ஹிஜ்ரி 1443 முஹர்ரம் மாதம் பிறை 4, 2021 ஆகஸ்ட் 12 வியாழக்கிழமை மாலை 6.05 மணியளவில் இறை புறத்திலிருந்து பெற்று இறைச் செய்தியை வழங்கிய படி... ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்கள் அறிவிக்கிறார்கள்.. பிஸ்மில்லாஹிர் ரஹ்மானுர் ரஹீம் அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணை காட்டுபவனும் ஆகிய அல்லாஹ்வின் பெயரால்... இவ்வுலகின் அனைத்து தேசங்களிலிருந்து, பூமியில் வாழும் எனது அன்பான மனித இனமே, கேளுங்கள்! முதலில், ஏகனாகிய, ஒரே ஒருவன் நமது உண்மையான படைப்பாளன் மற்றும் பிரபஞ்சத்தின் அனைத்து தற்காலிக மற்றும் போலி தெய்வங்களுக்கும் இறைவனாகிய அந்த ஒரே ஒருவனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவனே (வல்ல இறைவன்), நம்மையும், தாங்கள் பல சோதனைகளை கடந்து சென்றாலும், மக்கள் அவர்களை ஏளனம் செய்தாலும் அவர்கள் மீது பழிகளை சுமத்தினாலும் அவனது கலீபத்துல்லாஹ்வை நேசித்து, அவனது கலீபத்துல்லாஹ்வுக்கு கீழ்படிந்து, அவனது கலீபத்துல்லாஹ்வுடன் நெருக்கமாக பணிகளை மேற்கெள்கின்றவர்களையும் (இறைவன்) நேசிக்கிறான். நான் உங்களிடம் அல்லாஹ் (தபாரக)வின் பெயரில் சத்தியம் செய்து கூறிக் கொள்கிறேன்: அல்லாஹ் என்னுடன் ப...