Skip to main content

Posts

Showing posts from June 5, 2022

உம்மத்தின் நோய்கள் (ஜும்ஆ உரை)

03 ஜூன் 2022 02 துல் கஹ்தா 1443ஹி உலகெங்கிலும் உள்ள அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்து முஸ்லீம்களுக்கும்) தனது ஸலாத்தினை தெரிவித்த பிறகு தஷ்ஹுது, தவ்வூத் மற்றும் சூரா அல் பாத்திஹா ஓதிய பிறகு; ஹஸ்ரத் முஹையுத்தீன் கலீஃபத்துல்லாஹ் (அய்தஹு) அவர்கள் உம்மத்தின் நோய்கள் (பகுதி 1) என்ற தலைப்பில் தனது ஜும்மா பேரூரையை நிகழ்த்தினார்கள். சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, அறியாமை, பாவம் மற்றும் ஒழுக்கக்கேட்டின் இருளில் உலகம் மூழ்கி இருந்த போது, உண்மையான அறிவு மற்றும் வழிகாட்டுதலின் ஒளி (மக்காவைச் சுற்றியுள்ள சிறிய மலைகளான) பத்தாவின் பாறை மலைகளுக்கு மத்தியில் அடிவானத்தில் தோன்றியது. அதன் கதிர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கிலும் பரவியது.. அவை பூமியின் ஒவ்வொரு மூலையையும் ஒளிரச் செய்துள்ளன; குறுகிய காலத்தில் [இருபத்தி- மூன்று வருடங்களில்], இந்த ஒளி மனிதன் முன்னர் ஒருபோதும் அடைந்திராத உயர்ந்த பதவிகளை அடைவதற்கு வழி வகுத்துள்ளது. இது முஸ்லிம்களை மூட நம்பிக்கையிலிருந்து அகற்றி உண்மையான பாதையைப் பின்பற்றுவதற்கான ஆழ்ந்த விருப்பத்தை அவர்களில் உருவாக்கியது. இந்த ஒளியால் வழி நடத்தப்பட்டு...

நூற்றாண்டு என்பதை எதனடிப்படையில் கணக்கிடுவது!

1. “நூற்றாண்டு”- நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உம்மத்தில் ஒரு மிக இன்றியமையாத இடத்தை பெறுகின்றது. முதலில் அன்னார் முன்னறிவித்த ஒரு ஹதீஸ்; ஒவ்வொரு நூற்றாண்டின் தலைமையிலும் அல்லாஹ் ஒரு முஜத்தித்தை தோன்ற செய்து மார்க்கத்திற்கு புத்துயிர் வழங்குவான்.( அபூதாவூத் 4291 ) இது சம்பந்தமாக காலத்தின் இமாம், கிலாஃபத்தே முஹம்மதிய்யாவின் கலீஃபா, முஹையுத்தீன் அல் கலீஃபத்துல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸிம் (அலை) அவர்கள் ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டியவாறு இவ்வாறு விளக்குகின்றார்கள்:- மஸீஹ் மவூத்(அலை) அவர்கள் இந்த ஹதீதை பற்றி கூறும்போது (ஒவ்வொரு நூற்றாண்டிலும் முஜத்தித்மார்கள் வருவார்கள் பற்றிய) இந்த ஹதீஸ் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபிமொழி என்றும், ஷா வலியுல்லாஹ் அவர்களும் இது நமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்களின் உதட்டிலிருந்து தான் உதித்தது என்று சான்றுபகிர்கின்றார்கள். இது ஹதீத் நூல்களில் மிக தெளிவாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த ஹதீதை எவரும் புறக்கணிக்கவில்லை. இந்த ஹதீத் ஒருபோதும் பொய்யானதில்லை. மாறாக இது முற்றிலும் உண்மையான ஹதீத் என்பதை நான் உறுதியளிக்கின்றேன...

லைலத்துல் கத்ர் : ஒரு முஜத்தித்தின்/கலீஃபத்துல்லாஹ்வின் வருகை!

முஸ்லிம்களின் மனதில் ஆன்மீக ரீதியாக ரமலான் ஒரு புனிதமிக்க மாதமாக ஆழமாக பதிந்துள்ளது. மேலும் இம்மாதத்தில் அந்த ஏகஇறைவனுக்காக நோன்பின் கடமையையும் ஆற்றுகின்றனர். இதே மாதத்தில் தான் பெருமானார்(ஸல்) அவர்களுக்கு இறைவசனம் இறங்கியது. மேலும் புனித திருகுரான் பிறந்த மாதமும் இதுவே என்பதையும் நமக்கு நினைவுபடுத்துகின்றது. இக்கூற்றை திருக்குரானே இந்த புனிதமிக்க மாதத்தில் தான் நபி (ஸல்) அவர்களுக்கு இறங்கியது என்று சான்று பகிர்கின்றது. மேலும் அது இவ்வாறாக நமக்கு கற்பிக்கின்றது. ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ( திருகுரான் 2:185 ) நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். (திரு குரான் 97:1) நிச்சயமாக, நாம் அதனை பாக்கியமுள்ள இரவிலே இறக்கினோம்; நிச்சயமாக (அதன் மூலம்) அச்சமூட்டி எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம். ( திருக்குரான் 44:3 ) இன்னும் புகழ் பெற்ற திருகுரான் மொழிபெயர்பாளர்களும், மார்க்க அறிஞர்களும், ...

"இன்னி மஅக யா மஸ்ரூர்" என்ற இல்ஹாம் பற்றிய விளக்கம்!

முதலில் இந்த வஹீயை பற்றி பார்ப்போம். இந்த வஹீ ஹஸ்ரத் வாக்களிக்கப்பட்ட மஸீஹ் (அலை) அவர்களுக்கு 1907 ம் ஆண்டு இறங்கிய தொடர்ச்சியான வஹீயில் மூன்றாவதாக இறங்கிய அரபு மொழிலனான வஹீயாகும். இதன் பொருள்: ” மகிழ்ச்சிக்குரியவரே நான் உம்முடன் இருக்கிறேன். " என்று அல்லாஹ் சுபஹானஹுதாலா ஹஸ்ரத் மஸீஹ் மவூது (அலை) அவர்களைப் பார்த்து (இன்னிமாக்கா யா மஸ்ரூர்) கூறியிருக்கின்றான். [Badr, vol. 6, no. 35, August 29, 1907, p. 4 and al-Hakam, vol. 11, no. 31, August 31, 1907, p. 1] இதே நாளில் அன்னாருக்கு இறக்கிய இறை வஹீயின் மற்றொன்றில் அல்லாஹ் அன்னாரை பார்த்து “ இன்னிமாக்கா யா இப்ராஹிம் ” என்றும் அழைத்துள்ளான். மேலும், இந்த வஹீ அன்னாருக்கு பல முறை இறங்கி உள்ளது. [Arabic] I am with you, O Ibrahim [al-Badr, vol. 7, no. 3, January 23, 1908, p. 4 and al-Hakam, vol. 12, no. 6, January 22, 1 1908, p. 10] மேலும் அன்னாருக்கு இவ்வாறும் வஹீ இறங்கியுள்ளது; அதாவது, “நான் உன்னை விரும்புகிறேன். நான் உம்முடன் இருப்பேன்.” “I love you. I am with you”. [ Barahin-e-Ahmadiyyah, part 4, pp. 480–481 sub-footnote 3, Ruhani Khaza...

வாதம் செய்யாத வஹீயின் நிலை!

அவன் வானவர்களை "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்" என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான். ( திருக்குர்ஆன் 16: 3 ) இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் தஃப்ஸீரே கபீரில் விளக்கம் அளிக்கும் போது இங்கே *الروح* (அர் ரூஹ்-இறை வெளிப்பாடு) என்பதன் பொருள் இறைவனின் உயிர் வழங்கும் வார்த்தை என்பதாகும். இது ஒரு நபியின் செய்தியை அதன் உயிர் வழங்கும் குணங்களை குறிப்பதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றது. 'மக்களை எச்சரிக்க' என்ற வார்த்தைகள் இங்கே சுட்டிக் காட்டுகின்ற 'இறை வெளிப்பாடு' என்பதன் பொருள் ஒரு இறைத் தூதருக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு வெளிப்பாடாகும். இறை வெளிப்பாடு பொதுவாக இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்: (1) பெறக்கூடிய நபரைப் பற்றிய அவருடைய சொந்த வெளிப்பாடு. பொதுவாக அதனை வெளியிடுவதற்கு எந்த 'சிறப்பு தடை' யும் இல்லை. என்றாலும், அது அறிந்து கொள்ளப்பட்டு வெளியிட வேண்டிய தேவையில்லை. (2) மனிதகுலத்திற்கான பரந்த அளவிலான இறை வெளிப்பாடு. ...

கிலாஃபதுன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத் - விளக்கம்

"கிலாஃபத்ன் அலா மின் ஹாஜின் நுபுவ்வத்" என்று கூறி பெருமானார்(ஸல்) அவர்கள் அமைதி ஆகி விட்டார்கள்" என்பதற்கான உண்மை விளக்கம்: இன்னும், இந்த முல்லாக்கள் கட்டவிழ்க்கும் மற்றுமொரு சுயவிளக்கம் என்னவென்றால்; இந்த நபிமொழிக்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் அமைதியாகிவிட்டார்கள். எனவே, இதற்கு பிறகு இந்த கிலாஃபத் (கலீஃபத்துர் ரஸுல்) தான் தொடரும் என்ற கற்பனையை அப்பாவி மக்களிடையே பரப்புகின்றனர். இதற்கு மாறாக, நபி பெருமானார் (ஸல்) அவர்கள் இது ஒரு முடிவல்ல தொடர் என்பதையே இந்த நபிமொழியில் உணர்த்துகின்றார்கள். அது எங்ஙனம்? இந்த நிஜாமிகளின் கூற்றை போல் அன்னார் ஒருபோதும் இறுதி நபிக்கொள்கையை போதிக்கவில்லை. (நஊதுபில்லாஹி மின் தாலிக்) இக்கூற்றை இன்னும் விளக்கமாக அறிந்துகொள்ள அல்லாஹ் தனது இறைவேதத்தில் இவ்வாறு கூறுகின்றான்:- அல்லாஹ் மேகத்திலிருந்து தண்ணீரை இறக்குவதை நீர் பார்க்கவில்லையா? அதனை பூமியில் ஊற்றுகளாக ஓடச் செய்கின்றான். பின்னர் அவன் அதனைக் கொண்டு பல்வேறு நிறங்களைக் கொண்ட புற்பூண்டை வெளிப்படுத்துகின்றான். பிறகு அது உலர்ந்து விடுகிறது. பின்னர் அது மஞ்சள் நிறமாவதை நீர் காண்கின்றீர். பின்னர் அவ...