11 நவம்பர் 2022 ~16 ரபிய்யுல் ஆஹிர் 1444ஹி உலகெங்கிலும் உள்ள தனது ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு ஹஸ்ரத் அமீருல் மூஃமினீன் முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் தஷ்ஹுது, தவ்வூத் மகற்றும் சூரா அல் ஃபாத்திஹாவை ஓதினார்கள். பிறகு 'மேற்கத்தியமயமாகும் உம்மத்' என்ற தலைப்பின் கீழ் தனது ஜும்ஆ உரையை வழங்கினார்கள். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேருளால், நபி பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது ரசூலுல்லாஹ் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் - நாடு துறந்து சென்றவர்களிடம் உரையாற்றிய ஹதீஸ் குறித்த எனது கடந்த வார விளக்கத்தில் இருந்து எனது குத்பாவைத் தொடர்கிறேன்: “நீங்கள் சோதிக்கப்படும் ஐந்து விஷயங்கள் உள்ளன, உங்களது வாழ்வில் அவைகளை காணாமல் இருக்க நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்: எந்த சமுதாயத்தில் மானக் கேடானவை பரவலாகிவிடுமோ அப்போது முன்னர் கேள்விப்படாத "காலரா" போன்ற புதுமையான நோய்கள் பரவும். அளவு, நிறுவைகளில் குறைபாடு செய்பவர்களுக்கு பஞ்சம், சிரமம் ஏற்படும். மேலும், அநியாயக்கார அரசன் சாட்டப்படுவான். ஜகாத் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொண...