இல்லாத நிலையில் வந்துள்ளது. (இது ஏனென்றால்) மக்கள் தங்கள் சக மனிதர்களின் சடலங்களை உண்ணக்கூடிய மிருகங்களாக மாறிவிட்டார்கள். மேலும் எந்த சமூக வேறுபாட்டையும் அங்கீகரிக்கவில்லை (என்பதாலும்).

எனவே, மனிதகுலம் அனைவரிடமும் நான் போகின்றேன்! கொரோனா வைரஸ் நிலை நாட்டப்பட்டுள்ளதையும், உலகம் முழுவதும் பரவி வருவதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள்! அதன் கடுமையான தாக்குதல்கள் நிச்சயமாக உங்கள் அன்புக்குரியவர்களையும் விடவில்லை. மேலும், அவை உங்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும், நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்த சோதனையை உங்கள் மீது சுமத்தியிருப்பதன் மூலம் கருணையாளாளனும், ஞானம் மிக்கவனுமாகிய இறைவன், உங்களை கடும் சோதனைக்கு உட்படுத்தி கோபத்துடனும் பழிவாங்குதலுடனும் உங்களை சந்தித்துள்ளான்.

ஒரு இறைத்தூதரின் (வாழ்)நாட்களில் கொடிய தொற்றுநோய் தூய குர்ஆனிலும் (27:83) அதே போன்று பைபிளிலும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்! எடுத்துக்காட்டாக ஜகரியா (14:12), மத்தேயு (24:7). இந்த முன்னறிவிப்புகளின் உண்மைத் தன்மையை எவராலும் மறுத்துரைக்க முடியாது; அதிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள எந்தவொரு உலகியல் வழிமுறைகளின் உதவியையும் நாடாமலிருப்பது எனக்கும், அதே போன்று எனது உண்மையான ஸஹாபிகளுக்கும் கடமையாகும்.

கொரோனா வைரஸ் அல்லது வேறு ஏதேனும் நோய் ஏற்பட்டால்,(அதற்கு) மருந்து அல்லது தடுப்பு முறைகளைப் பயன்படுத்துவது சட்ட விரோதமானது என்று நான் அறிவிக்கவில்லை. இறைவனால் பரிகாரம் வழங்கப்படாத எந்த நோயும் இல்லை என்றே இஸ்லாத்தின் பரிசுத்த தூதர் எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால், இறைவன் எனக்கும் எனது உண்மையான சஹாபாக்களுக்கும் கொடுத்திருக்கும் இந்த வானத்தின் அடையாளத்தை தடுப்பூசி மூலம் மறைப்பதை நான் பாவமாக கருதுகிறேன். இதன் மூலம் என்னை உண்மையாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு அவனால் தேர்ந்தெடுத்தற்குரிய தயவை (உதவியைக்) காட்ட அவன் விரும்புகின்றான். எனவே தடுப்பூசிக்கு அடிபணிவதன் மூலம் இறை கருணையின் இந்த அடையாளத்தை அவமதிக்கவும், இழிவுபடுத்தவும் என்னால் முடியாது. மேலும், அதனால் இறைவனின் வாக்குறுதியில் நம்பிக்கையற்ற குற்றவாளியாக இருப்பீர்கள்.

பொதுவாகவே இந்த கொள்ளை நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் கொள்கை என்பதை நான் அறிவேன். அதன் காரணமாக, தடுப்பூசியைக் காட்டிலும் சிறந்த தீர்வை அவர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள். இதைக் கருத்தில் கொண்டால், எனது (இந்த) முடிவானது அரசாங்க நடவடிக்கைக்கு முரண்பட்டதல்ல (என்பதைப் புரிந்துகொள்ள முடியும்). எனது சமதாயத்தைச் சார்ந்த மக்கள், இறை வெளிப்பாடுகளின் மீது உளப்பூர்வமான நம்பிக்கை வைத்திருப்பவர்கள், இந்நூற்றாண்டின் இறை அடியானாகிய இந்த எளியவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட (இந்த) அடியானுக்கு எதிராக வெளியில் பேசாதவர்கள், எனக்கு எதிராக சண்டையிடாமல் எனக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பவர்களாகிய இவர்களனைவரும், அவர்களது எண்ணிக்கை எவ்வளவு இருப்பினும் அவர்கள் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள் என எல்லாம் வல்ல இறைவன் இறைவெளிப்பாட்டின் மூலம் எனக்கு அறிவித்துள்ளான். இன்ஷாஅல்லாஹ் இறைவனின் உதவியுடன் எனது உண்மையான அடியார்கள் இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக பாதுகாக்கப்படுவார்கள்.

நான் சொல்வதை கேட்டு சிலர் ஏளனமாக சிரித்தாலோ, இன்னும் பிறர் என்னை பைத்தியம் என்று அழைத்தாலோ, என்னை ஏளனம் செய்தாலோ அந்நபரை அவன் தண்டிப்பான் என்றும், ஏற்கனவே எழுச்சியடைந்துள்ள அவனது கோபம் அவரை அழித்துவிடும் என்றும் அல்லாஹ்(ஸுபஹ்) எனக்கு வெளிப்படுத் தியுள்ளான். பல உயிர்கள் அழிக்கப்படும். ஆனால், அவன் என்னிடத்தில் கூறினான்;

“என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியானே! உம்மை உண்மையாக ஏற்றுக் கொண்டவர்களுக்காக, உமது இதயத்தை வருத்திக் கொள்ளாதீர்!அவர்கள் காப்பாற்றப்படுவார்கள்! அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்! குற்ற வாளிகள் பாதுகாப்பாக உள்ளனர் என்று எண்ணிவிட வேண்டாம் [இறைவனின் ஏகத்துவத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக நம்பிக்கை யாளர்களை துன்புறுத்திய குற்றவாளிகள்]. நாம் அவர்களின் வீடுகளை நெருங்கி வருகிறோம். கொரோனா வைரஸின் நுண்ணுயிர் கொல்லியைப் பன்மடங்காக்கி எனது படைகளைத் தயார் செய்கிறேன். "மக்கள் இறந்து போன விலங்குகளைப் போல் தங்களது வீடுகளில் உயிரற்றவர்களாகக் காணப்படுவார்கள். அது இறைவனின் வெற்றிக்குரிய நாளாக இருக்கும்”.

அல்லாஹ்(ஸுபுஹ்) தொடர்ந்து கூறினான் நானே இந்த நூற்றாண்டின் தொடக்கம் முதல் [2001 ஆம் ஆண்டு முதல்] உம்முடைய சோதனைகளை அப்புறப்படுத்தியக் கருணையாளனாவேன், நிச்சயமாக நானே உம்மை ஃகலீஃபதுல்லாஹ்வாக, முஹைய்யுத்தீனாக உயர்த்தினேன். நிச்சயமாக, எனது தூதர்கள் என் இருப்பைக் கண்டு அஞ்ச மாட்டார்கள். நானே உமதுப் பாதுகாவலனாவேன்; மேலும் நானே உமக்கு ஆதரவும் வழங்குவேன். நானே உம்மை அனுப்பினேன், நீர் எனது உண்மையை உலகிற்கு நிரூபித்தீர். உலகம் உம்மைப் புகழ்ந்து போற்றும் அளவிற்கு, நான் உம்மை ஒரு மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தும் நேரம் வரும். உமது கண்ணீரை சிந்த வேண்டாம், ஏனென்றால் இந்த கண்ணீர் உமது எதிரிகளை மூழ்கடிக்கும் வெள்ளமாக மாறிவிடும். உமக்கு சிரமங்களை கொடுத்தவர்கள் [அதாவது: உமக்கு சீர்குலைவை ஏற்படுத்தியவர்களையும்] உமது முடிவை காண விரும்பிய நபர்கள், இந்த மக்களை நான் கவனித்துக் கொள்வேன். உமது நம்பிக்கையை என்னிடத்தில் மட்டுமே வைப்பீராக! உலக சோதனைகள் தொடரும், ஆனால் மறந்துவிடாதீர்! மேலும் உறுதிப்படுத்திக் கொள்வீராக எனது கலீஃபதுல்லாஹ்வே! அது (என்னவென்றால்)வெற்றி உம்மிடமும், தோல்வி உமது எதிரிகளிடமுமே உள்ளது! இந்த நாளின் வெளிப்பாட்டிற்காக பொறுமையுடன் காத்திருப்பீராக! இது உம்மைப் படைத்தவனிடமிருந்துள்ள (இறை) வெளிப்பாடாகும்”.

மனிதகுலமே! மக்கள் இறைவனின் தூதரை (அவனுடைய ஃகலீஃபத்துல்லாஹ்வை) ஏற்றுக் கொண்டால் அல்லது அவர்கள் அவருக்கு எந்தத் தீங்கும் செய்யாமலிருந்தால், அவர்களுக்கு ஆன்மீக அருள் வழங்கப்படும் என்று சர்வவல்லமையுள்ள இறைவன் எனக்கு வெளிப்படுத்தியுள்ளான். உண்மை என்னவென்றால் இறைவனால் அனுப்ப்பட்ட நபியை நிராகரிப்பதால் இப்பூமியில் கடுமையான தண்டணை ஏற்பட்டுவிடாது. மறுபுறம், வரம்பு மீறுதல்கள், பழிச்சொற்கள் மற்றும் துன்புறுத்தல்கள் போன்றவை இந்த பூமியை மரணத்தைக் கொண்டும் அழிவைக் கொண்டும் தண்டித்துவிடுகின்றன. எல்லா தீய செயல்களுக்காகவும் மக்கள் இப்போது மனந்திரும்பினால், இறைவன் இந்த கொடிய தொற்று நோயான: கொரோனா வைரஸை அகற்றிவிடுவான்.

ஆகவே, இறைவனின் எல்லையற்ற கருணையின் மூலம் அவன் நம்மையும் நமது நண்பர்களையும் இந்த கொடிய தீங்கிலிருந்து பாதுகாக்கும்படி நாம் துஆ செய்ய வேண்டும். ஆனால் ஞானமுள்ளவர்களாலும் தொலை நோக்குடையவர்களாலும் மட்டுமே (இதனைப்) புரிந்து கொள்ள முடியும். எனவே இறைவனுக்குப் பயந்து, சீர்குலைவையும், அழிவையும் கொண்டுவருகின்ற செயல்களிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள், இதனால் நீங்கள் காப்பாற்றப்படுவீர்கள். எனது பணியில் அலட்சியமாக இருந்ததாக நான் குற்றஞ்சாட்டப்படாமல் இருக்க அதனை மீண்டும் உங்களிடம் கூறுவது எனது கடமையாகும்.

தன்னலமற்ற தன்மை, பிரார்த்தனை மற்றும் தானதர்மத்துடன் இந்த தீமையிலிருந்து ஈடேற்றத்தைத் தேடுங்கள். இறைவன் உங்கள் குறைகளை மன்னித்து உங்களை (தீங்கிலிருந்தும்)விடுவிப்பான். உங்கள் குறைபாடு களிலிருந்தும் விடுபட்டு,நீங்கள் பிறகு ஆன்மீக அருளுக்கும் சாட்சியமளிப்பீர்கள். இறை வார்த்தையின் தூண்டுதல்களால் நான் உங்களிடம் பேசியிருக்கின்றேன், எனது வார்த்தைகளின் உண்மைக்கு நீங்கள் விரைவிலேயே சான்றளிப்பீர்கள்.

நான் உங்களிடம் கூறியதுபோல், இறைவெளிப்பாட்டின் ஆரம்ப(கால)த்தில், கொடிய தொற்று நோய் குறித்து அல்லாஹ்(ஸுப்ஹ) மீண்டும் மீண்டும் எனக்கு வெளிப்படுத்தினான். ஆனால், முகந்திருப்பி இந்த வெளிப்பாடுகளின் உண்மைத்தன்மையை அங்கீகரிக்காதவர்களுக்கு அந்தோ பரிதாபமே! இந்த இறை வார்த்தைகளை பழைய கட்டுக்கதைகளாக ஆக்கியவர்கள் மீதும் பரிதாபமே!! அல்ஹம்துலில்லாஹ், "நான் இந்தியாவுக்கான பயணத்தின் போது, இன்னும் துல்லியமாக கூறுவதென்றால், கேரளாவின் நூருல் இஸ்லாம் பள்ளி வாசலில் வைத்து, ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கும் முன்பாக, அல்லாஹ்(ஸுபஹ்) மற்ற சில விஷயங்களுடன் இவ்வுலகை அழிக்கும் பேரழிவுகள் பற்றி மாண்டரின் மொழியில் எனக்கு வெளிப்படுத்தினான்."

"இறைவன் நமக்காக கட்டளையிட்டதைத் தவிர வேறு எதுவும் நமக்கு நடந்து விடமுடியாது." அவனே நம்முடைய அரசனும் நமது பாதுகாவலனும் ஆவான். இறைவன் மட்டுமே நமது நம்பிக்கைக்கு தகுதியானவனாவான். எனவே ஒரே இறைவனும், தனித்துவமான இறைவனுமாகிய அந்த இறைவன் மீதே உங்களது நம்பிக்கையை வைத்துவிடுங்கள். இறைவன் நாடினால், நீங்கள் உங்களை அவனுக்கு அர்ப்பணித்துவிட்டால், அனைத்துமே செயல்பட தொடங்கிவிடும். ஆகவே, “ஃபஸ்பிர் ஸப்ரன் ஜமீலா.”–அழகியப் பொறுமையை மேற்கொள்ளுங்கள். இன்ஷா- அல்லாஹ்.

அல்ஹம்துலில்லாஹ், நமது ஜமாத் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு பன்னிரண்டு ஆண்டுகள் ஆகின்றன (10 மார்ச் 2008-2020), நாளை மொரீஷியஸ் தனது 52 வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கின்றது(மேலும் 28 ஆண்டுகால குடியரசு). நாம் ஒவ்வொருவரும் அவரவர் தாய்நாட்டிற்காக துஆ செய்வோம், மேலும் அல்லாஹ் தனது அடையாளங்களின் உண்மை மற்றும் அவனது ஏகத்துவத்தின் பக்கம் மக்களின் உள்ளங்களைத் திறப்பானாக! மேலும் அவன் எப்போதும் தனது நிழலின் கீழ் நம்மைப் பாதுகாப்பானாக! ஆமீன்! ஸும்ம ஆமீன்!

கவனித்து கேட்டமைக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி! அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹு.

யார் மார்க்க சீர்திருத்தவாதி!

வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மஸீஹ்
(அலை) அவர்கள் கூறினார்கள்:

இந்நிலையில் உங்களுக்கு நான் கூறுவேன், உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்! மார்க்க சம்பந்தமான காரியங்களைச் சீர்படுத்தி விருத்தி செய்வதற்காக ஒருவர் உங்களிடம் வந்துவிட்டார். ஆனால் நீங்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இதோ உங்கள் முன்னால் உங்களோடு பேசிக் கொண்டிருப்பவர் அவரே உங்களுடைய கண்கள் கனத்த திரையினால் மூடப்பட்டுள்ளன. உங்கள் உள்ளங்கள் உண்மையைத் தேடுகிறதென்றால் "இறைவனோடு உரையாடுவதாக வாதம் புரியும் ஒருவரைச் சோதிப்பது மிகவும் எளிதாகும்."அவரிடம் வாருங்கள், அவருடன் இரண்டு மூன்று வாரங்கள் வாழ்ந்து பாருங்கள். இறைவன் நாடினால் அவர் மீது பொழிந்து கொண்டிருக்கும் இறையருள்களின் மழையையும், அவர் மீது இறங்கிக் கொண்டிருக்கும் உண்மையான இறைவெளிப்பாட்டின் ஒளிகளையும் நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டு கொள்வீர்கள். தேடுகிறவன் கண்டு கொள்வான். தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படும். மூடப்பட்ட ஓர் இருண்ட அறையினுள் ஒளிந்து கொண்டு சூரியன் எங்கிருக்கிறது என்று குற்றம் சாட்டினால் அது வீணானது. முழுக்க முழுக்க நீயே வீணாக்கிய காரியமாகும். முட்டாளே உனது கண்களை மறைக்கும் திரையை அகற்று. அப்போது நீ சூரியனைக் காண்பது மட்டுமல்லாமல் அதனால் ஒளியூட்டவும் பெறுவாய். (இஸ்லாத்தின் வெற்றி பக்கம் 66, 67)

காலத்தின் இமாமின் அறிவுரை!

எனது அன்பிற்குரிய ஸஹாபிகளே,
முஸ்லீம் பெருமக்களே, மற்றும் ஒட்டு மொத்த மனித சமுதாயமே மிகவும் பணிவுடனும், அமைதியுடனும் இஸ்லாத்தில் நுழையுங்கள். உங்கள் செயல்களால் இந்த அழகிய மார்க்கத்தின் மாண்பை இழக்கச் செய்து விடாதீர்கள். மேலும் உங்கள் செயல்களை உங்கள் உள்ளத்தின் இறையச்சத்துடன் செய்யுங்கள். இவ்வாறு இறையச்சம் எனும் தக்வாவுடன் செய்யும் போது தீமைக் கலவாத நன்மையானச் செயல்களைச் செய்யும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்கின்றது.

இஸ்லாம் ஒரு பரிபூரண மற்றும் சிறந்த வாழ்வியல் தத்துவமாகும். இந்த மார்க்கம் நம்மை சீர்ப்படுத்துவதுடன், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் இறைவன் என்ன நாடுகிறானோ அதைநோக்கி வழி நடத்துகிறது. ஏனென்றால் இந்த மார்க்கத்தில் இறைவனுடையக் கட்டளைகளுக்கு முற்றிலும் கட்டுப்படுவதன் மூலம், நமது வாழ்வை அர்ப்பணித்து இந்த மார்க்கத்தை உலகத்தில் மிளிரச் செய்கின்றோம். மேலும் இறைவனுடன் வேறு எதையும் இணைவைக்காதீர்கள். அல்லாஹ் ஒருவனே உண்மையான இறைவனாவான். இஸ்லாம் என்னும் மார்க்கத்தின் பாதையில் ஞானம், கருணை மற்றும் இறையச்சத்துடன் பயணம் செய்யுங்கள். மேலும் இறையச்சம் மற்றும் அவனது அன்பின் மூலம் அவனது பாதுகாப்பு என்னும் கதவைத் திறந்து உங்கள் வாழ்வின் அனைத்து ஷைத்தானிய ஈர்ப்பிலிருந்தும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இன்னும் இஸ்லாத்தை உங்களிடம் ஆணித்தரமாக வேரூன்றச் செய்து பிறருக்கு முன், அழகிய முன்னுதாரணத்தை வெளிப்படுத்துங்கள். இதற்காக உங்களின் நப்ஸுடனும் சண்டையிடுங்கள். மேலும் நீங்கள் இறைவனுக்காவும் அவனதுத் திருப்தியை நாடி சண்டையிடுங்கள். இன்னும் எப்போதும் இறைவனையே முதன்மைப் படுத்துங்கள். இதன் மூலம் பெயரளவில் முஸ்லிம்களாக இருக்காமல் உண்மையான முஸ்லீம்களாகி விடுங்கள். அப்போது மற்றவர்கள் மிகுந்த மதிப்பையும், போற்றுதலையும் உங்கள் மீதுக் கொள்வார்கள். ஏனென்றால் நீங்கள் உண்மையான முஸ்லீம்களாக ஆகும் போது அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் உங்கள் மீதுத் திருப்திக் கொள்கின்றான். இன்னும் இறைவன் உங்களை நேசித்தால் அவன் உங்களுக்காக அவனது எல்லையற்றக் கருணையை உங்கள்மீது இறக்கி, உங்களுக்காக அவனது சொர்க்கத்தின் வாசலைத் திறப்பான். ஏனென்றால் நமது இறைவனின் உன்னதமானக் கருணை எல்லையற்றதாகும்.

எனவே, எனது அன்பிற்குரியவர்களே... நீங்கள் அனைவரும் உண்மையான முஸ்லீம் ஆகிவிடுங்கள். இன்னும் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கேட்டு அதை நடைமுறைப் படுத்துங்கள். ஒருபோதும் சாத்தானின் பித்ததுகளிலும், இணைவைப்பதிலும் வீழ்ந்து ஷிர்க்கிற்கு அடிமையாகி விடாதீர்கள். இன்னும் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கேட்டு அதை நடைமுறைப் படுத்துங்கள். மேலும் உங்களின் ரூஹுவை அல்லாஹ்விற்கு எதிரானப் பொய்யிலிருந்துப் பாதுகாத்து அவனது உண்மையின் பக்கம் அழைத்துச்செல்லுங்கள்.

வாருங்கள் இறைவனின் பேரருளின் பக்கம். மேலும் ஷைத்தானின் பக்கம் சாய்வதிலிருந்து விலகுவதன் மூலம் உண்மையான இரட்சிப்பை அடையுங்கள் இன்ஷாஅல்லாஹ்.. மேலும் அல்லாஹ் உங்களதுத் தேடலைப் பூர்த்திச்செய்து, அவனதுத் திருப்தியையும் உண்மையானத் தவ்ஹீதையும் உணர அருள்புரிவானாக! இதன் மூலம் உங்களின் ஒவ்வொரு நாளும் முழுமையான இஸ்லாத்தில் வாழச் செய்வானாக! இன்ஷாஅல்லாஹ் ஆமீன்.

ஜுமுஆ பேரூரை 20.05.2022 - ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள்

சாதாரண மனிதர்களுக்கு கிடைக்கும் இறை அருளின் நோக்கம்!

ஹஸ்ரத் முஹையுதீன்

அல் 
கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) போதிக்கின்றார்கள். 

அல்லாஹ் தனதுத் தூதருடைய உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்காக, இறை வெளிப்பாட்டைத் தாராளமாக ஒரு சத்தியத்தைத் தேடுபவருக்கு கிடைக்கச் செய்கின்றான். அத்துடன், அவரை "பரிசுத்த ஆவியுடனும் பேச வைக்கின்றான்". இவ்வாறு பரிசுத்த ஆவியை அவர் அடைவதன் மூலம்,
அவருக்கு அல்லாஹ்வின் மீதும், அவன் அனுப்பிய தூதரின் மீதும் நம்பிக்கை ஏற்பட்டு, அந்நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதற்க்கும் அதுக் காரணமாக அமைகின்றது. எனினும் இத்தகைய அருட்கொடையைப் பெற்றவர்கள், அல்லாஹ்வுடைய தூதரின் மீது பொழியப்படும் இவ்வாறான இறை வெளிப்பாடுகளுக்கு சாட்சியாகவும் இருக்கின்றார்கள். அத்துடன், அல்லாஹ்வுடைய தூதருடைய உண்மைத்துவத்தையும், இறை வெளிப்பாடுகளையும் உறுதிப்படுத்தும் வகையில் தாங்களே அவ்விறை வெளிப்பாடுகளைப் பெறக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். அவ்வாறு இருந்தபோதிலும், சிலரோ இவ்வாறு பெறப்படும் அவ்விறை வெளிப்பாடுகள் அனைத்தையும் தங்கள் உள்ளத்தில் ஏற்பட்டுள்ள வெறும் மாயை என்பதாகக் கருதி, அவை அனைத்திலிருந்தும் தங்களுடைய முகங்களை அவர்கள் திருப்பிக் கொள்கின்றார்கள். இதுவொரு மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். இவ்வாறான மக்களே மக்களில் மிகவும் துரதிர்ஷ்டமானவர் ஆவார்கள். ஏனெனில், அவர்கள் சத்தியத்தை உணர்ந்துக் கொண்டதன் பிறகும், அச்சத்தியத்தை அசத்தியம் என்றும் மாயை என்றும் கூறுகின்றார்கள். இதனையே, இறை சத்தியத்திலிருந்து தங்கள் முதுகுகளை திருப்புவதற்கு ஒரு சாக்காகவும் கூறுகின்றார்கள்.

Wednesday, June 15, 2022

அஹ்மதி சகோதரர்களின் கவனத்திற்கு!

கொரோனா என்னும் கொடிய உயிர் கொல்லி நோய் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்து வருகிறது.

இந்த நோயை கட்டுபடுத்துவது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்று உலக வல்லரசு நாடுகளே கூறும் அளவுக்கு இந்த நோயின் கோரதாண்டவம் உள்ளது.

அஹ்மதி சகோதர்கள் இது இறை தண்டனையாகவே கருதி வந்த நிலையில், அஹமதியா ஜமாத்தின் தலைவரான மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் சாஹிப் அவர்கள் இது தொடர்பாக கூறும்போது

"இது இறை தண்டனையாக கருத முடியாது" என்றும் "இது இறை தண்டனை என்று நான் அறிவிக்கவில்லை" என்கிறார்.

அஹ்மதி சகோதரர்களே!, உங்களிடம் பணிவோடு சில கேள்விகள் கேட்கிறோம்!

மஸ்ரூர் ஸாஹிப் 2003 கலீஃபாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்போது 2020, இந்த இடைபட்ட காலகட்டத்தில் இவர் எத்தனை இறை தண்டனைகளை அறிவிப்பு செய்துள்ளார்?

இறை தண்டனையை அறிவிப்பு செய்யவேண்டும் என்றால், இறைவன் புறமிருந்து வஹி அதாவது இறை அறிவிப்பை பெறுபவர் மட்டுமே இதை செய்ய முடியும் அல்லவா?

இது வரை அவர் தனக்கு இறைவன் புறமிருந்து இறை வெளிப்பாடு ஏதும் வந்ததாகவோ, தான் கஷ்ஃபு காட்சி ஏதும் கண்டதாகவோ, கூறவில்லையே?

அப்படி என்றால் இவர் எப்படி இறை தண்டனையை அறிவிப்பு செய்ய முடியும்?

அஹ்மதி சகோதர்களே! இப்போது நீங்கள் சிந்திக்க கடமை பட்டுள்ளீர்கள். எந்த மதத்தில் இறை "வெளிப்பாடு இல்லையோ அந்த மதம் மரணித்துவிட்டதாக" ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றை நீங்கள் படித்திருப்பீர்கள். அப்படி என்றால் தற்போதைய அஹ்மதிய்யா ஜமாத்தின் நிலை என்ன?

காலத்தின் இமாம் என்பவர், இல்ஹாம்கள் மற்றும் ஆன்மீக காட்சிகள் மூலமாக மக்களை வழி நடத்துவார், என்று மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றிற்கிணங்க, இந்நூற்றாண்டின் இமாமும், கலீஃபத்துல்லாஹ்வும் ஆகிய ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்கள், கொரோனா சம்பந்தப்பட்ட இறை அறிவிப்பை பெற்று, அது இறை தண்டனை என்று அறிவித்துள்ளார்கள். அதை கீழே தருகிறோம்.

எனவே அஹ்மதி சகோதரர்களே! கிளையை பிடிக்காமல் வேரை பிடிப்பதே புத்திசாலித்தனம் என்று மஸீஹ்(அலை) அவர்கள் கூறியதை நினைவில் கொண்டு, மனிதனால் தேர்ந்தெடுக்கபட்ட தலைவர்களுக்கு பின்னால் செல்லாமல் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கபட்ட அல்லாஹ்வின் கலீபாவை ஏற்று கொண்டு, இந்த இறை தண்டனையான கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோயில் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் தற்காத்து கொள்ளுங்கள். இப்போது அன்னார் கூறுவதை கவனியுங்கள்

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையூதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

அல்ஹம்துலில்லாஹ்... இந்த நூற்றாண்டின் இறைவெளிப்பாட்டில் நம்பிக்கை கொண்ட எனது அன்பிற்குரிய ஸஹாபிகள் அனைவரும் ஒப்பீட்டு அளவில் இந்த வைரஸில் இருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்!

இதைக் கருத்தில் கொண்டால், எனது இந்த முடிவானது அரசாங்க நடவடிக்கைக்கு முரண்பட்டதல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

எனது சமுதாயத்தைச் சார்ந்த மக்கள், இறை வெளிப்பாடுகளின் மீது "உளப்பூர்வமான நம்பிக்கை வைத்திருப்பவர்கள்," இந்நூற்றாண்டின் இறைவனால் தேர்தெடுக்கபட்ட இந்த எளியவன் மீது உண்மையான நம்பிக்கை வைத்திருப்பவர்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அடியானுக்கு எதிராக 'நயவஞ்சகம்' செய்யாதவர்கள், எனக்கு எதிராக கிளர்ச்சி செய்யாமல், எனக்கு முழுமையாக கட்டுப்பட்டு நடப்பவர்களாகிய, எனது அன்புக்குரியவர்கள், கொரோனா வைரஸிலிருந்து ஒப்பீட்டு அளவில் பாதுகாப்பாக இருப்பார்கள்! என எல்லாம் வல்ல இறைவன் இறை வெளிப்பாட்டின் மூலம் எனக்கு அறிவித்துள்ளான். இன்ஷாஅல்லாஹ்.

இறைவனின் உதவியுடன் எனது உண்மையான அடியார்கள் ஒப்பீட்டு அளவில் இந்த கொரோனா வைரஸுக்கு எதிராக மேலும் பாதுகாக்கப் படுவார்கள்.

நான் சொல்வதை கேட்டு சிலர் ஏளனமாக சிரித்தாலோ, இன்னும் பிறர் என்னை பைத்தியம் என்று அழைத்தாலோ, என்னை ஏளனம் செய்ய முயற்சிக்கும் நபரை அவன் தண்டிப்பான் என்றும், ஏற்கனவே எழுச்சியடைந்துள்ள அவனது கோபம் அவரை அழித்துவிடும் என்றும் அல்லாஹ் (ஸுபுஹ்) எனக்கு வெளிப்படுத்தியுள்ளான். பல உயிர்கள் அழிக்கப்படும். ஆனால், அவன் என்னிடத்தில் கூறினான்,

"என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியானே! உம்மை உண்மையாக ஏற்றுக் கொண்டவர்களுக்காக, உங்கள் இருதயத்தை வருத்திக் கொள்ளாதீர்! அவர்கள் ஒப்பீட்டு அளவில் காப்பாற்றப்படுவார்கள். அவர்கள் நிம்மதியாக வாழ்வார்கள்"

அல்ஹம்துலில்லாஹ்

திருகுரானின் அடிப்படையில் நபி வாதம்!

சூரத்துல் ஃபாத்திஹா 6 மற்றும் 7 வது வசனங்களின் விளக்கவுரை:-

“இஹ்தினஸ்ஸிராத்தல் முஸ்தகீம்; ஸிராத்தல்லதீன அன்அம்த அலைஹிம்.” (நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டுவாயாக! அந்த வழி நம்மை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முற்றிலும் கீழ்படியும் இஸ்லாத்தின் வழியில் அந்த வழி ஈமானின் வழி, அந்த வழி அவனை காணமுடியாவிட்டாலும் அவன் நம்மை பார்க்கின்றான் என்பதை உணர்ந்து அவனை காண்பதைப் போன்று அந்த ஏக இறைவனை வணங்கும் அந்த “இஹ்சானின்” வழியில், அந்த வழி தக்குவாவின் வழி, மேலும் இதன்முலம் அல்லாஹ் நமக்கு என்ன கட்டளையிட்டுள்ளானோ அதை நிறைவேற்ற நாம் போராடும் அதே வேளையில் அவன் நமக்கு எதை விட்டும் விலக்குகிறானோ, அதைவிட்டு நமது மனம் ,கண்கள், காதுகள், வாய், கால்ககள், கைகள் மற்றும் நமது உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நாம் பாதுகாக்கின்றோம்.

அந்த ஏக இறைவன் நமக்கு இவ்வாறு கற்றுக்கொடுக்கின்றான். அதாவது, நாம் அவனிடம் எங்களை நேரான வழியில் அதாவது இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைந்தவர்களின் வழியில் நம்மையும் நடத்த அவனிடம் வேண்டுமாறு கூறுகின்றான். இவ்வாறு அவன் கற்றுக் கொடுத்ததை நாம் வேண்டும்போது அதை ஏற்றுக்கொண்டு அவனது மாபெரும் அருளால் அவனிடமிருந்து அவனின் மாபெரும் கருணையால் ஒருவருக்கு மறைவான ஞானத்தை கற்றுக்கொடுத்து நம்மை நேரான வழியில் செல்ல வழிகாட்டினால் அவரை நாம் நபி என்று அழைக்காமல் வேறு என்னவென்று அழைக்க முடியும்?

ஒருவேளை அவரை நான் “முஹத்தத்” என்று அழைத்தால் “முஹத்தத்” என்ற சொல்லிற்கு அகராதியில் “தஹ்ஃதீத்” என்று வருகின்றது, மேலும், இதுவே முஹத்தத்தின் மூலச்சொல்லாகவும் உள்ளது. எனவே இதிலிருந்தும் நாம் அறியவேண்டியது “தஹ்ஃதீத்” என்பதற்கு என்ன பொருள் என்று நாம் பார்த்தோமேயானால், மறைவான ஞானத்தை பெறுவது என்ற அர்த்தத்தில் வருவதில்லை என்பதாகும். மாறாக, நுபுவ்வத் என்ற வார்த்தையே இதற்கான பொருள்படும். மேலும், “நபி” என்ற வார்த்தை அரபியிலும் ஹீப்ருவிலும் பொதுவாக “நபஆ” என்ற வார்த்தையிலிருந்து உருவாகியுள்ளது. இதன் அர்த்தம் இறை வெளிப்பாடுகள் மூலம் தீர்க்கதரிசனம் செய்யும் ஆற்றலை பெறுவது என்பதாகும், இறைவனின் தூதர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் அவனிடமிருந்து ஒரு புதிய ஷரீயத்தை பெறுபவர்கள் மட்டும் தான் என்பதில்லை., மாறாக இறைவனிடமிருந்து மறைவானவற்றின் ஞானம் என்ற அறிவை பெரும் ஒருவரும் “தூதர்” என்றே அழைக்கப்படுகின்றார்கள். நீங்கள் ஒவ்வொரு வரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அந்த ஏக இறைவன் நிச்சயமாக நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களுக்கும் முன் தோன்றிய நபிமார்களுக்கும், சித்தீக்குகளுக்கும் (நபிமார்களுக்கு சேவைவை செய்வதில் எல்லையற்ற அர்ப்பணிப்புடன் செய்த அந்த அடியார்கள் குறிப்பாக நபி ஸல் அவர்களுக்கு அபூபக்கர் (ரலி) அவர்களை போல்) வழங்கிய அனைத்து அருள்களையும் வழங்கியிருக்கின்றான். இந்த அருட்கொடையில் தீர்க்கதரிசனம், மறைவானவற்றின் ஞானம் ஆகியவைகளும் அடங்கும் இன்னும் இந்த அருளே மற்றவர்களிடமிருந்து நபிமார்களையும் (அந்த பதவியின் உயர்நிலை) வேறுபடுத்தி காட்டுகின்றது. நபிமார்களையும் ரசூல்மார்களையும் தவிர வேறு எவருக்கும் அல்லாஹ் தனது மறைவான ஞானம் என்ற அருட்கொடையை வழங்குவதில்லை என்பதை திருமறை வசனங்களும் நமக்கு தெளிவு படுத்துகின்றது.

இது தொடர்பாக அல்லாஹ் திருகுரானில் கூறும்போது;

"அவன் மறைவானதை அறிபவனாவான். மேலும் அவன் தனது மறைவான ஞானத்தை எவருக்கும் வெளிப்படுத்துவதில்லை. அவன் தேர்ந்தெடுத்த தூதரைத் தவிர. (Al-Jinn 72 : 27-28)

எனவே மிக தெளிவாக இதை போன்ற ஞானத்தை பெறுபவர் ஒரு தூதராக இருப்பது அவசியமாகின்றது. நாம் இப்போது பார்க்கவிருக்கும் சூரத்துல் ஃபாத்திஹாவின் வசனமும் இதை உறுதிசெய்கின்றது.

ஸிராத்தல்ல தீன அன் அம்த அலைஹிம் கய்ரில் மக்ளுபி அலைஹிம் வலல்லாழ்ழீன்

பொருள்:- நீ அருள் புரிந்தவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக (அருள்புரிந்த நபி மற்றும் ரசூல்மார்களின் வழியில்) உன் கோபத்திற்கு ஆளானவர்கள், வழிதவறியவர்கள் ஆகியோரின் வழியில் அல்லாமல் (நபி மற்றும் ரசூல்மார்கள் தோன்றும்போது அந்த அருளின் பக்கம். தங்களது முகத்தை திருப்பிக் கொண்டவர்கள்)

எனவே இந்த வசனத்தின் அர்த்தத்தை பின்வருமாறு அறியலாம். ”நீ எங்களுக்கு மற்றவர்களுக்கு செய்த அருளைப்போல எங்களுக்கும் வழங்குவாயாக……” எனவே இது உண்மையாகவே மிக சிறந்த சான்று பகிர்கின்றது நபிகள் நாயகம் எம்பெருமானார்(ஸல்) அவர்களை பின்பற்றுபவர்களுக்கு இந்த ஞானத்தின் அருள் ஒருபோதும் மறுக்கப்படாது. மேலும், இந்த ஞானத்தின் மூலம் நபி மற்றும் ரசூல் என்ற நிலையை பெரும் ஒருவர் அந்த நிலையை பெற அவர் அன்னாரின் ஆன்மிக வழிகாட்டல்களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டவராக இருக்க வேண்டும். எனவே, நாம் ஒரு தெளிவான மறுக்க முடியாத முடிவுக்கு வரவேண்டும் அதாவது இந்த மேலான அருளை பெற ஒருவர் அன்னாரின் இரட்டையர்களாக அன்னாரின் நிழலாக அன்னாருடன் முற்றிலும் மூழ்கிப்போகும் நிலையை அடைய வேண்டும் என்பதாகும்.

மேலும், அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் அவனது வஹீயின் மூலம் என்னை ஒரு ஜமாஅத்துடன் எழுப்பி நபி என்றும் ரசூல் என்றும் அழைக்கும்போது நான் எவ்வாறு மறுக்க முடியும்?, இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த பதவிகளை அல்லாஹு சுபஹானஹுதாலாவே என்னை தேர்வு செய்து நியமித்துள்ளான். அவ்வாறிருக்க இத்தகைய மேலான அருளை மறுப்பதற்கு நான் யார்? படைத்த இறைவனுக்கு எதிரில் நான் யாரை பார்த்து அஞ்சவேண்டும்?

நான் என்னை நபி என்று மறுப்பது, நான் ஒரு புதிய ஷரீயத்தை கொண்டுவர கூடியவனாகவும் ஒரு சுதந்தரமான நபியாக வரவில்லை என்ற பொருளிலேயேயாகும். ஆனால் மிகவும் மகிமை பெற்ற கண்ணியமிக்க என் எஜமானராகிய ஹஸ்ரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி அவர்களின் ஆன்மீக அருட்கொடைகளால் நான் இந்த பலனை அடைந்தேன். அவர்களின் பெயரை நான் பெற்றுக் கொண்ட காரணத்தினாலும் அன்னாரின் மூலமாக மறைவான விஷயங்களை பற்றிய ஞானத்தின் அருளும் எனக்கு அருளப்பட்ட காரணத்தினாலும் நிச்சயமாக நான் நபியாக இருக்கின்றேன்.

நான் மறுபடியும் உங்களுக்கு தெளிவு படுத்துகின்றேன். "நான் ஒரு புதிய ஷரீயத்தை கொண்டுவரவோ அல்லது புதிய மாற்றங்களை புகுத்தவோ வரவில்லை. இருப்பினும் நான் என்னை நபி என்று அழைப்பதை ஒருபோதும் மறுக்கவில்லை மேலும் நான் நபி என்று மறுப்பது ஒரு புதிய சட்டத்தை கொண்டுவந்த நபி என்று அழைப்பதை மட்டுமே.," மேலும், இதை நானாக கூறவில்லை மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹுவே என்னை நபி என்றும் ரசூல் என்றும் அழைக்கின்றான். எனவே அவன் வழங்கிய இந்த பதவிகளை வகிப்பதில் என்ன தவறிருக்கின்றது, மேலும், ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்கள் எவ்வாறு அல்லாஹ்வின் நபியாகவும் ரஸூலாகவும் இருந்தார்களோ அவ்வாறே நானும் அல்லாஹ்வின் நபியாகவும் ரஸூலாகவும் இருக்கின்றேன்.

“நான் ஒரு நபி அல்ல நான் ஒரு ஷரீயத்தை கொண்டுவரவில்லை” என்ற எனது வாதத்தின் பொருள் நான் ஒரு புதிய சட்டத்துடன் தோன்றிய நபி இல்லை என்பதாகும். நான் நபி என்ற வார்த்தையினால் அழைக்கப்பட்ட போதிலும் இந்த சிறப்பு சுதந்திரமான முறையினாலோ, எவருடைய வழியிலும் பின்பற்றாமல் நேரடியாக எனக்கு கொடுக்கப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்! இத்தகைய எல்லா சிறப்புகளும் வானத்தை சேர்ந்த பரிசுத்த தூய நபி ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆன்மீகமான ஐக்கியத்தை நான் அடைந்த காரணத்தினாலேயே நான் இத்தகைய அருளை அடைந்தேன். அன்னாரின் மூலமாக அதாவது, ஹஜரத் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிலே என்னை சுயமே மாய்த்து கொண்டதினால் மட்டுமே அந்த நிலைக்கு அல்லாஹ் என்னை முஹையுதீன்னாகவும் கலீபஃதுல்லாஹ்வகவும் எழுப்பினான். இன்னும் இதன் மூலமே மறைவானவற்றின் ஞானத்தையும் அல்லாஹ் எனக்கு அருளினான். எனவே, தான் என்னுடைய இந்த பதவியால் அந்த பரிசுத்த புனித நபிகள் பெருமானார் காத்தமுன் அன்பியா முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் முத்திரை நபி என்ற உயர்ந்த அந்தஸ்தை ஒருபோதும் பாதிப்பதில்லை.

நான் இந்த மேலான நிலையை பிரதிபிம்பமான முறையிலும், ஒரு நிழல் போன்ற முறையிலும் அன்பென்னும் கண்ணாடியின் வழியாக என்னுடைய அனைத்து குணஇயல்பின் மூலமும் (இதை தொடர்ந்து அடைவதற்கு முயன்றுகொண்டே இருப்பது) இன்னும் அன்னாரின் மீதுள்ள நேசத்தால் தன்னையே இழப்பதன் மூலமே நிலையை அடைகின்றேன்.எனவே, அல்லாஹ் என்னை முஹையூதீனாகவும் கலீபஃதுல்லாஹ்வாகவும் அவனுடைய வஹீயின் மூலம் அழைப்பதால் அந்த தூய நபி பெருமானார் (ஸல்) அவர்களின் கம்பிரத்திற்கும் பெருமைக்கும் அன்னாரின் கண்ணியத்திற்கும் எந்த குறைபாடும் ஏற்படப்போவதில்லை. ஆனால், இந்த அருளால் அன்னாரின் முத்திரை நபி என்ற உயரிய நிலை மேலும் சிறப்புறுகின்றது. இதிலிருந்து பெருமானார்(ஸல்) அவர்களுக்கு பிறகு ஒரு நபி தோன்றினால் அன்னாரின் காத்தமுன் நபீயின் என்ற முத்திரை உடைந்துவிடும் என்று எனது எதிரிகளில் எவர் கூறினாலும் ஆட்சேபனை செய்தாலும் எனது இந்த விளக்கம் தெளிவுபடுத்தும். இந்த குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமற்றது என்பதும் தெளிவாகும். மீண்டும் உங்களிடம் நான் ஆணித்தரமாக வலியுறுத்தி கூறிக்கொள்கின்றேன், எனது எந்த ஒரு வாதத்திலோ அல்லது அறிவிக்கையிலோ காத்தமுன் நபிய்யீன் முஹம்மத் (ஸல்) அவர்களின் முத்திரை நபி என்ற உன்னத நிலைக்கு எந்த குறைபாடும் ஏற்படாது என்பதை நான் உறுதியளிக்கின்றேன்.

எனது வருகையின் நோக்கம் ஒரு அணு அளவிற்கு கூட நபிகள் பெருமானார்(ஸல்) அவர்களின் வருகையின் நோக்கத்திற்கு எதிரானதில்லை, ஏனெனில், ஒரு நிழல் அதன் மூலப்பொருளில் இருந்து வேறானதில்லை இதை நான் தார்மீகமாக உங்ளுக்கு புரியவைக்கும் பொருட்டு நான் இந்த உதாரணத்தை விளக்கினேன், ஒவ்வொரு பொருளிற்கும், ஒவ்வொருவருக்கும் அல்லது இறைவனின் படைப்பினங்களுக்கும் அதன் நிழல் என்பது நிச்சயமாக இருக்கத்தான் செய்கின்றது. மேலும் அந்த நிழல் அதன் மூலப்பொருளில்(அல்லது அந்த நபரை) இருந்து ஒருபோதும் பிரிக்கமுடிவதில்லை. இருப்பினும் அந்த நிழல் தான் அந்த நபர் என்று நாம் எவ்வாறு கூறஇயலும்? இதை போலவே நபிகள் பெருமானார்(ஸல்) அவர்கள் நபிமார்களின் முத்திரை என்ற நிலையில் ஒருபோதும் மாறாமல் இருப்பார்கள் அன்னாரை தொடர்ந்து எஜமானரை பின்தொடரும் அடிமைகளாக அன்னாரின் நிழல்களாக தோன்றிக்கொண்டே இருப்பார்கள். இவ்வாறு அன்னாரின் உம்மத்தில் தோன்றும் இத்தகைய நபிமார்களின் நுபுவ்வத் அன்னாரின் நுபுவத்துடன் இணைந்தே அறியப்படும். இதனால் இத்தகைய நபிமார்கள் ஒரு போதும் சுதந்திரமான நபி என்ற நிலையை அடையமுடியாது. இங்கே நான் உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகின்றேன். எனது இந்த வாதத்தை கேட்டபிறகு நான் வாதம் செய்யாத ஒன்றை எவராவது இட்டுக்கட்டி என்மீது குற்றம்சாட்ட முயன்றால் அவர் பொய்யரும் குழப்பம் விளைவிப்பவர் என்பதை தவிர வேறு ஒன்றும் இல்லை. மேலும் உங்களிடம் கூறிக்கொள்கின்றேன்:-

நானே இந்த நூற்றாண்டில் அல்லாஹ்விடம் இருந்து தோன்றிய கலீபா (கலீபஃதுல்லாஹ்) மற்றும் முஹையூதீன்னும் (மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குபவர்) ஆவேன். இதை நான் எந்த மனித கரங்களாலும் பெறவில்லை. மாறாக அந்த ஏக இறைவனாகிய அல்லாஹுவே எனக்கு வழங்கினான்.

எனது இறைவனாகிய அந்த தூய அல்லாஹ்வின் மற்றும் அவனது அன்பிற்குரிய தூதர் நபிகள் பெருமானார் (ஸல்) மற்றும் அன்னாரின் மஸீஹான சென்ற நூற்றாண்டில் தோன்றிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் காதியானி(அலை) ஆகிய அனைவரின் நேசம் எனது ரூஹு முழுவதும் ஊடுருவி நான் என்ற எனது சுயத்தை முற்றிலும் இழந்துவிட்டேன்.

இதற்கு பிறகும் எனது எதிரிகள் என்னை ஒரு பொய்யன் என்று அவர்களின் நிலையில் தொடர்ந்தால் அவர்கள் அறியாமையிலும், மறுப்பதிலும் உள்ளார்கள் என்ற முடிவுக்கு நான் வருகின்றேன். இந்த தலைப்பின் சம்பந்தமாக என்னுடைய ஜுமுஆ பேருரைகளையும் பல்வேறு சொற்பொழிவுகளையும் கேட்டு இதன் உண்மைத்தன்மையை அறிய அல்லாஹ் இவர்களின் இதயத்தை திறக்க செய்வானாக! இன்ஷா அல்லாஹ். , ஆமீன்!

சூரத்துல் ஃபாத்திஹா பிரதிபலிக்கின்ற பொருளை பற்றிய சிறப்புமிக்க இந்த தலைப்பின் பேருரையை இன்றுடன் நிறைவு செய்கின்றேன். மேலும் இது நபிமார்களின் வருகை என்ற இரகசியத்தை தன்னகத்திலே கொண்டுள்ளது இன்னும் மனித குலத்தின் ஆன்மிகத்தை (ருஹுவை) பாதுகாக்க கூடிய நபிமார்களை எங்களுக்கு அனுப்புவாயாக என்று அவனை படைத்த ஏக இறைவனிடத்தில் மன்றாடும் வகையிலும் இதன் மூலம் நம்பிக்கையின் பாதையிலும் இறை பேரரருளிலும் நிலைத்திருக்க வகையில் அமைத்துள்ளது. அல்லாஹ்வின் நபிமார்கள் தோன்றவில்லை என்றால் மனித இனம் அவர்களாகவே ஷைத்தானின் செல்வாக்கின் கீழ் வந்துவிடுவார்கள். சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து கற்றுக் கொடுக்கப்பட்ட துஆவை செய்யும்போது அல்லாஹ் மனிதனுக்கு உறுதியளிக்கின்றான் அதாவது அல்லாஹ் நிச்சயமாக மன்றாடுபவரின் குரலை கேட்டு மீண்டும் அவனை நேர்வழியில் நடத்துகின்றான், எனவே நபிமார்களின் வருகை நிச்சயமாக முஹம்மதிய உம்மத்திற்கு கியாமத்து நாள் வரை தொடர்வது மிகவும் இன்றியமையாததாகும். மேலும், அல்லாஹ் உங்கள் கண்களை திறக்க செய்து இப்பொழுது இறைவனின் அருளாக உங்களுக்கு வழிகாட்ட தோன்றியுள்ள அவனின் நபியை அடையாளம் கண்டு ஏற்று இறைவனின் உண்மையான வெகுமதியையும், உண்மையான சந்தோஷத்தையும் அடைய செய்வானாக!

இன்ஷா அல்லாஹ். ஆமீன்!

(ஜுமுஆ பேரூரை- 29..08.2014)

Tuesday, June 14, 2022

நபிமார்களின் வருகை இறுதி நாள் வரைத் தொடரும்!

ஆதமின் மக்களே! எனது வசனங்களை உங்களுக்கு ஓதிக் காட்டக்கூடிய தூதர்கள் உங்களிடமிருந்தே நிச்சயமாக உங்களிடம் வரும்போது, இறையச்சத்தை மேற்கொண்டு திருத்திக் கொள்வோருக்கு (வருங்காலத்தைப் பற்றிய) எவ்வித அச்சமும் ஏற்படாது; அவர்கள் (சென்ற காலத்தைப் பற்றிக்) கவலையடையவும் மாட்டார்கள்.(7:36)

ஹஸ்ரத்‌ மிர்ஸா பஷீருத்தீன்‌ மஹ்மூத்‌ அஹ்மத்‌(ரலி) அவர்களின்‌ குர்‌ஆன்‌ விளக்கவுரையான தஃப்ஸீரே கபீர்‌ -ல்‌ வசனம்‌ எண்‌ 7:36க்கு இவ்வாறு விளக்கம்‌ அளித்துள்ளார்கள்‌:-

936. விளக்கவுரை:-

இந்த வசனமும்‌ இதற்க்கு முந்தைய வசனங்களைப்‌ போன்றே முக்கியமாக கவனிக்கப்படத் தகுந்ததாக இருக்கிறது (உ.ம்‌ 7:27,28 & 32).

"ஆதமுடைய மக்களே” என்று இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்‌ வார்த்தைகள்‌, முஹம்மது(ஸல்‌) அவர்களின்‌ காலத்திற்குரிய மக்களுக்கும்‌, இன்னும்‌ பிறக்காத (வருங்காலத்‌) தலை முறைகளுக்கும்‌ பொருந்துமே தவிர கடந்த காலங்களில்‌ வாழ்ந்த மக்களுக்கும்‌ ஆதமை நேரடியாகப்‌ பின்பற்றிய (ஆதமுடைய) மக்களுக்கோ பொருந்தாது. இது எந்தக் கண்ணோட்டத்தில்‌ இங்கு குறிப்பிடப்பட்டிருக்கிறதென்றால்‌, மனித குலத்தின்‌ எதிர்கால தலைமுறை யினருக்குத்‌ தெரிவிக்க வேண்‌டிய ஒரு முக்கியமான விஷயம்‌ இங்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதன்‌ பலனாக, ஆதமுடைய மக்கள்‌ இப்பூமியில்‌ வாழும்‌ வரை, இறைவனின்‌ (புறமிருந்து) தூதர்கள்‌ இவ்வுலகில்‌ தோன்றிக்‌ கொண்டேதான்‌ இருப்பார்கள்‌. இதனால்‌, நபி(ஸல்‌) அவர்களை எதிர்ப்பவர்களாலும்‌, அவர்களுக்கு எந்த வீழ்ச்சியும்‌ வரப்போவதுமில்லை; (அதனால்‌) நபித்துவமும்‌ நிற்கப் போவதுமில்லை. ஆதமின்‌ காலத்தில்‌, ஆதமின்‌ சந்ததிகளுக்கு கொடுக்கப்பட்ட பெரிய வாக்குறுதியும்‌ (2:39), அதனடிப்படையில்‌ அல்லாஹ்வின்‌ தூதர்கள்‌ எல்லா காலகட்டங்களிலும்‌ பல்வேறு நாடுகளில்‌ உள்ள வெவ்வேறு சமுதாயங்‌களிலும்‌ தோன்றியதும்‌ யுகமுடிவு நாள்‌ வரை தொடர்ந்து நிறைவேறும்‌.

(இவ்வசனத்தின்‌), "உங்களிடமிருந்து தூதர்கள்‌ உங்களிடம்‌ வந்தால்‌” என்பதற்கு, இறைவனிடமிருந்து தூதர்கள்‌ வரலாம்‌ அல்லது வராமலும்‌ இருக்கலாம்‌ என்று பொருளல்ல. எப்படி யென்றால்‌, "என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வந்தால்‌” (2:39) (என்ற வசனத்தின்‌) வார்த்தைகளுக்கும்‌, என்னிடமிருந்து நேர்வழி வரலாம்‌ அல்லது வராமலும்‌ இருக்கலாம்‌ என்பது பொருளல்ல. உண்மையில்‌, 'ماا' (என்றால்‌/இருந்தால்‌) என்ற வார்த்தையின்‌ நோக்கம்‌ என்னவென்றால்‌, ஒரு தூதருடைய காலத்தில்‌ நீங்கள்‌ வாழ நேர்ந்தால்‌, நீங்கள்‌ அவரை ஏற்றுக் கொள்ளத்‌ தவறிவிடாதீர்கள்‌! என்பதைக்‌ குறிப்பதாகும். எனவே இந்த வார்த்தை காலத்தை முற்றிலுமாக (நாம்‌) நிர்ணயித்து விடாமல்‌ விட்டு விடவேண்டும்‌ என்று பொருள்படும்‌. (அதாவது) இறைவனின்‌ தூதர்‌, ஒரு தலைமுறையிலோ அல்லது இன்னொரு தலைமுறையிலோ தோன்றக்‌ கூடும்‌, ஆனால்‌ (அவ்வாறு) அவர்‌ தோன்றும்‌ போதெல்லாம்‌ அவர்‌ (இறைத் தூதர்‌) ஏற்றுக் கொள்ளப்பட வேண்‌டும்‌." என்னுடைய அடையாளங்களை உங்களுக்கு விளக்கினால்‌" என்ற வசனம்‌ உணர்த்துகின்ற உண்மை என்னவென்றால்‌, முஹம்மது(ஸல்‌), அவர்களுக்கு பிறகு வரும்‌ தூதர்கள் யாவரும்‌ எந்த புதிய சட்டத்தையும்‌ (ஷரியத்தை) கொண்டு வரப்போவதில்லை, ஆனால்‌ இஸ்லாத்தின்‌ சட்டத்தை முழுமையாக பின்பற்றச்‌ செய்வதற்கும்‌, ஏற்கனவே அளிக்கப்பட்டிருக்கும்‌' குர்‌ஆனின்‌ வசனங்களை அவர்கள்‌ விளக்கிக்‌ கூறுவதற்கு அல்லது, ஓதிக்காட்டுவதற்கு (வருகைத் தருவார்கள்‌).

(7:37). மேலும்‌ எம்முடைய வசனங்களை மறுத்து அகங்காரம்‌ கொண்டு அவற்றை புறக்கணிப்பவர்கள்‌, நரகத்திற்குரியவர் களாவர்‌. அவர்கள்‌ அதில்‌ நீண்ட காலம்‌ வரை தங்குவர்‌.

937. விளக்கவுரை:-

இவ்வசனம்‌ முஸ்லிம்களுக்கு ஒரு குறிப்பிட்ட எச்சரிக்கையை விடுக்கின்றது; அதாவது அவர்கள்‌ அவர்களிடையே தோன்றப் போகின்ற தூதர்களை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது, அவர்களை நிராகரிக்கவும்‌ கூடாது. நிச்சயமாக இச்சட்டம்‌ திருக்குர்‌ஆனில்‌ மிகச்சிறந்த முறையில்‌ கூறப்பட்டிருக்கின்றது. (ஆனால்‌ அதற்கு பிற்கால இறைத் தூதர்களை நிராகரித்தாலும்‌ தண்டனையிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம்‌ என்று பொருள்‌ கிடையாது. மேற்குறிப்பிட்ட வசனங்களின்‌ விளக்‌கத்தின்‌ அடிப் படையில்‌ முஸ்லிம்களாகிய நாம்‌ அனைவரும்‌, இறைவனால்‌ அவனது விருப்பப்படி, தான்‌ தேர்ந்தெடுத்துள்ள காலகட்டத்தில்‌, தான்‌ தேர்ந்தெடுக்கின்ற தூதர்களை அனுப்பும்போது, கண் மூடித்தனமாக நிராகரிக்க முயற்சிக்காமல்‌ அவனது இறை வேதத்தில்‌ அவர்களுக்குரிய உண்‌மைத்துவத்திற்கு சாட்சியாக எதனைக் கூறியுள்ளானோ அவற்றை மட்டுமே அளவுகோலாகக்‌ கொண்டு அவர்களை அடையாளங்கண்டு கொண்டு ஏற்றுக் கொள்வதில்‌ முன்னணியில்‌ நிற்கச்‌ செய்வானாக! ஆமீன்‌!

“நீங்கள்‌ எல்லாரும்‌ இதிலிருந்து வெளியேறுங்கள்‌ என்னிடம் இருந்து உங்களிடம்‌ ஏதாவது நேர்வழி வருமாயின்‌ எனது நேர் வழியினைப்‌ பின்பற்றி நடப்பவர்களுக்கு (எதிர்காலம்‌ பற்றிய எந்த அச்சமும்‌ இருக்காது. (இறந்த காலம்‌ பற்றி) அவர்கள்‌ துயரம்‌ அடைய மாட்டார்கள்‌ என்று நாம்‌ சொன்னோம்‌”. (அல்குர்‌ஆன்‌ 2:39)

Monday, June 13, 2022

தூதுச் செய்தி கிடைக்கவில்லை என்று கூறி இறைவன் முன் தப்பிக்க இயலுமா?

நாளை நீங்கள் உங்களைப் படைத்தவன் முன் நிற்கும்போது நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை என்று கூறாதீர்கள்.

என்னை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இதை ஏற்றுக் கொள்வதோ இறை செய்தியிலிருந்து முகந்திருப்பிக் கொள்வதோ உங்களுடைய விருப்பம்.

கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) கூறுகின்றார்கள்:-

காலத்தின் கலீஃபதுல்லாஹ் என்ற வகையில், நான் செய்ய வேண்டிய (நிர்ணயிக்கப்பட்டுள்ள) வேலையைச் செய்கிறேன். அல்லாஹ்வே இம்முக்கிய செய்தியை அளிக்க என்னை வழிநடத்தி இயக்குகின்றான்; ஏனெனில் நாளை நீங்கள் உங்களைப் படைத்தவன் முன் நிற்கும்போது நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை என்று கூறமுடியாது. “யாரும் எதையும் சொல்லவில்லை; எனக்குச் செய்தி கிடைக்கவில்லை” என்று உங்களால் கூறமுடியாது. உங்களைப் படைத்தவனிடம் உங்களால் இதைக் கூற முடியாது! இறை அறிவுறுத்தலின்படி அல்லாஹ் எனக்குக் கொடுத்துள்ள பணியை நான் செய்கிறேன். என்னை ஏற்றுக்கொள்வதற்கோ அல்லது நிராகரிப்பதற்கோ நீங்களே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். இதை ஏற்றுக்கொள்வதோ, இறை செய்தியிலிருந்து முகந்திருப்பிக் கொள்வதோ உங்களுடைய விருப்பம். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய செயல்களுக்குப் பொறுப்பாளியாவீர்கள், தீர்ப்பு நாளில் படைத்தவனால் கணக்குக் கேட்கப்படவுள்ளீர்கள்.

இந்த தற்காலிக உலகில், நாம் அனைவரும் பயணிகளாவோம், நாம் இந்த உலகில் தற்காலிகமாகவே இருந்து கொண்டிருக் கின்றோம்; எனவே நாம் மறுமையைப் பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது, ஏனெனில் மரணத்திற்குப் பின்னுள்ள வாழ்க்கையே நிரந்தரமானதாகும்.

இப்போது நான் சூரா அன்-நூரில் உள்ள ஒரு வசனத்தை(24:56) மேற்கோள் காட்டுகிறேன். அதில் அல்லாஹ் :

“அவன் அவர்களுக்காகப் பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாக” கூறுகின்றான்.

இதுபோல சூரா அல்-மாயிதா அதிகாரம் 5 வசனம் 4இல் அல்லாஹ் மேலும் கூறுகின்றான்:-

“இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தைப் பரிபூரணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்; இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்”.

இதன் பொருள் என்னவென்றால் அல்லாஹ்(ஸுபுஹ்)-வால் ஏற்படுத்தப்பட்டுள்ள, அருள் புரியப்பட்டுள்ள அமைப்பின் மூலம் இஸ்லாம் பலத்தையும், கண்ணியத்தையும் பெறும் என்பதை முன்னிறுத்தி இறுதி அறிவிப்பை வெளியிடுவான் அதில் அவன் தொடர்ந்து இறையருளை, அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியாரை, அவனது கலீபத்துல்லாஹ்வை அனுப்பிக் கொண்டேயிருப்பான், அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியாரின் மூலமாகவே அவன் உலகளவில் இஸ்லாமிய மார்க்கம் வெற்றியடைய அனுமதிப்பான். நான் ஏற்கெனவே கடந்த இரண்டு வெள்ளிக்கிழமை உரைகளில் விளக்கியதுபோல், புனித நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தின் விதையை விதைத்தார்கள், புனிதமான, பரிபூரணமான ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) விதைத்த அதே பணியைத் தொடர்வது கட்டாயமாகும். அவர்கள் இஸ்லாத்தின் விதையை விதைத்தார்கள். ஆனால் இன்று என்ன ஆகிவிட்டது? முஸ்லிம்களுக்கு என்ன ஆகிவிட்டது? இஸ்லாத்தின் உண்மையான போதனைகள் எங்கே போய்விட்டன? நமது அன்பிற்குரிய நபி(ஸல்) அவர்கள் வீணாகக் கூறவில்லை. பிரத்தியேகமாக இத்தலைப்பு பற்றிய திருக்குர்ஆனின் வசனம் அருளப்பட்டபோது அதில் அல்லாஹ் கூறுகிறான்:

‘வ ஆஹரீன மின்கும் லம்மா யல்ஹகூ பிஹிம்’

“இவர்களுடன் சேராத (பிற்காலத்த) வர்களுக்காகவும் “ (சூராஅல்ஜூம்ஆ 62:4)

இந்த வசனத்தில் மிகச் சிறந்த முன்னறிவிப்பு உள்ளது, அதில் இந்த உண்மையான போதனைகள் [இஸ்லாத்தின் போதனைகள்] மீறப்படும் இறுதி நாட்களில் புனித நபி(ஸல்) அவர்களின் வருகையின் நோக்கம் மற்றும் இஸ்லாத்தின் போதனைகள் குறித்து சிலர் கேள்வி எழுப்பக்கூடும், அவ்வாறு நடக்கும்போது அல்லாஹ்(ஸுபுஹ்) நிச்சயமாக இந்த ஸஹீஹ் அல் இஸ்லாத்தை (உண்மை இஸ்லாத்தைப்) பாதுகாக்க ஒரு பிரதிநிதியை அனுப்புவான். இவ்வசனம் அருளப்பட்டபோது, ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்கள் நன்கு அதனைப் புரிந்து கொள்ள வைத்தார்கள். ஏனெனில் அவர்கள் கூறினார்கள்:

“லவ் கானல் ஈமானு முஅல்லகன் பிஸ்ஸுரைய்யா லனாலுஹூ லரஜ்லும் மின் ஹாவுலாஇ” புஹாரி-கிதாபுல் தஃப்ஸீர்).

அவர்கள் இவ்வார்த்தைகளைக் கூறும்போது, அவர்கள் தமது கையை ஸல்மான் ஃபார்ஸி அவர்களின் தோளின் மீது வைத்தார்கள், ஸல்மான் ஃபார்ஸி பாரசீக வம்சத்தைச் சார்ந்தவர்கள் ஆவார்கள்..

இம்முன்னறிவிப்பு கடந்த நூற்றாண்டின் மஸீஹ் ஆகிய ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹமத்(அலை) அவர்களின் காலத்தில் நிறைவேறிற்று. ஆனால் இம்முன்னறிவிப்பு இதோடு நிறைவு பெற்றுவிடாது; தற்காலத்திலும் அல்லாஹ் அனுப்பிய்யள்ள இந்த எளிய அடியானின் வருகையால் அதுத் தொடர்ந்து உணரப்படுகிறது. அல்லாஹ்வால் அனுப்பப்பட்டுள்ள இந்த எளிய அடியான் புனித நபி(ஸல்) அவர்களின் பணியைத் தொடரக்கூடிய அடியானும், பாதுகாவலனும் ஆவேன்;

மேலும் நான் புனித நபி(ஸல்) அவர்களின் மீதும் மதிப்பிற்குரிய வாக்களிக்கப்பட்ட ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்களின் மீதும் உறுதியான நம்பிக்கைக் கொண்டவனாவேன். ஹஸ்ரத் மஸீஹ் மவூத்(அலை) அவர்களின் மஸீஹ் வாதத்தை ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்களின் உம்மத்தைச் சாராத ஒருவரால் எவ்வாறு செய்யமுடியாதோ! அதேபோன்று இக்காலத்தின் ஃகலீபத்துல்லாஹ்வாகிய அல்லாஹ்வின் அடியானும் ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்களின் உம்மத்தைச் சாராதவனாகவோ அல்லது ஹஸ்ரத் மஸீஹே மவூத்(அலை) அவர்களின் ஜமாத்தைச் சாராதவனாகவோ இருக்கமுடியாது. எனவே, இஸ்லாத்தின் (ஸஹீஹ் அல் இஸ்லாம்) அசல் போதனைகளை உயிர்ப்பிக்க அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்டவரைப் புனித நபி(ஸல்) மற்றும் மதிப்பிற்குரிய வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களின் சமுதாய வட்டத்திலிருந்து பிரிக்கவோ விலக்கவோ முடியாது. அவர் இவ்விருவரையும் மிக உறுதியாகப் பின்பற்றுபவராக இருக்கவேண்டும்: முதலாவது காத்தமுன் நபிய்யீன் (நபிமார்களுக்கெல்லாம் முத்திரை), அடுத்தது காத்தமுல்குலஃபா (கலிஃபாக்களுக்கெல்லாம் முத்திரை). நபி கரீம் ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்களிடத்து பற்றுதல் இல்லையென்றால் ஹஸ்ரத் மஸிஹ் மவூத்(அலை) அவர்களின் வருகைக்கூட மதிப்பில்லாமல் போய்விடும்.

சிந்தியுங்கள்!

இறை வஹீ - 05 மார்ச் 2022

05 மார்ச் 2022 சனிக்கிழமை அன்று இக்காலத்தின் இமாம், மஸீஹ், மஹ்தி மற்றும் முஸ்லிஹ் மவூதுமாகிய மொரீஷியஸைச் சார்ந்த ஹஸ்ரத் முஹையுத்தீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மது அஸீம்(அலை) அவர்கள் பெற்ற இறை வஹி - இறை வெளிப்பாடுகள்.

"மூன்றாம் உலகப் போர் மிக அருகில் உள்ளது." இந்த செய்திகளை அறிவிப்பதற்காக பறவைகள் என்னிடம் வந்துள்ளன. அதில் அதிகமான மக்கள் மரணித்துப் போவார்கள். இரத்த ஆறுகள் ஓடும். ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முன்னறிவித்ததைப் போன்றே ஓர் ஆண் ஐம்பது பெண்களுக்குப் பொறுப்பாவான் (என்ற காலம் நெருங்கி உள்ளது)

ஏவுகணைகளும் குண்டுகளும் உலகம் முழுவதும் பரவி விடும். பலர் தங்கள் உயிரை விட நேரிடும். எல்லா ஆண்களும் போருக்குச் செல்ல வேண்டும் (என்ற நிலை ஏற்படும்).

நீண்ட காலத்திற்கு முன்பு, குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களிடம் அச்சமும் மிகுந்த மரியாதையும் இருந்தது. ஆனால், இன்றோ பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கண்டு அஞ்சுகிறார்கள். சிலர் தங்கள் பெற்றோரைக் கொள்கின்றனர். சிலர் தங்கள் பெற்றோரிடம் மோசமான வார்த்தைகளை கூறுகின்றனர், அவர்களை தங்கள் வீடுகளில் இருந்து உதைத்துத் தள்ளுகின்றனர். இப்போது, ஆண்கள் குறைவாக இருப்பார்கள் - இனப் பெருக்கம் இருக்காது.

அல்லாஹ்வையும் அவனது கலீஃபத்துல்லாஹ்வையும் தவிர ஆணின் அதிகாரத்தில் உள்ள (அல்லது சக்திக்கு உட்பட்ட) எந்த ஆணைக் கொண்டும், பெண்ணின் அதிகாரத்தில் உள்ள (அல்லது சக்திக்கு உட்பட்ட) எந்த பெண்ணைக் கொண்டும் இந்த உலகத்தை மாற்றி (அமைத்து) விட முடியாது.

எனது சஹாபாக்களே!, உங்களது பெற்றோருக்கும், உங்களது கலீபத்துல்லாஹ்வுக்கும் எதிராக உங்கள் குரலையும், கைகளையும் உயர்த்தாதீர்கள். மனிதர்களால் அல்லாமல், அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட கலீஃபாவாகிய உங்களது கலீஃபாவிற்குக் கீழ்ப்படியாமல் இருந்து விடாதீர்கள்!

இறை வெளிப்பாட்டை விட்டும் வெளியேறிச் சென்றவர்களைப்

பாருங்கள்!, அவர்களின் முகத்தில் ரூஹானி - ஆன்மீக (ஒளி) இருக்காது.

காற்றானது இந்த செய்திகளை கொண்டு வருகின்றது. காற்று மிகவும் கடுமையாக வீசுகிறது. ஒரு நாள், அவர்கள் கலீஃபத்துல்லாஹ்வின் அருட்களை பெற்றுக் கொள்ள வருவார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது மிகவும் தாமதமாகிவிடும். (அப்போது) அவர்கள் பரிதாபமான நிலையில் இருப்பார்கள். மிகவும் கடுமையாக உழைக்கும் பல நல்ல சஹாபாக்கள் இருக்கிறார்கள் என்பதையும், (அதற்கு) மாறாக, சிலர் எதுவுமே செய்யாதவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதையும் அல்லாஹ் எனக்கு புரிய வைக்கிறான்.

அஸீமின் பேழைக்குள் (கப்பல்) வந்து விடுங்கள். இந்தப் பேழைக்குள் நுழைபவர்கள் மட்டுமே காப்பாற்றப் படுவார்கள். கலீஃபத்துல்லாஹ்வை இழிவு படுத்தியவர்கள் அழிக்கப்படுவார்கள்!. (இந்நிலையில்) நீங்கள் 700,000 முறை மன்னிப்பு கோரினாலும் கூட அல்லாஹ் அவர்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டான்! நீங்கள் கலீஃபத்துல்லாஹ்விற்கு உதவி செய்ய வேண்டும். அவரைக் குறித்து புறம் பேசவோ, குறை கூறவோ செய்யாதீர்கள்!. ஃபஸ்பீர் ஸப்ரன் ஜமீலா. (அழகிய பொறுமையை மேற்கொள்ளுங்கள்!)

(கலீஃபத்துல்லாஹ்வே!) அல்லாஹ் உங்களுக்கு பொறுமை குறித்த வசனங்களை (இறை வஹீயை) வழங்குவான்.

கலீஃபத்துல்லாஹ் அவர்கள் இறை வெளிப்பாட்டின் அடிப்படையில் கூறினார்கள்: எனது ஸஹாபாக்களும் கூட நெருப்பை (கடும் சோதனைகளை) கடந்து செல்வார்கள். இது குறித்து கவலைப் படாதீர்கள்! அதன் பிறகு, கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்கள் துன்பம்- துயரங்களில் இருக்கும் தமது ஸஹாபிகளுக்காக அதிகமான துஆக்களை செய்தார்கள். ஆனால், அவர்களில் சிலர் அந்த துஆக்களின் பலனையும், ஆற்றலையும் அடையாளம் கண்டிருக்க வில்லை என்பது குறித்து அன்னார் வருத்தம் அடைந்தார்கள். பழங்களையும், காய்கறிகளையும் மட்டுமல்லாது விலங்குகளையும் கூட வைரஸ்கள் தாக்கும். உணவுப் பற்றாக்குறை ஏற்படும்.

கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்கள் இறை வெளிப்பாடுகளின் அடிப்படையில் கூறினார்கள்: இப்போது ஒரு கிண்ணத்தில் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று (நான்) கூறும்போது மக்கள் என்னைப் பார்த்து சிரிப்பார்கள். (ஆனால் ஒரு நேரம் வரும் அப்போது மக்கள் தண்ணீரை அருந்த வேண்டும் என்பதற்காக) கலீஃபத்துல்லாஹ் தனது உமிழ்நீரை அதில் ஊற்றி சுத்திகரிப்பார்கள். அதனால் மக்கள் தண்ணீரை அருந்த முடியும். பலரும் நாத்திகர்களாக மாறிவிட்டனர். பெரும்பாலான அஹ்மதிகளும் தங்களது கலீஃபாவை அல்லாஹ்வை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக எடுத்துக் கொள்கிறார்கள். இருண்ட காலம் வந்து கொண்டிருக்கிறது. (அப்போது) மருத்துவமனைகளிலும், மருந்தகங்களிகளிலும் எந்த மருந்தும் கிடைக்காது. மக்கள் தாவர மருந்துகளின் பக்கம் (மீண்டும்) திரும்ப வேண்டி இருக்கும். அல்லாஹ் தனக்கும், அனது நபி- (தூதரு)க்கும் கீழ்ப்படிபவர்களை நேசிக்கிறான். அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். தீன் - மார்க்கப் பணிகளில் கடினமாக ஈடுபடுங்கள்.

அல்லாஹ் நம்மீது கருணை காட்டுவானாக! (இன்ஷா அல்லாஹ்! ஆமீன்!)

இந்த நூற்றாண்டின் தாப்பதுல் அர்ல்! (கோரோனா வைரஸ்)

கொரோனா வைரஸ் பற்றி அன்னாருக்கு வெளிப்பட்ட வஹீ!

இந்த வஹி அன்னாருக்கு 20.07.2019 அன்று அரபி மற்றும் கிரியோல் மொழியில் இறங்கியது.

Bismillah hir rahman nir raheem

After Tahajjud prayers Saturday 20 July 2019 17 Dhul-Qaddah 1440 AH

Fatawakkal ‘alallaah. Innaka ‘alal-Haqqil mubeen. Innaka laa tusmi-

‘ul-mawtaa wa laa tusmi-us-summaddu-‘aaa-‘a izaa wallaw mudbireen. Wa

maaa anta bihaadil-‘umyi an-zalaalatihim. ‘In tusmi-u ‘illaa may-yu’-minu bi-

Aayaatinaa fahum Muslimuun. Wa izaa waqa-‘al-Qawlu ‘alayhim ‘akhrajnaa

lahum Daaabbatam-minal-‘arzi tu-kallimuhum ‘annannaasa kaanuu bi-

‘Aayaatinaa laa yuuqinuun.

தஹஜ்ஜுத் தொழுகைக்கு பிறகு அரபி மற்றும் கிரியோல் மொழியிலும் இறங்கிய வெளிப்பாடு மற்றும் பொருள்:- நீங்கள் அல்லாஹுவிடத்தில் நம்பிக்கை வையுங்கள் நீங்கள் உண்மையாகவே உண்மையின் மீது இருகிண்றீர்கள். உங்களால் இறந்தவர்களை செவியேற்க செய்ய முடியாது. மேலும் முதுகுக்குப் பின்னால் திரும்பிய அத்தகைய செவிடர்களை உம்மால் கேட்கும்படி செய்ய இயலாது. இன்னும் குருடர்களை உம்மால் அவர்களின் தவறுகளில் இருந்து நேர்வழியில் செலுத்த முடியாது. ஆனால் எவர்கள் உம்முடைய அடையாளங்கள் மீது நம்பிக்கை கொள்கிறார்களோ உம்முடன் தங்களை முஸ்லிம்களாக அர்ப்பணித்து இருக்கின்றார்களோ அவர்களையே உம்மால் சீர்திருத்த முடியும். மேலும், அவர்களின் (நிராகரிப்பாளர்கள்) மீது அவர்களின் வாக்கு நெருங்கும் போது பூமியில் இருந்து ஒரு பிராணியை நாம் வெளிப்படுத்துவோம் மக்கள் நம் அடையாளங்களில் நம்பிக்கை கொள்ளாததே அதற்குக் காரணம்.

ஆதாரம் காண்க :-

http://jamaat-ul-sahih-al-islam.com/jusai2019/rev_hmaa_20jul19.pdf

இந்த நூற்றாண்டின் மாபெரும் எச்சரிக்கை செய்யும் வஹீ இதன் உண்மைத்தன்மையை நாம் வாழும் இந்த காலத்தில் ஒவ்வொரு மனிதனும் அவன் அரசனானாலும் சரி ஆண்டியானானாலும் சரி உணர முடிகின்றது. இந்த பூமி இதுவரை கண்டிராத மாபெரும் இறை அடையாளத்தை பார்த்த பிறகும் நம்மிடையே இறைவனின் இந்த நூற்றாண்டின் தூது செய்தி மீது நம்பிக்கை கொள்ளாமல் இருப்பது நிச்சயம் ஆச்சரியத்திற்குரியது.!

Copyright @ 2013 Sahih Al Islam .