Friday, September 1, 2023

ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் நோக்கங்கள்- பாகம் 1

ஆட்சிமுறையில் புரட்சி என்பதே இந்த உலகில் ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் குறிக்கோளாகும். (‘எழுந்து புதிய உலகத்தை உருவாக்குவீராக’ என்பது இதன் அர்த்தங்களில் ஒன்றாகும்').

இன்று நாம் அல்லாஹ்(ஸுப்ஹா)வின் கட்டளைகளுக்கும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் (மாற்றமான) எதிர்ப்புணர்வு கொண்டுள்ள

மற்றும், அதனால் மனிதகுலத்தின் துன்பத்திற்கு காரணமாகியுள்ள (அத்தகைய) ஆட்சி(களை) கண்டுவருகிறோம்.

மனிதனின் துன்பங்களுக்கு காரணமானதும், அல்லாஹ் (சுப்ஹான)வின் கட்டளைகளுக்கும், அவனது தூதர்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலுக்கும் எதிராகக் கிளர்ந்தெழுந்துள்ள ஆட்சி(களை) இன்று நாம் கண்டுவருகிறோம். ஆகவே, இந்த மோசமான ஆட்சி(கள்) அனைத்தும் சர்வவல்லமையுள்ள இறைவனின் (ஒரு) மனிதரைக் கொண்டு மாற்றப்பட வேண்டும். (வரக்கூடிய) அவர் இறை அறிவுறுத்தலின்படி [அல்லாஹ் (சுப்ஹான)] வின் கீழ் [இந்த உலகத்தை] நீதியுடன் ஆட்சி செய்ய வருவதோடு, அவர் இறைவனால், தன்புறமிருந்து தேர்வு செய்யப்பட்டவர்[உயர்த்தப்பட்டவர்/ தேர்ந்தெடுக்கப்பட்டவர்] ஆவார். அவர் இறை


வழிகாட்டுதல்களை மட்டுமேப் பின்பற்றுவார் (அதல்லாமல் வேறெதெனையும் பின்பற்றமாட்டார்). குறிப்பாக நாம் வாழும் இக்காலத்தில், மனிதன் [தற்காலிக-இவ்வுலக] அதிகாரத்துடன் மிகவும் ஒன்றிணைந்திருக்கிறான். அதிகாரத்தில் இருப்பவர்களோ அந்த அதிகாரத்தை விட்டுவிட விரும்பவில்லை. அதே வேளையில் மற்றவர்களோ இந்த தற்காலிக உலகின் இன்பங்களுடன் ஒன்றிணைந்திருக்கிறார்கள். ஷைத்தான் அவர்களை கவர்ந்துள்ள காரியங்களுக்கு அதிக நேரம் கொடுப்பதற்காக அவர்கள் இறைப் போதனைகளை (தமது)கால்களால் மிதித்து, துச்சமாக்கி விட்டார்கள்.

ஆகவே இது அறிவுசார், ஒழுக்கம், தொழில்நுட்ப, சமூக, பொருளாதார, அரசியல், ஆன்மீக மற்றும் மனித வாழ்வை மறுசீரமைத்தல் ஆகிய வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் தலைமைத்துவ மாற்றத்தை குறிக்கிறது. அதனால் இது மனிதகுலத்தின் வழிகாட்டுதலுக்காக அல்லாஹ் (சுப்ஹா)வால் அருளப்பட்ட இலட்சியங்களுக்கும் மதிப்புகளுக்கும் பொருந்துமாறு உள்ளது. அல்லாஹ்‌(சுப்ஹா) வின் தயவை ஈர்க்கும் அத்தகையதோர் உன்னதமான இலக்கை அடைய நாம் கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். [இறை தயவு என்பது மின்சாதன உபகரணங்கள் போன்ற பௌதீக அனுகூலம் (வசதிகள்) அல்ல: குக்கர்கள், குளிர்சாதன பெட்டிகள் - அல்லது 5 முதல் 6 கார்கள் போன்றவைகளல்ல, இவ்வுலக உதவிகளல்ல என்பதை நீங்கள் இங்கே புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்த உலகத்திலும் மறுமையிலும் [அல்லாஹ் (சுப்ஹான) வின்] இறை தயவுகள் உங்களுக்கு கிடைக்கும்; மிகவும் சக்திவாய்ந்த அத்தகைய தயவுகள் உங்கள் நரம்புகளிலும் உங்கள் இரத்தத்திலும் சுற்றிக் கொண்டிருக்கும் ஷைத்தான் என்று அழைக்கப்படும் வைரஸ் (கிருமியை) அவை கொன்றுவிடும். அதே நேரத்தில், தூய்மையான, சுத்தமான மற்றொரு இரத்தம் உங்கள் நரம்புகளில் சுற்றிக்கொண்டிருக்கும், பின்னர் ஷைத்தானால் நிரப்பப்பட்ட துளைகள் அனைத்தும் திறக்கப்படும் அளவிற்கு உங்கள் இதயங்கள் மாறிவிடும். உங்கள் இருதயங்களை கறுப்பாக்கியதும், அதிகமான பொருட்களையும், பணத்தையும் அடைய பொறாமை, வெறுப்பு, உணவின் மீதான பேரவா ஆகியவற்றால் அதை தூண்டச் செய்ததும் நிச்சயமாக ஷைத்தானாவான். எனவேதான் தூய்மையற்ற அவ்வகையான இரத்தத்தை உங்கள் இதயம் உந்தித்தள்ளும்போது உங்கள் மூளை வழியாக அந்த இரத்தம் சுழன்று நீங்கள் உலக சக்திக்காக போராடத் தொடங்குகிறீர்கள், அதன் பின்னர் மோசடி, ஊழல், தூய்மையற்ற செல்வம், போதைப்பொருளைக் கையாளுதல் – (அதாவது) உங்களை செல்வந்தராக்கிக் கொள்ள அப்பாவி இளைஞர்களை இந்த போதைமருந்து மூலம் கொல்வது போன்றவை- பொதுவான செய்தியாகிவிட்டது.

மேலும் போதைப்பொருள் மாஃபியாக்கள் மீதான பெயரளவிலானப் போர் அவர்களுக்கு எதிரான ஒரு “கசப்பான சண்டை” அதிகளவில் நடைபெறுகின்றன - – (ஆயினும்)எல்லா திசைகளிலிருந்தும் போதை மருந்துகள் வந்து கொண்டிருப்பதையும் நீங்கள் அதிகளவில் காண்கிறீர்கள். அதிகாரப் பசியுள்ள இந்த மக்கள் வேடிக்கைக்காகவும் துஷ்பிரயோகம் செய்யவும் அதிகாரத்தில் இருக்கவும் எதையும் செய்யலாம், துரதிர்ஷ்டவசமானவர்கள் மீது அடக்குமுறையைப் பயன்படுத்தி, அவர்களிடம் தவறான வாக்குறுதிகளை அளிக்கின்றனர்.

எனவே, அவர்கள் அதிகாரத்தில் இருக்க இவை அனைத்தையும் செய்கிறார்கள், பின்னர் ஒருசில நாட்களுக்குப் பிறகு [இந்த பொய்யான வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்ட பிறகு] மக்கள் தங்கள் துன்பங்களை மறந்துவிடுவதையும் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எதிரான அநீதிகளையும் அடக்குமுறைகளையும் நீங்கள் காண்பீர்கள் அதிகாரத் தாகமாகமுடைய (இந்த மக்கள்) இவர்கள் மீண்டும் அதிகளவில் பொய்யான வாக்குறுதிகளுடன் அவர்களிடம் வரும்போது,பின்னர் இந்த வகையான மக்கள்[தேசம்] இந்த தகுதியற்ற [மக்களை / தலைவர்களை] மற்றும் திருடர்களை - அலி பாபா மற்றும் 40 திருடர்களின் கதையைப் போலவே - அதிகாரத்தில் அமர்த்திவிடுகிறார்கள். இது உலகம் முழுவதும் [எல்லா நாடுகளிலும்] என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதன் ஒரு சிறு பகுதியே.

எனவே, இந்த உலகம் முழுவதையும், மறந்திடாதவாறு இஸ்லாமிய நாடுகளையும் மாசுபடுத்துகின்ற இந்த அனைத்து அசுத்தத்தையும் எழுந்து கழுகித் தூய்மைப் படுத்த வேண்டிய அலைக்கான நேரம் வந்துவிட்டது, இதனால் நாம் இறுதியாக சுத்தமான காற்றை சுவாசிக்கின்றோம், ஆன்மீக ரீதியில் கூறுவதனால் நம்முடைய படைப்பாளன் நம்மைப் படைத்தபோது நமக்கு வழங்கிய தூய்மைக்கு ஒப்பானது. ஆகவே, இறைவன் நம்மைத் தூய்மையாகப் படைத்து, இந்த உலகத்திற்கு நம்மை அனுப்பினான். நாம் அனைவரும் நம்முடைய படைப்பாளனிடம் திரும்பிச் செல்லக்கூடிய ஒரு நாள் வரும் இன்ஷா அல்லாஹ் - பின்னர் அவனிடமிருந்து - நம்முடைய படைப்பாளனிடமிருந்து நாம் பெறப்போகும் மாபெரும் நித்திய வெகுமதியுடன் நாம் அவனிடம் ஒரு தூய்மையான நிலையில் திரும்ப வேண்டும், அங்கு அவன் நம்மீது மகிழ்ச்சி அடைவான் நாமும் அவனிடம் மகிழ்ச்சி அடைவோம்.

எனவே ஜமாஅத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தின் நோக்கம் அல்லாஹ் (சுப்ஹான) வின் அனைத்து தூதர்களின் அதே நோக்கமாகும்:

هُوَ ٱلَّذِىٓ أَرۡسَلَ رَسُولَهُ ۥ بِٱلۡهُدَىٰ وَدِينِ ٱلۡحَقِّ لِيُظۡهِرَهُ ۥ عَلَى ٱلدِّينِ ڪُلِّهِۦ وَلَوۡ ڪَرِهَ ٱلۡمُشۡرِكُونَ

அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரையனுப்பினான். (அத்தவ்பா 9:34)

لَقَدۡ أَرۡسَلۡنَا رُسُلَنَا بِٱلۡبَيِّنَـٰتِ وَأَنزَلۡنَا مَعَهُمُ ٱلۡكِتَـٰبَ وَٱلۡمِيزَانَ لِيَقُومَ ٱلنَّاسُ بِٱلۡقِسۡطِ‌ۖ وَأَنزَلۡنَا ٱلۡحَدِيدَ فِيهِ بَأۡسٌ۬ شَدِيدٌ۬ وَمَنَـٰفِعُ لِلنَّاسِ وَلِيَعۡلَمَ ٱللَّهُ مَن يَنصُرُهُ ۥ وَرُسُلَهُ ۥ بِٱلۡغَيۡبِ‌ۚ إِنَّ ٱللَّهَ قَوِىٌّ عَزِيزٌ۬ ()

وَلَقَدۡ أَرۡسَلۡنَا نُوحً۬ا وَإِبۡرَٲهِيمَ وَجَعَلۡنَا فِى ذُرِّيَّتِهِمَا ٱلنُّبُوَّةَ وَٱلۡڪِتَـٰبَ‌ۖ فَمِنۡہُم مُّهۡتَدٍ۬‌ۖ وَڪَثِيرٌ۬ مِّنۡہُمۡ فَـٰسِقُونَ ()

நிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம், இன்னும், இரும்பையும் படைத்தோம், அதில் கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்து) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன். அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர். (அல் ஹதீத்:25&26)

இந்த வசனங்களில், அல்லாஹ் தனது தூதர்களை நேரான பாதையுடனும், நல்ல சித்தாந்தத்துடனும் அனுப்புகிறான் என்பதை மக்களுக்கு அவன் புரிய வைக்கின்றான், இது மக்கள் தங்கள் படைப்பாளனை அறிந்து கொள்ள உதவுவதோடு அல்லாஹ்வுக்காக தூய்மையாக இருப்பதற்கான பாதையை எடுத்துச் செல்ல அவர்களுக்கு உதவுகிறது. இவ்வாறு, அனைத்து தூதர்களின் அடிப்படை குறிக்கோள் (பணி), ஏக இறைவனாகிய அல்லாஹ் (சுப்ஹான)வின் ஆட்சிக்கு அடிபணிதலின் பக்கம் அனைத்து மக்களையும், அவர்களது காலத்தின் மக்கள் ஒவ்வொருவரையும் கொண்டு வருவதாகும் என்று குர்ஆன் நமக்கு காட்டித்தருகிறது. அனைத்து நபிமார்களின், தூதர்களின் முத்திரையான ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களூக்குப் பிறகு, அந்த மாபெரும் தூதர் செய்த அந்த மாபெரும் பணியை தொடர பரிசுத்த ஆவியுடன் வரக்கூடிய இறைவனின் தூதர் மூலமாக இந்த பணி அவர்களின் உம்மத்தில் தொடர வேண்டும்,நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவியுடன் அரேபியாவில் ஒரு மாபெரும் ஆன்மீக புரட்சியைக் கொண்டு வந்தார்கள்.

அதைச் செய்வது நிச்சயமாக எளிதானதல்ல, ஆனால் பெரும் சோதனைகள், துன்புறுத்தல்கள், புறக்கணிப்புகள், அதேப் போன்று நபி(ஸல்) அவர்களை படுகொலை செய்வதற்கான திட்டங்கள் இருந்தபோதிலும், எதிரிகள் அவர்களது உறவினர்களையும் (அவர்களின் குடும்பத்தினரையும்), அவர்கள் மீது நம்பிக்கைக் கொண்ட (அவர்களுடைய சீடர்கள் / தோழர்களை)யும் கொன்ற போதிலும் கூட நபி(ஸல்) அவர்கள் விட்டு கொடுக்கவும் இல்லை, தைரியத்தை இழந்துவிடவு மில்லை.

ஆனால், அல்லாஹ்வின் அருளால், நபி(ஸல்) அவர்கள், அதில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு சிலைக்கு பிரார்த்தனை செய்த காட்டுமிராண்டித்தனமான மக்களை கொண்டிருந்த இந்த அரேபியாவை மாற்றியமைப்பதில் வெற்றி பெற்றார்கள் ஏனென்றால் புனித கஅபாவின் எல்லைப் பகுதிக்குள் 365 சிலைகள் இருந்தன. அவர்களின் வாழ்க்கை விலங்குகளின் வாழ்க்கையை விட மோசமாக இருந்தது. அவர்கள் தங்கள் பெண் குழந்தைகளை கொன்றார்கள் [அவர்களை உயிருடன் புதைத்தார்கள்], பெண்களுக்கு கண்ணியமும் மதிப்பும் இல்லாமல் இருந்தது. மது பானம் பரவலாகி பாழாக்கியது; இன்றைய நிலையைப் போன்று போதைப்பொருளும் அதேபோன்று மதுபானமும் விளையாட்டுப் பகடைகளாய் இருந்தன. எனவே இந்த தீமைகள் அனைத்தும் அவர்களை விலங்குகளாக [விலங்குகளை விட மோசமாக] மாற்றின! அவர்களிடம் இருக்க வேண்டிய அனைத்து மனிதனின் மதிப்புக்களையும் அவர்கள் இழந்துபோனார்கள். ஆனால் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் உதவியுடன் இந்த காட்டுமிராண்டித்தனமான அரேபியாவை- காட்டுமிராண்டிகளை -அவர்களில் பெரும்பாலோரை- அவர்களை மனித உணர்வுகளைக் கொண்ட மனிதர்களாக மாற்றிக்காட்டினார்கள்.

எனவே, நமது இன்றைய நாளில், நமது பணியும் எளிதானதல்ல; நமது எஜமானரான ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் காலத்தைப் போலவே நமக்குக் காத்திருக்கும் இந்த மாபெரும் சோதனைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆனால் அல்லாஹ்வின் உதவியுடன், பொறுமையுடன்,நமது (ரப்) இறைவன் மீது நம்பிக்கையுடன் (முயலும்போது) எதுவும் சாத்தியமற்றதல்ல. இன்ஷா-அல்லாஹு தஆலா அல்-அஜீஸ், எது சாத்தியமற்றதோ அதுவும் சாத்தியமாகிவிடும். நம்முடைய படைப்பாளனிடம் இந்த முழுமையான நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும், மேலும் அவனிடம் மட்டுமே - அல்லாஹ் (தபாரக)விடம் மட்டுமேத் திரும்ப வேண்டும். (அப்போது) நீங்கள் வேறொரு உலகத்தைக் காண்பீர்கள், ஒரு வாள், ஆயுதம் அல்லது அணு குண்டை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்க மாட்டோம்.

நம்முடைய சொந்த போர்த் தளவாடங்கள் என்பது நேர்மையான பிரார்த்தனையும், வானிலிருந்து மழையைப் போல் கீழே இறங்கிக் கொண்டிருக்கும் இறை கட்டளைகளுக்கு முழுமையாகக் கீழ்ப்படிதலை மெய்ப்பித்துக் காட்டுவதுமாகும். நாம் நமது படைப்பாளனுக்கு ஒரு கருவியாக மட்டுமே (செயல்பட்டுக் கொண்டு) இருப்போம், ஏனென்றால் நமக்கு [நம்மிடம் சுயமாக] எந்த சக்தியும் இல்லை.

அவனே [அல்லாஹ் -இவை] அனைத்தையும் செய்யக் கூடியவன் ஆவான்,

ஆயினும் (அது) நாம் அவனிடம் அதிகமாக பிரார்த்தனை செய்து நமது நம்பிக்கையை அவன்மீது வைத்து அவனுடைய கட்டளைகளையும், அதேபோன்று இந்த நூற்றாண்டில் ஆன்மீக புரட்சியை கொண்டுவருவதற்காக அவன் தேர்ந்தெடுத்த ஒருவருக்கு அவன் அனுப்புகின்ற (இறை)அறிவுறுத்தல்களையும் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஆகும்.

எனவே இந்த ஆன்மீகப் புரட்சியுடன், இப்போது அதிகாரத்தில் உள்ள அனைவரையும் பதவி நீக்கம் செய்ய வேண்டியிருக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை - ஏனென்றால் அவர்கள் அதிகாரத்தின் நாற்காலியில் அவர்களால் அமர முடியும் என்பதற்காக அதிகமான மக்களை தவறாக [நேர்மையின்மை-பொய்மையின் பக்கம்] மட்டுமே வழிநடத்தியுள்ளனர்.

இவ்வகையான வஞ்சகக்காரர்கள் - இந்த பொய்யர்கள் / மோசடி செய்பவர்கள் - அல்லாஹ் (சுப்ஹான)வின் படைப்பின் செலவில் அதிகாரத்தை பிடித்திருக்க எந்தவொரு உரிமையுமில்லை - மேலும் அனைத்து மனிதகுலத்தின் தலைமையும் அல்லாஹ்(சுப்ஹான)வால் நியமிக்கப்பட்ட வழிகாட்டுதலைக் கொண்டும் வாழ்க்கை முறையைக் கொண்டும் ஆட்சி செய்வோருடன் எஞ்சியிருக்க வேண்டும். இன்ஷா-அல்லாஹ்.

முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் இத்தகைய புரட்சியின் முக்கியத்துவத்தை மறந்துவிட்டார்கள் என்பது வருந்தத்தக்கது. அவர்களில் பெரும்பாலோர் இறைவனின் போதனைகளை ஓரத்தில் (ஒதுக்கி) வைத்துவிட்டார்கள், கெட்ட காரியங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், அவர்கள் தங்கள் வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும் என்றும் இந்த இன்பமானது வேடிக்கை, வீண் விளையாட்டுக்கள், மது பானங்கள், போதை மருந்துகள் போன்றவற்றில் காணப்படுகிறது என்றும் கூறுகிறார்கள், முஸ்லிம்களும் கூட தங்களின் சுய இலாபங்களைப் பெற வேண்டும் என்பதற்காக அவர்களும் இந்த உலகத்தை பௌதீக ரீதியான கண்ணோட்டத்திலேயே காண்கிறார்கள், அது தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ இருந்தாலும் சரி,தங்களை ஷைத்தானிடத்தில் மாட்டிக்கொள்ள அனுமதித்துள்ளனர், ஆனால் உண்மையில் இவை அனைத்தும் யதார்த்தமானவை அல்ல. இஸ்லாம், முஸ்லிம்கள், நாம் அனைவரும் ஒரே உடல் என்பதையும், ஒவ்வொரு முஸ்லிமின் மையப்பகுதி என்பது அவனது / அவளது தீனில்-மார்க்கத்தில் தான் உள்ளது என்பதையும், தற்காலிகமான –இவ்வுலக\பௌதீக விஷயங்களைப் பின்தொடர்வதில் இல்லை என்பதையும் அவர்கள் உணரவில்லை. நமக்கு பௌதீக விஷயங்கள் தேவையில்லை என்று நான் கூறவில்லை. மாறாக, பூமியில் நம்முடைய சொந்த நிலைத்து நிற்றலுக்கும், நமது குடும்பங்களுக்கு உணவளிக்கவும் அடைக்கலம் வழங்கவும், இஸ்லாத்தை இன்னும் வலுவூட்ட அல்லாஹ்வின் பாதையில் பங்களிப்பு செய்வதற்கும் இது ஒரு குறிப்பிட்ட அளவிலேயேத் தேவையானதும் போதுமானதாகவும் இருக்கும்.

ஆனால் ஒரு குறிக்கோள்\ நோக்கமானது குர்ஆனில் தெளிவாக வறையறுக்கப்பட்டும், ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களால் தவறாமல் பின்பற்றப்பட்டு, அத்துடன் இப்பணியைத் தொடரும் பொறுப்பை உம்மத் பரம்பரையாக பெற்றுக்கொண்டபோதிலும், (அதற்கு மாற்றமாக) துரதிர்ஷ்டவசமாக, படிப்படியாக, முஸ்லிம்கள் (இன்று) தங்களது அசல் நோக்கத்தை ஒன்று நீர்க்கச்செய்துவிட்டனர் அல்லது உருமாற்றிவிட்டனர்; முஹம்மது(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத்-குடிபெயர்ந்ததையும், அரேபியாவில் குஃப்ர் தலைவர்களுக்கு எதிரான அவர்களின் போர்களையும் தவிர்த்து, மக்காவில் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்கள் வாழ்க்கையின் ஆராம்பக் காலம் தொட்டு அதாவது தொடக்கதிலிருந்தே நபி(ஸல்) அவர்களின் உண்மையான குறிக்கோள்- உண்மையான நோக்கம்-குறித்து அது ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களாக இருப்பினும், அல்லது அவர்களது தோழர்களாக இருப்பினும், இன்னும் அவர்களது எதிரிகளாகவே இருந்தபோதிலும் எவருக்கும் (இந்த நோக்கத்தில்) எந்த சந்தேகமும் இருந்ததில்லை என்ற உண்மைக்கு சாட்சியம் அளிக்கின்ற பல சம்பவங்கள் உள்ளன. இது குறித்து, நான் உங்களுக்கு ஒரு சிறிய உதாரணத்தை (சம்பவத்தை) கூறுகிறேன்:

ஒரு சந்தர்ப்பத்தில், மக்காவின் இணைவைப்பு ஆட்சியாளர்களில் ஒருவரான உத்பா இப்னு ரபியா, நபி(ஸல்) அவர்கள் தனது பணியைக் கைவிடும்படி அவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் குர்ஆனின் ஒரு பகுதியை ஓதுவதைக் கேட்டார்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடைய பணியின் தன்மையை-நோக்கத்தை புரிந்து கொள்ள அவருக்கு இதுப் போதுமானதாக இருந்தது. [பின்னர் ஒருபோதும் அவர் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களை நம்பவில்லை என்றாலும், அந்த நேரத்தில்] ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களை குறைஷியர்கள் எதிர்த்தால் ஏற்படும் விளைவுகள் குறித்ததொரு சிந்தனை அவருக்கு இருந்தது.

உத்பா இப்னு ரபியா மற்ற குறைஷிய தலைவர்களிடம் திரும்பியபோது, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கும், அவர்களது பிரச்சாரப்பணிக்கும் இடையில் ஒரு தடையாகிடக் கூடாது என்று அவர்களை (குறைஷ்யரை) சமாதானப்படுத்த முயன்றார், ஏனென்றால் நபி(ஸல்) அவர்களது செய்தி விரைவாக பரவும் என்பதை அந்த ஓதுதலைக் கேட்டதிலிருந்து, அவர் (உத்பா) புரிந்துக்கொண்டார் - இவ்வாறு இருந்தபோதிலும், அவருக்கு [உத்பா இப்னு ரபியா] அல்லாஹ்வின் நபி [ஹஸ்ரத் முஹம்மது] (ஸல்) அவர்கள் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் அதற்குப் பிறகு, அவர் [உத்பா] என்ன செய்தார்? குறைஷியர்கள் நபி(ஸல்) அவர்களுக்கும் அவர்களது பிரச்சாரப்பணிக்கும் இடையில் வருவதைத் தடுக்க அவர் (உத்பா) முயன்றார், [நபி(ஸல்) அவர்களுடன் சண்டையிடுவதிலிருந்தும் அவர்களைத் (குறைஷியர்களைத்) தடுத்தார்]. ஆனால் மற்ற அரேபியர்கள் நபி(ஸல்) அவர்களைக் கொல்ல முற்பட்டால் பின்னர் குறைஷிய தலைவர்களின் மனதில் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் மரணத்தை (குறித்து எதையும்) வைத்திருக்க தேவையில்லை. ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களின் பிரச்சாரப்பணி பரவி, நபி(ஸல்) அவர்கள் அரேபியர்களை விட மேன்மையைப் பெற்றால், பின்னர் நபி(ஸல்) அவர்களுடைய ஆட்சி அரேபியர்களுக்கும் [குறைஷியர்களுக்கும்] கூட உரியதாகிவிடும் என்றும் அவர் (உத்பா) அவர்களிடம் (குறைஷிய தலைவர்களிடம்) கூறினார்.

வேறு வார்த்தைகளில் கூறினால், அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வின் தூதராக ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் மீதும் (அவர்) நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என்ற உண்மை இருந்த போதிலும், (மனதின்) அடி ஆழத்தில் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் சமயச் சொற்பொழிவு தனித்துவமானது என்பதையும், விரைவில் அரேபியாவின் அனைத்தும் அவர்களுடைய செய்தியால், வேறுவிதமாகக் கூறினால், அல்லாஹ்வின் செய்தியால் பலனடையும் என்பதையும் அவர் ஏற்கனவே (நன்றாக) அறிந்திருந்தார்.

அதேபோன்று, இன்று நம் எதிரிகள் நம்மை தாழ்ந்தவர்களாக கருதிக் கொள்கிறார்கள். ஆனால் நாளை அல்லாஹ் தனது ஒளியை, உண்மையின் வெளிச்சத்தையும், அவனது கலீஃபத்துல்லாஹ்வின் உண்மைத் தன்மையையும் பரவச்செய்யும்போது, இறை வெளிப்பாட்டை ஏளனம் செய்தவர்களின் [கண்களில் இருந்து] வழிவது [சாதாரண] கண்ணீராக இருக்காது, மாறாக இரத்தத்தின் கண்ணீராக இருக்கும். மக்களுக்கு தாமதமாகிப்போகும் முன்பே அல்லாஹ் அவர்களின் இதயங்களைத் திறப்பானாக!. 

இறை கருணை அவர்கள் மீது பொழிந்து, அவர்கள் மனந்திரும்பி தங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக் கொள்ளட்டுமாக!, மேலும் அவர்களின் நம்பிக்கை [ஈமான்] மற்றும் இஸ்லாம் பலப்படுத்தப் படட்டுமாக! இன்ஷா-அல்லாஹ், ஆமீன்.


Thursday, August 31, 2023

உம்மத்தின் பரிபூரண முன்னேற்றத்திற்கான செயல்முறையும் புரட்சியும்

ஜூம்ஆ குத்பா நாள் 10-09-21-02 - ஸஃபர்-1443

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபிகளுக்கும், அனைத்து முஸ்லீம்களுக்கும் தனது ஸலாத்தினை தெரிவித்தப் பிறகு ஹஸ்ரத் ஃகலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷ்ஹத் தஅவூது மற்றும் சூரா ஃபாத்திஹா ஓதியப் பின் “உம்மத்தின் பரிபூரண முன்னேற்றத்திற்கான செயல்முறையும் புரட்சியும்” என்ற  தலைப்பில் தனது ஜுமுஆப் பேருரையை வழங்கினார்கள்,

நமது  நேசத்திற்க்குரிய இறைத்தூதர் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஒரு கவலை இருந்தது. இ(க்கவலையான)து அல்லாஹ்(தபார)விடம் இரவுகளின் போது பிரார்த்தனை செய்யுமாறு அன்னாரை விழித்திருக்க வைத்தது. அன்னார் தமது (உம்மத்)சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் பண்பு-நலனிற்காகவும் அதிகம் கவலையடைந்தார்கள். "அல்லாஹ்வே! எனது உம்மத்தே, எனது உம்மத்தே!" [யா ரப்பி உம்மத்தி! (என்று கூறி!], மன்றாடுவது அன்னாரது வழக்கமாகும். இது உண்மையில் நமது பாசத்திற்குரிய இறைத்தூதர்(ஸல்) அவர்களது நேசத்தின் அழைப்பும் முழக்கமுமாகும்; அன்னாரது உம்மத் மீதான அன்னாருக்கிருந்த ஆழமான நேசமானது அன்னாரை எப்போதும் அல்லாஹ்விடம் "உம்மத்தி, உம்மத்தி" என்று கூறி பிரார்த்திக்கச் செய்தது.

அவநம்பிக்கை மற்றும் அறியாமையின் வெறுப்பிலிருந்து, இந்த உன்னத திருத்தூதர்(ஸல்) அவர்கள் அம்மக்களை ஒரு பரிபூரணமான நம்பிக்கையை நோக்கி வழிநடத்திச் சென்றார்கள். அதற்காக அம்மக்கள் பல சோதனைகளைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது, அது அம்மக்களை உறுதியான [நிலையான] நம்பிக்கையாளர்களாக மாற்றியது. 

இஸ்லாமிய அடிப்படையில் நாம் உம்மத்(சமுதாயத்)தின் பரிணாமம் மற்றும் புரட்சியைப் பற்றி பேசும்போது, உலகத்திற்கு எதிராக போராடுவதற்கு ஆயுதங்களை உயர்த்தி(கையிலெடுத்து) அதாவது, வாள்கள், அல்லது துப்பாக்கிகள் அல்லது வேறு எந்த கொலைகார ஆயுதத்தின் பயத்தினைக் கொண்டு அல்லாஹ்வின் ஏகத்துவத்தின் பக்கம் மீட்டுக் கொண்டு வருவது போல் அல்ல.. இந்த புரட்சியை உலக வழியில் அல்லாமல் ஆன்மீக வழியிலேயே அதிகம் புரிந்து கொள்ள வேண்டும். 

இக்காலத்தின் ஒரு முஸ்லீமாகவும் கலீஃபத்துல்லாஹ்வாகவும் , அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட அடியான் மற்றும் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களைப் பின்பற்றும் பணிவுள்ள அடியான் என்ற முறையிலும், உங்களது நஃப்ஸ்-ஏ-அம்மாரா (என்ற விலங்கின்) நிலையிலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்து படிப்படியாக உங்களை (நீங்கள் அல்லாஹ்விடம் முற்றிலும் திருப்தியடைந்தவாறும் அல்லாஹ் உங்களிடம் முழுமையாக திருப்தியும் அடைகின்ற]. முத்மயின்னா (என்ற) நிலைக்கு படிப்படியாகக் கொண்டு வருவது(உயர்த்துவது) இந்த சகாப்தத்தில் எனது கடமையாகும். 

இதற்காக, "ஓ, எங்களிடையே ஒரு கலீஃபாத்துல்லாஹ்     (தான்) இருக்கிறாரே, நான் அவரிடம் பிரார்த்திக்கச் சொல்வேன். அவருடைய பிரார்த்தனையே (எங்களுக்குப்) போதுமானதாகும்." (என்று கூறுவதுப்) போதுமானதாகாது:  இல்லை! இவ்வாறு ஒருபோதும் சிந்திக்க வேண்டாம். அல்லாஹ் உங்களது இதயத்தையும் அவனது வழியில் (நீங்கள்) செய்கின்ற முயற்சிகளையும் பார்க்கிறான். மிருகத்தனமான (நஃப்ஸ்-ஏ-அம்மாராவின்) நிலையிலிருந்து உங்களை அகற்றுவதற்காக அல்லாஹ் உங்களில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்,அதில் அவனுடன் இணங்கி இருக்கவும், உங்களது நம்பிக்கையுடனும்  அல்லாஹ் உங்களுக்கு பரிந்துரைத்த்திலிருந்தும் மற்றும் வழங்கியவற்றிலிருந்தும் நீங்கள் திருப்தி அடைவீர்கள். உங்கள் நம்பிக்கையுடன் இணக்கத்தில் ஆகுவதற்கு உங்களை வழிநடத்த உங்களில் ஒரு பெரும் மாற்றம் இருக்க வேண்டும் அங்கு அல்லாஹ் உங்களுக்கு பரிந்துரைத்த வழங்கியதை கொண்டு நீங்கள் திருப்தி அடைவீர்கள்.

உங்களுக்காக பிரார்த்தனை செய்ய கலீபாத்துல்லாஹ்விடம் கேட்பது உண்மையில் ஒரு பெரிய நல்லொழுக்கம், ஆயினும் நீங்களும் அல்லாஹ்வின் பாதையை ஒருபோதும் கைவிட்டுவிடக்கூடாது. இந்த பிரபஞ்சத்தின் ரப்பின் [இறைவனின்] கதவிற்கு முன் நீங்கள் ஒரு பிச்சைக்காரராக இருக்க வேண்டும். 

ஹஜ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத் இன்று (பல) பிரிவுகளாகவும், உட்பிரிவுகளாகவும் பிரிந்துபோய்விட்டது ஏனென்றால் அதற்கு காரணம் அவர்கள் நம்பிக்கையின் சாராம்சத்தின் அந்த சாவியை இழந்துபோய்விட்டார்கள், அதனால் அவர்கள் அல்லாஹ் மற்றும் அவனது தூதர்(ஸல்) அவர்களின் மீதான நம்பிக்கைக்கு உண்மையுடன் நடந்து கொள்ளவில்லை.அல்லாஹ் தனது படைப்புகள் அவனை வழிபடவும்,அவனை மட்டுமே வணங்கவும், ஒரு நல்ல எதிர்காலத்திற்காக அவனது வழிகாட்டுதலைத் தேடிக்கொள்ளவும் அவன் விரும்புகிறான்.

ஷைத்தானிடமிருந்து எவருமே விடுபட்டவர்களாகவோ அல்லது பாதுகாக்கப்பட்டவர்களாகவோ இல்லை. ஷைத்தான் எப்போதும் ஆஜராகி நம்பிக்கையாளர்களை தவறாக வழிநடத்திடவும் அவரை தீமையை செய்திடவும் தூண்டிவிடுகிறான், அதன் பின்னர் நம்பிக்கையாளர் (அதற்காக) மனம்வருந்தி அல்லாஹ்விடம் திரும்பி அவனிடம் பாவமன்னிப்பைத் தேடுகிறார். உண்மையில், அல்லாஹ்வே மாபெரும் மன்னிப்பாளனாவான். அவன் மன்னிப்பளிப்பதைப் போன்று எவரும் மன்னிக்க மாட்டார்கள். ஒருவர் அவனுக்கு மட்டுமே அஞ்சி தீமையை விடிடும் விலகிக் கொள்ள வேண்டும்.. அதன் காரணமாக சுவர்க்கத்தின் தோட்டங்கள் அவருக்கு வழங்கப்பட்டு விடலாம்.

இன்று, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத் தன்னை மிகவும் சிரமத்தில் இருப்பதை காண்கிறது, ஏனென்றால் அது அல்லாஹ்வின் கயிற்றை விட்டுச் சென்று, உலக செல்வம், இன்பம் மற்றும் ஈர்ப்புகளின் கைகளில் ஆறுதலைப் பெறுகிறது. ஆனால் அதற்காக நாம் செயலற்று போய் இருக்க வேண்டும் சூழ்நிலை சீர்கெட்டு போய்விடட்டும் என்பதுதான் அர்த்தமா? இல்லை!

தீமை யாரை வேண்டுமானாலும் தீண்டலாம். எவரும் குறைபாடற்றவர்களாக இல்லை, ஆயினும் (உங்களில்) மிகவும் கண்ணியத்திர்க்குரிய நபர் யாரென்றால், எவர் தனது தவறை ஒப்புக்கொண்டவராகவும், ஷைத்தான் அவரைப் பார்க்கும்போது, அவரிடமிருந்து தப்பி ஓடுகின்ற அத்தகைய ஒரு வழியில் தனது வாழ்க்கையை மாற்ற கடும்முயற்சி மேற்கொள்பவரே ஆவார், ஏனென்றால் அவன்(ஷைத்தான்) சர்வவல்லமையின் அடையாளத்தை-முத்திரையை அந்த மனிதரில் காண்கிறன். ஒரு நபரோ,(அல்லது) ஒரு உம்மத் ஒட்டுமொத்தமாகவோ அல்லாஹ்வின் அடையாளம் அவர்கள் மீது, (அதாவது)தம்மீது பதிந்திருப்பதற்கு  கடுமையாக முயற்சி செய்தால், பிறகு எவரும் ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் செல்ல  மாட்டார்கள். நினைவில் கொள்ளுங்கள்! ஒரு சோதனைவரும்போது, நம்பிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள்,அதன் பின்னர் அல்லாஹ்வின் கண்களில் குற்றவாளிகள் என்று கருதப்பட்டவர்கள் எதிர்காலத்தை மேம்படுத்திட அல்லாஹ் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்துகிறான். அந்த மக்களின் நம்பிக்கையின் எதிர்காலத்தை சிறப்பாக்கிடவும், அவர்களின் தவறுகளையும் பாவங்களையும் உணரச் செய்திடவும், வாழ்க்கையில் நேர்மறையைத் தழுவ அனைத்து எதிர்மறைகளை விட்டுவிடவும் இத்தகைய சூழ்நிலையை அவன் பயன்படுத்துகிறான். இதற்கு காரணம் இஸ்லாம் என்பது அனைத்து  நேர்மறைகளையும் பற்றியதாகும். அனைத்து முஸ்லிம்களும் தனது சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை இழிவாகப் பார்ப்பதை விட்டு விட்டு ஒரே நோக்கத்திற்காக ஒன்று சேரும் போது தான் உம்மத் செழித்தோங்கும். - அந்த நோக்கமானது மற்ற நம்பிக்கையாளர்களின் குழுக்களை நசுக்க வேண்டும் என்று அர்த்தத்தில் அல்லாமல், அதற்கு மாறாக உலகில் அல்லாஹ்வின் ஏகத்துவத்தை நிலைநாட்டவும், மக்களை அவனை நோக்கி மட்டுமே வழிநடத்திடவும் மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதாகும். இஸ்லாம் என்பது அனைத்தையும் கொடுப்பது மற்றும் பகிர்வது, அன்பைக் கொடுப்பதும் மற்றும் அன்பைப் பகிர்ந்து கொள்வதுமாகும்.

அந்த நிலையில் நமது உன்னத நபி ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் பரிபூரணமான முன்மாதிரியாவார்கள். அவர்களது கருணையானது பல இதயங்களையும் வெற்றிகொண்டது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளும் மாறினார்கள். அவர்களிடம் ஆன்மீகம் மலர்ந்தது. அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் சுவர்க்கத்தை இன்று ஒரு தட்டில் வழங்கும் போது பிறகு எதற்காக, நீங்கள்  விலகிச் சென்று உங்கள் முதுகுகளை திருப்பிக் கொள்கிறீர்கள்?

சகோதரர்களும் சகோதரர்களும் ஏன் சண்டையிட்டுக் கொள்கிறார்கள்? அங்கு ஏன் புறம்பேசுதல் இருக்கிறது? ஒரு முஸ்லீம் தனது சகோதரரின்  கௌரவத்தையும் கண்ணியத்தையும் எதனால் மிதித்துத் தள்ளுகிறார்? உண்மையில் ஒரு நம்பிக்கையாளர் மற்றொரு நம்பிக்கையாளரின் கண்ணாடி ஆவார் (முஸ்லிம்). ஒரு நம்பிக்கையாளர் தவறு ஏதேனும் செய்தால், பின்னர் அவரது மற்ற முஸ்லீம் சகோதரர் அவரது தவறுகளை அமைதியாக ஒரு கண்ணாடியைப் போன்று எந்த ஒரு பொதுவான கேலியும் அவமதிப்பும் இன்றி அவருக்கு அதனை சுட்டிக் காட்டிட வேண்டும்.

அந்த சகோதரரும் தான் செய்த தவறை புரிந்து கொண்டு தன்னை சீர்திருத்திக் கொண்டால், அது உண்மையில் அவருக்கு நல்லதாக இருக்கும், இல்லையென்றால், தனது அடிச்சுவட்டிலிருந்து, அல்லாஹ்வின் கட்சியில் இருந்து நீக்கி, அத்தகைய நபரை அல்லாஹ் கையாளுவான், [ஹிஸ்ப் அல்லாஹ்].

அது ஒரு நபராக இருந்தாலும், அல்லது முழு உம்மத்தாக  இருந்தாலும் சரி, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களுடன் தொடர்புடைய எல்லாவற்றிற்கும் மிகவும் கவலைப்படுபவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் நேரான பாதையில் நிலைத்திருக்கவும், ஷைத்தானால் தூண்டப்(பட்டு வழிகெடுக்கப்)படாமல் இருக்கவும், மேலும் அல்லாஹ் அவர்களிடத்தில் நம்பி ஒப்படைத்துள்ள நம்பிக்கைகளுக்கு எப்போதும் (அவர்கள்) உண்மையுடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் நபி(ஸல்) அவர்கள் இரவும் பகலும் அவர்களுக்காக (மக்களுக்காக)  பிரார்த்தனை செய்துவந்தார்கள். ஒரு மனிதனுக்கான இந்த கடமையில் அவனது நம்பிக்கை என்பது அல்லாஹ் மற்றும் இஸ்லாத்தின் அனைத்து கோட்பாடுகளின் மீது நம்பிக்கை கொள்வதும், அது போன்றே அவரது குடும்பத்திற்கும் அவருக்குமான அவரது கடமைகளில் அவர் தன் எண்ணங்களையும் செயல்களையும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும். எண்ணங்கள் மற்றும் செயல்களில் தங்களை தூய்மையாக வைத்துக்கொள்ள கடும்முயற்சி செய்யும் அத்தகைய நம்பிக்கையாளர்கள், அல்லாஹ்வின் வாசலில் தங்களின் நிலைநிறுத்துதல் மூலம் அல்லாஹ்வின் கதவில் ஒட்டப்பட்டு(ஒன்றியவர்களாக) அவனது இரட்சிப்பிற்காக அவனிடம் தொடர்ந்து மன்றாடுபவர்கள், இறுதியில் வெற்றி பெறுவர்கள். அவர்களே வெற்றியாளர்களும் ஆவர். இந்த மக்களைத்தான் அல்லாஹ் கருணையுடன் பார்க்கிறான், மேலும் அவர்களின் வாழ்க்கையை எத்தகைய வழியில் மாற்றுகிறான் என்றால் அவர்கள் மீண்டும் பிறந்ததைப் போன்று அவர்களின் எண்ணங்கள் மற்றும் செயல்களில் தூய்மையாக இருக்கிறார்கள்.அவர்களின் சிந்தையில் இருந்த தீமைகள் அனைத்தும் அழிக்கப்பட்டு இந்த வாழ்விலும் மறுமையிலும் ஒரு நல்ல எதிர்காலத்திற்காக இப்போது நல்ல விஷயங்கள் மட்டுமே அவர்களின் சிந்தனைகளில் பதியப்பட முடியும் என்பதைப் போன்றதாகும்.

எனவே, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களே அந்த ரஹ்மத்துல்-லில்- ஆலமீன் ஆவார்கள் [அனைத்து உலகங்களுக்கும் அருட்கொடை ஆவார்கள்.] அன்னாரது மக்களின் இதயங்கள் மற்றும் (அவர்களது)மிருக நிலையை அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்காகவும் தங்களின் வாழ்வை எப்போதும் தியாகம் செய்யத் தயாராக இருந்த  நம்பிக்கை கொண்டவர்களாக‌ மாற்றுவதில் வெற்றி பெற்றார்கள்.

எனவே, இஸ்லாத்தின் தீன் என்பது  பாவத்தில் உள்ள தங்களின் கடந்த கால சோகமான வாழ்க்கைகளை புறந்தள்ளி விட்டு,  மனந்திரும்பியும்,   அல்லாஹ்வின் உலகின் பக்கம் அழைப்பதற்கு தங்களை நல்லொழுக்கத்தின் முன்மாதிரியாக மாற்றிக் கொள்ளவும் தயாராக இருக்கும் அந்த பக்தர்களை நாடுகிறது. பாவங்களையும் தவறுகளையும் செய்த போதிலும் தங்களின் குற்றங்களை உணர்ந்து தங்களின் வாழ்வை சிறந்தவையாக மாற்ற கடும் முயற்சி செய்பவர்களின் இதயங்களின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். ஆன்மீக விஷயங்களில் முன்னேற்றம் என்று கருதப்படுவது, ஒரு நம்பிக்கையாளரோ அல்லது நம்பிக்கையற்றவரோ கூட அல்லாஹ்வின் உண்மையான தீனில் நம்பிக்கையையும் இறை பக்தியையும் பெறுகின்றார், மேலும் அல்லாஹ்வின் வழியில் உதவுவதற்கு சிறந்த நடத்தையின் மூலம் இஸ்லாத்தில் தன்னை பரிபூரணமாக்கிட (முழுமைப்படுத்திட) கடும்முயற்சி மேற்கொள்கின்றார்.

உண்மையில் நல்ல நடத்தை பெரும் வெகுமதிகளைப் பெறுகிறது. நல்ல நடத்தை மற்றவர்களை உங்களிடம் ஈர்க்கச் செய்கிறது மேலும் அவர்கள் உங்களிடம் ஈர்க்கப்படும் போது,அவர்கள் இஸ்லாத்தின் பக்கம்  ஈர்க்கப்படுகிறார்கள். இஸ்லாம் நிலைநாட்டுவதன் பக்கம் அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள்..  ஏனென்றால் நீங்கள் உங்கள் நல்ல நடத்தையின் மூலம் இஸ்லாம் எதற்காக நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை செயல்படுத்துகின்றீர்கள். ஆனால் நம்பிக்கையாளர் அல்லாஹ்வின் கட்டளைகளை விட்டு விலகினால், ஷைத்தான் அவருடன் நட்புக் கொண்டு அவரை சரியான பாதையிலிருந்தும் விலகிச் செல்ல வைத்துவிடுவான். அந்த நேரத்தில், அவர் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்களை  அவர் இழந்துவிடுகின்றார்.

எனவே, ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தில் உள்ள எனது ஸஹாபாக்களும் மற்றும் முஹம்மதிய உம்மத்தின் அனைத்து முஸ்லிம்களும் அல்லாஹ்வுக்கும் இஸ்லாத்திற்கும் செய்யவேண்டிய உங்களது கடமைகளை நீங்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. 

இஸ்லாம் உங்களது குறிக்கோளாக இருக்க வேண்டும்,அதாவது அல்லாஹ்விடத்தில் எல்லையற்ற அடிபணிதலையும், உங்களது சுற்றுப்புறங்களில் உள்ள அனைத்து சகப்பிரிவினர்கள் மற்றும் குழுக்களுக்கிடையே அமைதியையும் புரிதலையும் பரப்புதல் வேண்டும். உங்களது அன்றாட வாழ்வில் இஸ்லாம் செயல்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அப்போது மட்டும்தான், இஸ்லாத்தின் விளைவு, பல்வேறு திசைகளில் ஒளியின் கதிர்களை பிரதிபலிக்கின்ற ஒரு (Prism)முக்கோண கண்ணாடியைப் போன்று அனைவரின் மீதும் பிரதிபலிக்கமுடியும். அனைத்து நம்பிக்கையாளர்களும் உண்மையில் ஒரே மாதிரியல்ல, ஆயினும் அனைவரும் நம்பிக்கையாளர்களே. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பார்வையில் அவனுடைய திருப்திக்கும், மகிழ்ச்சிக்கும் மிக நெருங்கிய நிலைக்கு உங்களை உயர்த்திட கடும்முயற்சி(களை) மேற்கொள்ளுங்கள்.

இதுவே (உம்மத்தின்)முழுமையான வளர்ச்சிக்காக நீங்கள் அனைவரும் செய்ய வேண்டிய (உண்மையான)முயற்சியாகும், அதன் காரணமாக அனைத்து தூதர்களிலும் பரிபூரணமானவரும்,  முத்திரையானவருமாகிய (எம்பெருமானார்) ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் பரிபூரண உம்மத்தாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்.

இஸ்லாத்தின் திருத்தூதர் ஹஸ்ரத் நபி(ஸல்) அவர்களின் ஸஹாபாக்களுக்கு [அருளுக்குரிய தோழர்கள்] அல்லாஹ்விடமிருந்து பல சோதனைகளுக்கும் எச்சரிக்கைகளுக்கும் பிறகு, அவர்களால் அதனை செய்ய முடிந்தது என்ற போதிலும், அவர்களில் பலர் இறை இன்பத்தின் நிலைகளை அடைவதில் வெற்றி பெற்றனர். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அல்லாஹ்வின் தூய்மையான மார்க்கத்திற்கும் அதாவது இஸ்லாத்திற்கும் தங்கள் உயிரை கொடுக்க அவர்கள் தயாராக இருந்தனர்.

அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் கவனம் செலுத்த தங்களின் இம்மை வாழ்விற்குரிய ஆசைகளை\இச்சைகளை பின்தள்ளி விட்டபோதும், ஓர் உண்மையான இறை பக்தியுள்ள ஆன்மீக புரட்சியை அரேபியாவிலும் அதன் விளைவாக உலகிலும் கொண்டு வருவதிலும் அவர்கள் முழுமையாக ஆன்மீகத்தின் வேறொரு நிலையை அடைந்திருந்தார்கள்.

இதன் பக்கமே இறை நம்பிக்கை (ஈமான் நம்மை) அழைக்கின்றது. இது இறைபற்றுக்காக\முழுமையான ஈடுபாட்டிற்காக உங்களை அழைக்கின்றது. ஓர் உண்மையான இறைவனின் மீதுள்ள உங்களது நேசத்திற்க்காக இது உங்களை அழைக்கின்றது.அவனுடைய வழிபாட்டில் அவனுக்கு எந்த இணையும் இல்லை. இது தியாகத்திற்காக (உங்களை) அழைக்கின்றது.இது கருணைக்காக (உங்களை) அழைக்கின்றது. இது ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்திற்காக (உங்களை) அழைக்கின்றது. அது மனித குலத்தை மனிதாபிமானத்தோடும், உங்கள் சக மனிதர்களிடம் உண்மையுடன் நடந்து கொள்வதற்கும் (உங்களை) அழைக்கின்றது. அது சமத்துவம், நேர்மை மற்றும் நீதிக்காக (உங்களை) அழைக்கின்றது. அது (உங்களை) நேர்வழியின் பக்கம் அழைக்கின்றது. நீங்கள் அறிந்திருப்பீர்களேயானால், (அதற்கு) ஈடாக நீங்கள் அல்லாஹ்விடமிருந்து (அவனது)நேசத்தைப் பெற்றுக் கொள்வது  அதற்குத் தகுந்ததாக இருக்கும். இஸ்லாத்தின் உண்மையான நோக்கத்தை புரிந்து கொண்டவர்கள் அதன் நிறைவேற்றத்தை நோக்கி அணிவகுப்பவர்களாக இருப்பார்கள். அதனைப் புரிந்து கொள்கின்ற (பாக்கியத்)தை இழப்பவர்களைப் பொருத்த வரையில், அவர்கள் எல்லா அருட்களையும் இழந்து போய்விடுகின்றனர். நம்பிக்கையின் சாராம்சம் எப்போதும் இருந்து கொண்டிருக்க வேண்டும். அனைத்து சோகங்களும்\துயரங்களும் மகிழ்ச்சியாக மாற்றப்பட வேண்டும்.

நீங்கள் அல்லாஹ்வின் வழியில் (அவனுக்காக) ஏதாவது செய்யும்போது, அது உங்கள் இதயங்களில் மகிழ்ச்சியை வளரச்செய்கின்றது. அல்லாஹ்வின் (வழியில் அவனது) நோக்கத்திற்கான (உங்களது) இந்த பணியானது அதிகமான மகிழ்ச்சியைப் பெற்றுத்தரும்.

இந்த உலகமும், அது உங்களுக்கு பெற்றுத்தருவதுமே சந்தோஷம் என்று நினைத்து விடாதீர்கள். அவ்வாறல்ல! மகிழ்ச்சி என்பது உங்களிடம், உள்ளதை இந்த உலகிற்கு (நீங்கள்) வழங்குவதிலேயே உள்ளது, அதன் காரணமாக நீங்கள் அல்லாஹ்வின் கருணையிலும் திருப்தியிலும் அனுமதிக்கப்படுவீர்கள். நமது உன்னத  திருநபி ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் உம்மத் இன்று இதை உணர்ந்துகொண்டால், அது முன்னேற்றத்திற்கு மேல்  முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும்.

ஆயினும் அனைத்து முஸ்லீம்களும் தங்களை ஒரே சகோதரத்துவத்தின் அடிப்படையிலேயே சிந்திக்க வேண்டும். ’உம்மத்’ என்பது இதனையே குறிக்கின்றது. நீங்கள் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். நாம்

ஒன்றாக இருக்க வேண்டும். ஒரே உம்மத் (உம்மத்-ஏ-வாஹிதா(வாக இருக்க வேண்டும்)). அனைத்து மனித குலத்தையும் அவர்கள் அனைவரும் ஒரே சமூகம், ஒரே வர்க்கம், ஒரே இனம், அதாவது தனித்துவமான இறைவனாகிய அல்லாஹ்வின் சமூகம், அல்லாஹ்வின் உம்மத், அல்லாஹ்வின் மக்கள் என்பதை உணரச் செய்வதே உம்மத்-ஏ-முஹம்மதிய்யாவின் உண்மையான நோக்கமாகும்.

ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு வெடிகுண்டுகளையும் வைரஸ்களையும் ஏவுவதற்கான நேரமல்ல இது!. இது நீங்கள் அனைவரும் அல்லாஹ்விடத்தில் மாய்த்துக் கொள்ள வேண்டிய நேரமாகும்!. நீங்கள் அல்லாஹ்விடத்தில் உங்களை இழந்துவிட வேண்டும், அதன் காரணமாக (நீங்கள்) விருப்பப்பட்டு அவனது விருப்பத்திற்கு (உங்களை) அர்ப்பணித்துக் கொள்ளமுடியும், மேலும் இந்த அர்ப்பணித்தலில் இருந்து (அவனது)திருப்தியையும் உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவரையொருவர் குற்றம் சுமத்தி, ஒருவர் மற்றவர் மீது புழுதியை அள்ளி வீசும் நேரம் அல்ல இது. இது மனந்திரும்புதல் மற்றும் பாவமன்னிப்பிற்க்கான நேரமாகும்; எழுந்து ஓர் புதிய உலகத்தை, ஓர் ஆன்மீக உலகத்தை உருவாக்க வேண்டிய நேரமாகும் இது இந்த ஆன்மீக புரட்சி என்பது உண்மையான இறை நம்பிக்கையின் வெற்றியை நோக்கி இவ்வுலகில் உங்களது பங்களிப்பைச் சார்ந்தே  பல வழிகளிலும் ஏற்பட முடியும்.

தங்களது உடைமையின் ஒவ்வொரு இழை\நாருடனும் அல்லாஹ்வின் நோக்கத்திற்காக (அவனது வழியில்) உதவி செய்பவர்கள் (மிகவும்) அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள். வானவர்கள் அவர்கள் மீது இறங்கி அவர்கள் மீது அருள் புரிவார்கள்,மேலும் அவர்களால்(தான்) உலகை வழிநடத்திட முடியும், ஏனென்றால் அவர்கள் நன்மையைக் கொண்டு தீமையை தடுத்திட கடும்முயற்சியை மேற்கொள்கின்றார்கள். அவர்கள் நல்லதைப் பார்க்கவும், நல்லதை செய்யவும், அவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மகிழ்ச்சியை பரப்பிட கடும் முயற்சியை மேற்கொள்கின்றார்கள். அவர்களே இவ்வுலகில் ‘இறை ஒளி’யும் ‘நம்பிக்கையின் கதிர்’களும் ஆவார்கள்.

இஸ்லாம் என்பது நம்பிக்கை, மன்னிப்பது மற்றும் சிறப்பாக இருப்பதற்காக கடும்முயற்சி மேற்கொள்வதைப் பற்றியதாகும். இஸ்லாத்தின் சாராம்சத்தை உங்களுக்கு வழங்குவதற்காவே  இவ்வுலகில் கலீஃபத்துல்லாஹ் வந்திருக்கின்றார். அதன் காரணமாக இஸ்லாம் உங்கள் மீது ஒரு   சுமையாக இருக்காது, மாறாக இறை நேசத்தின் சிறகுகளைக் கொண்ட அது உங்களை பறக்க வைக்கின்றது. நீங்கள் இஸ்லாத்தை உண்மையாகவும் முழுமையாகவும் ஏற்றுக்கொண்டால், நீங்கள் தான் இந்த உலகை வெல்பவர்களாவீர்கள். நீங்களே உண்மையான ஆட்சியாளர்களாகவும் இருப்பீர்கள். ஆனால் பேராசை,ஆணவம் மற்றும் அனைத்து வகையான தீமைகள் (போன்றவை) உங்களிடமிருந்து இஸ்லாத்தின் மூச்சைப் பறித்துக் கொண்டால்,நீங்கள் தோற்றுப்போவீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற கடும்முயற்சி மேற்கொள்ளுங்கள், உங்களைச் சீர்திருத்திக் கொள்ள கடும்முயற்சி மேற்கொள்ளுங்கள். இதனால் உங்களைச் சுற்றியுள்ள உலகத்தையும் உங்களால் சீர்திருத்தி விட முடியும்.மற்றவர்களை சீர்திருத்த முற்படுவதற்கு முன்பு நீங்கள் உண்மையான முஸ்லிம்களாக மாற வேண்டும்; இல்லையென்றால் ஆசிரியர் தனது மாணவர்களுக்கு எதையும் கற்பிக்க இயலாது.

கலீஃபாத்துல்லாஹ்வைப் பொறுத்தவரை, அவருடைய ஒரே எஜமானர் அல்லாஹ் ஆவான் மற்றும் அவர் அல்லாஹ்வால் ஆளப்படுகின்றார். ஆகவே, நான் உங்களுக்கு நல்ல உபதேசங்களை வழங்குவதற்கும், சரியான முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவுவதற்குமே நான் இங்கு இருக்கிறேன். அதனால் நீங்கள் உங்கள் ஈமானையும் இஸ்லாத்தையும் நல் வழிப்படுத்த முடியும். மேலும் ஒவ்வொரு வகையிலும்  உண்மையான முஸ்லிம்களாகவும் இருக்க முடியும்.

நாம் சிந்திக்கும் போது, நாம் ஒரு சகோதரத்துவத்தின் அடிப்படையிலேயே சிந்திக்க வேண்டும். இஸ்லாத்தில் நாம் ஒன்றாக இருந்துகொண்டு நம்பிக்கையை சிதைக்கின்ற அனைத்து தீமைகளையும் அகற்றிட வேண்டும். உண்மையான வெற்றியாளர் யார் என்றால் ஷைத்தானை வெற்றிகொண்டு, அவரிடத்தில்  அவனுக்கு (ஷைத்தானுக்கு) எந்தவொருப் பங்குமே இல்லாதபடி செய்பவரே. அவரது இதயம், ஆன்மா, மனம் மற்றும் உடல் ஆகியவை அல்லாஹ்வின் ஒட்டுமொத்தப் பாதுகாப்பின் கீழ் வந்துவிடுகின்றன. அதனால்தான் அல்லாஹ்வுடன் தொடர்பை வைத்திருப்பது மிகவும் முக்கியமானதாகும். அல்லாஹ் அனைத்தையும் கேட்கக்கூடியவனும், அனைத்தையும் பார்க்கக்கூடியவனும் ஆவான். அவன் அனைத்தையும் அறிகிறான், மேலும் அவனால் ஒரு சூழ்நிலையை சிறந்ததாக மாற்றிவிட முடியும்.

நமது நேசத்திற்குரிய தூதர் ஹஸ்ரத் முஹம்மத்(ஸல்) அவர்களின் பிரார்த்தனையானது, அன்னாரது உம்மத் அதாவது நாம், கடந்தகால, இன்றைய மற்றும் நாளைய முஸ்லிம்கள் நமது வாழ்வின் ஒவ்வொரு பிரதிபலித்தலிலும் அல்லது நிலையிலும் இஸ்லாத்தை பிரதிபலிக்கக் கூடிய அப்படிப்பட்ட வார்க்கப்பட்ட வாழ்வை பூமியில் சமநிலைப்படுத்த கடுமுயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பதாக இருந்தது. முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் நல்ல கண்ணாடிகளாகி, சீர்திருத்தத்தை தொடர்ந்து செய்து, உலகில் மாபெரும் ஆன்மீக புரட்சியை கொண்டு வர வேண்டும். ஒரு பொதுவான இலக்கை நோக்கி அனைத்து மக்களையும் நம்பிக்கையுடனும் அன்புடனும் அல்லாஹ்வின் பக்கம் உண்மை மற்றும் நேர்மையுடன் வழிநடத்த, அனைத்து எதிர்மறைகளும் ஒரு பொதுவான இலக்கை நோக்கி மனம் மற்றும் ஆன்மாவின் நேர்மறையால் மாற்றப்படும் போது இது நிகழும்.

இந்த உன்னத பணிக்காக, நீங்கள் அனைவரும் உங்களது குறிக்கோளில்-பணித்திட்டத்தில் எப்போதும் இணைந்திருக்கவும், கவனம் செலுத்தவும் வேண்டும். மேலும் ஷைத்தான் உங்களது சகோதரத்துவத்தை உடைத்திட அனுமதிக்காதீர்கள். இஸ்லாமிய சகோதரத்துவமானது புனிதமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஹஜ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களின் பிரார்த்தனை உணரப்பட முடியும், அதில்  அவர்களது உம்மத் அல்லாஹ்வின் அதிருப்தியில் இருந்தும், நரகத்தில் இருந்தும் பாதுகாக்கப்பட்டு அல்லாஹ்வின் திருப்தியின் சுவர்க்கங்களில் வரவேற்கப்பட முடியும். இன்ஷா அல்லாஹ். ஆமீன், ஸும்ம ஆமீன், யா ரப்புல் ஆலமீன்.

ஹஜ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் நீடித்த மரபு

 பிஸ்மில்லா ஹிர் ரஹ்மான் நிர்ரஹீம்

நபித்துவத்தின் முத்திரை

இமாம் புஹாரி அவர்கள் பதிவு செய்துள்ள ஒரு ஹதீஸில், ஹஜ்ரத் அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிப்பு செய்துள்ளார்கள். நமது எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) கூறினார்கள்: “எனக்கு முன் சென்ற மற்ற நபிமார்களை ஒப்பிடுகையில், ஒரு மனிதன் ஒரு வீட்டை மிகவும் அழகாக வும் நேர்த்தியாகவும் கட்டினான், அதில் ஒரு மூலையில் ஒரு செங்கலின் இடத்தைத்

தவிர." மக்கள் அதைப் பார்த்து அதன் அழகைக் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள், ஆயினும், (அவர்கள்), ‘இந்த செங்கல் அதற்குரிய இடத்தில் வைக்கப்படாதா!!’ என்றும் கூறுகின்றனர். ஆகையால், நான் தான் அந்த செங்கல் ஆவேன், மேலும் நான் நபிமார்களின் முத்திரை ஆவேன்”என்றும் கூறினார்கள்.

எம்பெருமானார் திரு நபி முஹம்மது(ஸல்) அவர்கள் தான் கடைசி செங்கல் ஆவார்கள், தீன் (மார்க்கத்தின்) வீட்டை

முழுமையாக்குகின்றார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. உண்மையில், அன்னார் தோன்றியதால் (வருகையினால்) அவர்களே கட்டுமானத்தை முழுமைப் படுத்தினார்கள், ஏனெனில் அன்னார் மூலமாகவே அல்லாஹ் நமது மார்க்கத்தை, இறுதி மார்க்கத்தை நமக்கு வழங்கி, நம்க்காக அதனை முழுமைப் படுத்தி அதற்கு இஸ்லாம் என்றும் பெயரிட்டான்.

நபிமார்கள் மற்றும் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பணி

இது ஒரு நபி என்பதன் அர்த்தத்தின் பக்கம் நம்மை கொண்டு வருகிறது. அர்த்தத்தின் அடிப்படையில், ஒரு தீர்க்கதரிசி/நபி என்பவர் அல்லாஹ்விடமிருந்து ரூஹுல் குத்தூஸ் மூலம் மறைவானவற்றின் செய்திகளைப் பெறக் கூடிய ஒருவர்.

அவர் எதிர்காலத்தைப் பார்ப்பதில்லை, ஆயினும் அல்லாஹ்வின் நாட்டத்தால் எதிர்காலத்தில் நடக்கும் முக்கியமான விஷயங்களைப் பற்றி அவருக்கு அறிவிக்கப்படுகிறது. அல்லாஹ்விடம் இருந்து அதைப் பற்றி அவருக்கு முன்னதாகவே அறிவிக்கின்ற வெளிப்பாடுகளை பெறாமல் எதிர்கால நிகழ்வுகளை அவரால் கணிக்க முடியாது. ஆகவே, ஒரு நபி என்பவர் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு முன்னறிவிப்புகளை/ தீர்க்கதரிசனங்களைச் செய்பவராகவும், அவர் அல்லாஹ்விடமிருந்து வெளிப்பாடுகளை பெறுபவராகவும் இருக்கிறார். நபஅ என்றால் செய்தி, உண்மையான மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த உண்மைச் செய்தி. அரபு சொல் அமைப்பில், செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் போன்ற வேறு எந்த சாதாரண செய்திகளுக்கும் இது பயன்படுத்தப்படுவதில்லை. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அத்தகைய செய்திகளுக்காக பிரத்தியேகமாக பயன்படுத்தப்படுகிறது, குறிப்பாக ஆன்மீக வட்டத்தில் (களத்தில்) இவ்வாறாக, 'நபி' (அதாவது தீர்க்கதரிசி) என்பவர் உண்மையைப் பேசுகின்ற,, அல்லாஹ்விடமிருந்து (கிடைக்கின்ற) மிகுந்த மதிப்பு மிக்க உண்மைச் செய்திகளைப் பெற்று அதை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற அத்தகைய ஒரு நபர் ஆவார். ஆகவே, ஒரு நபி/தீர்க்கதரிசி ஆனவர் (ஷரீஅத்) சட்டத்துடன் கூடிய செய்திகளுடன் மற்றும் (ஷரீஅத்) சட்டத்தை கொண்டிராத செய்திகளை கொண்டுள்ள அல்லாஹ்வின் கட்டளை(களையோக்) கொண்டு வர முடியும். அவரது சகாப்தத்தின் பொதுவான மக்களுக்கு தகுதி பெறுவதற்கான ஒரு வேண்டுகோள் அவர் தனது சகாப்தத்தின் பொது மக்களிடையே அல்லாஹ்வின் வெளிப்பாடுகளை பெறுகிறார். அவருடைய சகாப்தத்தின் பொதுவான மக்களுக்கிடையே அல்லாஹ்வின் வெளிப்பாடுகளைப் பெறும் அத்தகைய நபரைத் தகுதி பெறவைக்கின்ற ஒரு பதவி ஆகும்,மேலும் அவரால் தீனின் (மார்க்கத்தின்) இரட்சிப்பிற்காக அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய முடியும்.

மேலும், நிச்சயமாக, ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களே, (ஷரீஅத்) சட்டத்துடன் வ(ருகை த)ந்த மற்றும் (ஷரீஅத்) சட்டத்தை கொண்டிராமல் வ(ருகை த)ந்த அனைத்து நபிமார்கள்/ தீர்க்கதரிசிகள் (அனைவரிலும்) மிகச் சிறந்தவர்/ முழுமைப் பொருந்தியவர் ஆவார்கள். அன்னாரது வருகையுடன், மார்க்கம் மற்றும் அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் நிறைவடைந்தது. அல்லாஹ்வின் மார்க்கத்தின் மீதான அன்னாரது தொடுதல்(நெருங்கிய நிலையானது) மிகவும் முழுமைப் பொருந்திய ஒன்றாக இருந்தது, ஏனெனில் அவர்கள் நடைமுறையில் அல்லாஹ்வின் வார்த்தைகளை உண்மைப்படுத்தக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மனிதராக, புத்தகமாக இன்னும் அல்லாஹ்வின் ரூஹ் - ஆன்மா ஆகிய அனைத்துமே அன்னாருடன் இணைந்திருந்தது. இதன் காரணமாகவே அவர்கள் ஒரு மனிதர் என்ற நிலையிலும், ஒரு நபி என்ற ஆகிய இரண்டின் நிலையிலுமே அன்னார் பரிபூரணமாணவராக இருந்தார்கள்.

மேலும், ஒரு ரசூல் என்ற நிலையில்,, அவர்கள் அல்லாஹ்விடமிருந்து இறைச் செய்தியை வழங்குவதற்கு வருகை தந்தார்கள். அல்லாஹ் அவர்களை அவனது பிரதிநிதியாக, அவனது தூதராக அனுப்பினான், மேலும் அன்னார் இதனை செய்தார்கள்: அதாவது இறைச் செய்தியை வழங்கினார்கள். அல்லாஹ்வின் சத்தியத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவரால் மக்களின் இதயங்களில் நுழைய முடியவில்லை. அல்லாஹ் அன்னாரை அவனது ஒரு பிரதிநிதியாகவும், ஒரு தூதராகவுமே அனுப்பினான். மேலும் அன்னார் என்ன செய்தார்கள் என்றால் தூதுச் செய்தியை மட்டுமே எடுத்து வைத்தார்கள். அன்னாரால் மக்களின் இதயங்களில் புகுந்து அல்லாஹ்வின் உண்மையை எடுத்து வைக்க முடியாத தாக இருந்தது. அன்னார் (இறைச் செய்தியை மக்களுக்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். அவற்றை சரிசெய்யும்படி அவர்களை அறிவுறுத்தினார்கள். மேலும் அவர்கள் இறைச் செய்தியை நிராகரித்து தவறான பாதையை எடுத்துக் கொண்டால், ஒரு பெரும் தண்டனையை குறித்தும் அவர்களை எச்சரித்தார்கள்.

ஆகையால், ஒரு 'நபி' மற்றும் 'ரஸுல்' ஆகிய இரண்டிலும், அவர்கள் முழுமையின்/பரிபூரணத்தின்(உச்சமாக) உருவகமாக திகழ்ந்தார்கள். வேறு எந்த நபி/தீர்க்கதரிசியும் அல்லாஹ்வின் பரிபூரணத்தின் உயர் நிலையை மற்றும் நெருக்கத்தை (அதாவது அருகாமையை) அடையவில்லை மற்றும் அடையவும் முடியாது. அல்லாஹ்வின் பார்வையில் அனைத்து நபிமார்களுக்கு மத்தியிலும் அந்தஸ்தின் தரத்தில் அவர்களே முதன்மையானவர்கள் ஆவார்கள். அவர்களே (வரிசையில்)முதல் சிறந்தவர் ஆவார்கள். (இரண்டாவது சிறந்தவரோ அல்லது மூன்றாவது சிறந்தவரோ அல்ல),மற்றவர்கள் பதவி, அந்தஸ்து மற்றும் நேசம் ஆகியவற்றி(ன் அடிப்படையி)ல் அன்னாருக்குப் பிறகே வருகிறார்கள்.

  ஹஜ்ரத் திரு நபி (ஸல்) அவர்களின் கம்பீரமான (மேன்மையான) அந்தஸ்து:

உதாரணமாக, அவர்களுடைய ஆன்மீக காட்சி மற்றும் பயணத்தின் போது (அதாவது இஸ்ரா மற்றும் மிஃராஜ்) அல்லாஹ்வுடனான மிக உயர்ந்த தொடர்பினால் அவர்களுடைய ஆன்மா வின் மீது அருள் புரியப்பட்டது, ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் அன்பு மற்றும் அவனுடன் நேரடியாகப் பேசும் திறனைப் பெற்றிருந்தாலும், ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் ஆன்மீகத்தின் அல்லது வானுலகின் மிக உயர்ந்த நிலைக்கு ஏறிச் செல்வதையும், ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் கண்டு கொண்ட அந்தஸ்தை விடவும்,

அல்லாஹ்வின் முன்னிலையில் மேன் மேலும் உயர்ந்து சென்றதையும் கண்டு ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்கள் 'வேதனையுடன் பொறாமைப்பட்டு' அழுததாகவும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு இமாம் புகாரியின் ஹதீஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹஸ்ரத் அனஸ் பின் மாலிக்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் நேரடியாக பேசும் அவர்களின் சிறப்புத் தன்மையின் காரணத்தால் அவர்கள் ஏழாவது வானத்தில் இருந்தார்கள், மூஸா(அலை) அவர்கள்(அல்லாஹ்விடம்) கூறினார்கள், ‘இறைவா! எனக்கு மேல் யாரும் உயர்த்தப்பட மாட்டார்கள் என்று நான் நினைத்தேன். " (புகாரி).

ஸஹீஹ் முஸ்லீமில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு அறிவிப்பில், ஹஸ்ரத் மாலிக் பின் ஸாஸா (ரலி) அவர்களின் மேற்கோளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஸ்ரத் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நாங்கள் ஆறாவது வானத்தை அடையும் வரை பயணம் செய்து, மூஸா (அலை) அவர்களிடம் வந்தபோது, நான் அவர்களை வாழ்த்தினேன், அவர்கள் கூறினார்கள்: 'நேர்மையுள்ள சகோதரரே நேர்மையுள்ள தூதரே! வாருங்கள்.' நான் (அவர்களை) கடந்து சென்றபோது அவர் அழுதார், 'உங்களை அழ வைப்பது எது?' என்று கூறுகின்ற ஒரு குரல் கேட்டது. என் இறைவா! அவர் ஒரு இளைஞன் ஆவார், அவரை நீ எனக்குப் பின் (ஒரு தூதராக) அனுப்பினாய், மேலும் என்னைப் பின்பற்றுபவர்களை விட அவரைப் பின்பற்றுபவர்கள் அதிக எண்ணிக்கையில் சுவர்கத்திற்குள் நுழைவார்கள் என்று அவர் கூறினார்.

ஹஸ்ரத் மூஸா(அலை) அவர்கள் ஆறாவது அல்லது ஏழாவது வானத்தில் இருந்தாலும், இங்கு முக்கியமானது என்னவென்றால், ஹஸ்ரத் மூஸா(அலை) மற்றும் அவர்களுடைய உம்மத்தை (சமூகத்தை) விட புனித முஹம்மது நபி(ஸல்) மற்றும் அவர்களது உண்மையாக பின்பற்றுபவர்கள் ஆகிய இருவருக்கும் அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்து மற்றும் நெருங்கியத் தன்மை இருக்கும். நான் மீண்டும் கூறுகிறேன், புனித நபி முஹம்மது(ஸல்) அவர்களின் உண்மையாக பின்பற்றுபவர்களால் மட்டுமே அல்லாஹ்வின் அருகாமைக்கு ஏறிச் செல்ல முடியும், பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்கள் இஸ்லாத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாத அவர்களால் (ஏறிச் செல்ல) முடியாது.

உண்மையாக பின்பற்றுபவர்களுக்கான இறை வாக்குறுதி

அல்லாஹ்வின் வாக்குறுதியானது கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிய தாக இருக்கின்றது. திருக் குர்ஆனில் சூரா அன் நிஸாவில் (அத்தியாயம் 4, வசனம் 70) (அது பற்றி) அவன் குறிப்பிட்டுள்ளான்: அல்லாஹ்வுக்கும் இந்தத் தூதருக்கும் கட்டுப்பட்டு நடப்பவர்கள், அல்லாஹ் அருள் புரிந்தவர்களான, நபிமார்கள் (தீர்க்கதரிசிகள்), சித்தீக்குகள் (உண்மையாளர்கள்), ஷஹீதுகள் (உயிர்த்தியாகிகள்), ஸாலிஹீன்கள் (நல்லவர்கள்) ஆகியோரைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இத்தகையோரே (மிக்க) நல்ல நண்பர்கள் ஆவார்கள்.

இதன் பொருள் என்னவென்றால், எம்பெருமானார் ஹஜ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களை/ பின்பற்றுபவர்களை அல்லாஹ் எப்பொழுதும் கௌரவிப்பான். மேலும் கடந்த கால தூதர்களின் மக்கள் அல்லது சமுதாயங்களை விடவும் அவர்களை அதிகளவில் கௌரவிப்பான் என்பதாகும். ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் இறுதி செங்கல் என்ற முறையில், அவர்கள் புதிய வாயிலாக இருக்கின்றார்கள். அதன் மூலம் அல்லாஹ்வின் மார்க்கத்தை (மேன்மேலும்) வலுப்படுத்த அவர்களது ஆன்மீக சந்ததி வரக்கூடும், மேலும் மார்க்கம் புதிய மார்க்கமாக இல்லாமல் அது எப்பொழுதும் இஸ்லாமாகவே இருக்க முடியும் என்பதே இதன் (சரியானப்) பொருளாகும்.

இன்றைய நாட்களில் நாம் பார்ப்பது போல் - ஒவ்வொரு காலகட்டத்திலும் இஸ்லாம் ஆபத்தில் இருக்கும் - இஸ்லாத்தை ஆதரிப்பதற்கும், உறுதிப்படுத்துவதற்கும், தீனின் கட்டுமானத்தை, ஷரீஅத்தை உடைய அனைத்து தூதர்களின் வீடும் இடிந்து விழுவதிலிருந்தும் பாதுகாக்க, ஹஜ்ரத் நபி கரீம்(ஸல்) அவர்களின் உம்மத்திலிருந்து அல்லாஹ் எவரையேனும் ஒரு துணை நபியாக, ஒரு இஸ்லாமிய தூதராக, எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களுக்கு ஆன்மீக தொண்டராகவும், கீழ்ப்படிதலுடனும் இருக்கின்ற (ஒரு)வரை தூதராக அல்லாஹ் எழுப்புவான்.

இது ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அவர்களது உம்மத்தில் இருந்து உண்மையான அடியார்களுக்கும், இறைபக்தி உடையவர்களுக்கும் அல்லாஹ் வழங்கியுள்ள மேன்மையாகும், மேலும் நம்மீதான அந்த மேன்மையும் இறை நேசமும் தான் ஹஜ்ரத் எம்பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் தூக்க நிலையிலும் விழித்திருக்கும் நிலைக்கும் இடைப்பட்டு இருந்தபோது (கஷஃப்)ஆன்மீக ஏற்றத்தின் போது ஹஸ்ரத் மூஸா (அலை) அவர்களை‌ அழ வைத்தது.

மனிதர்களும் இறை முகத்தை வெளிப்படுத்துதலும்.

நான் இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், அன்னார் அல்லாஹ்வின் முன்னிலைக்கு ஏறிச் சென்ற போதிலும், அவர்கள் அல்லாஹ்வைக் காணவில்லை, ஏனெனில் எந்த மனித ஆன்மாவும் தாம் இறந்த (பிறகு) அல்லாஹ் அவருக்கு முன்னால் தன்னைத் தானே வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்பும் நிலைக்கு ஏறி செல்லாத வரை தூக்கத்திலோ அல்லது அரை தூக்கத்திலோ ஒருபோதும் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது.

ஹஸ்ரத் ஆயிஷா (ரலிஹ) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்:

"முஹம்மது தனது இறைவனைக் கண்டுள்ளதாக எவராவது உம்மிடம் கூறினால், அவர் ஒரு பொய்யர் ஆவார், ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: 'எந்தப் பார்வையாலும் அவனை (அல்லாஹ்வை) அடைய முடியாது.' (6:104) மேலும் முஹம்மத் மறைவானதைக் கண்டதாக எவராவது உம்மிடம் கூறினால் அவர் ஒரு பொய்யர் ஆவார் ஏனெனில் 'அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் மறைவானதை பற்றிய அறிவு இல்லை.' "(புகாரி)

கூடுதலாக, இது அபூ தர் அவர்களின் மேற்கோளில் கூறப்பட்டுள்ளது: 'நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் கூறினார்கள்: (அவன்) ஒளிமயமானவன் ஆவான் (அவன் ஒளியால் மறைக்கப் பட்டுள்ளான்); நான் எவ்வாறு அவனை பார்க்க முடியும்? ’’ (முஸ்லிம்).

ஆகையால், அல்லாஹ்வின் தூதர்கள் அனைவரும், ஷரீஅத் ஐ கொண்டவர்கள்

(ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்கள் ஷரீஅத் உடைய தூதர்களில் இறுதியானவர்கள் ஆவார்கள்) மற்றும் ஷரீஅத் கொண்டிராதவர்களாக இருந்தாலும் சரி அல்லாஹ்வின் வெளிப்பாடுகளை மட்டுமே காண்கிறார்கள், ஆனால் அல்லாஹ்வை அவனது உண்மையான மற்றும் யதார்த்தமான வடிவிலோ அல்லது இருப்பிலோ பார்க்கவில்லை. உதாரணமாக, எவராவது தனது தந்தையின் வடிவம் அல்லது ஒளியின் வடிவம் போன்றவற்றில் அல்லாஹ்வைப் பார்த்ததாகக் கனவு காண முடியும். இவை அல்லாஹ்வின் வெறும் வெளிப்பாடுகள் ஆகும், அவன் (அதாவது அல்லாஹ்) அந்த நபருடன் இருக்கிறான் என்பதை (அந்த) நம்பிக்கையாளருக்கு மீண்டும் உறுதியளிக்கவும், அல்லாஹ் மற்றும் இஸ்லாத்தின் மீதான் அவரது இறை நம்பிக்கையில் அவரை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கிறான்.

உங்களது பாக்கியத்தை கண்டுணருங்கள்

எனவே, எனது அன்பான சஹாபாக்களே, இன்று ஆன்மீக சந்ததியினருக்கு, வாக்குறுதி அளிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில் இருப்பது, புனித நபி முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருந்து, ரூஹுல் குதுஸ் இறங்குவதன் மூலம் பொன்னான வாய்ப்பைப் பெற்று தீன்-ஏ-இஸ்லாத்தை வலுப்படுத்தவும், மனிதனை அல்லாஹ்வை நோக்கி அழைத்துச் செல்லும் பழமையான நெடுஞ்சாலையை சரிசெய்யவும் இந்த யுகத்தின் கலிபத்துல்லாஹ் என்ற முறையில் இந்த எளியவனின் இறைவெளிப்பாடும் நமக்கான ஒரு கௌரவம் ஆகும்.

நான் வேறொரு புதிய மார்க்கத்தையோ அல்லது புதிய ஷரீஅத்தையோக் கொண்ட வேதத்தையோ கொண்டு வரவில்லை, ஆனால் உங்கள் அனைவரையும் பாதுகாப்பாகவும், நலமாகவும் அல்லாஹ்வின் பக்கம் வழிநடத்துவதற்காக எனது வழிநடத்துபவர், எனது ஆன்மீக வழிகாட்டி மற்றும் தூதர், ரஹ்மத்துல் - லில்-ஆலமீன் (அனைத்து பிரபஞ்சத்திற்கும் அருள்கொடை) மற்றும் காதம்-அன் நபியீனின் (அனைத்து தூதர்களின் முத்திரை) நிழலாக நான் வந்துள்ளேன். நீங்கள் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் இந்த எளியவனுக்கும் கீழ்ப்படிந்து, அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அடிபணிந்து, உண்மையான முஸ்லீம்களாக பௌதீக, தார்மீக மற்றும் ஆன்மீக ரீதியில் உங்களை வலுப்படுத்திக் கொள்ளவுமே இவை அனைத்தும் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இன்ஷா-அல்லாஹ், ஆமீன்.

அல்லாஹ் உங்கள் அனைவர் மீதும் அருள் புரிவானாக!, மேலும் பூமியில் உங்களது கடைசி மூச்சு இருக்கும் வரை உங்கள் நம்பிக்கையில் எப்போதும் வலுவாக இருக்கச் செய்வானாக! ஆமீன்.

(மொரீஷியஸை சார்ந்த ஹஸ்ரத் முஹை-யுத்-தீன் அல்-கலிபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் சாஹிப் (அய்தஹு) அவர்களால் 03 டிசம்பர் 2018 அன்று (25 ரபி உல் அவ்வல் 1440 AH) வரலாற்று நூருல் இஸ்லாம் மசூதி, மாத்ராவில் (கேரளா, இந்தியா) நிகழ்த்திய உரை.)


Tuesday, August 29, 2023

இறுதி காலங்களின் அடையாளங்களின் மீது (பாகம் 1)

 (24 செப்டம்பர் 2021~16 ஸஃபர் 1443 ஹிஜ்ரி)

உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்துமுஸ்லிம்களுக்கும்) தனது ஸலாத்தை தெரிவித்தப் பின்னர் கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷ்ஹது, தஅவூது மற்றும் சூரா ஃபாத்திஹா ஓதிய பிறகு “இறுதி காலங்களின் அடையாளங்களின் மீது என்ற தலைப்பில் தனது சொற்பொழிவை வழங்கினார்கள்..

فَهَلۡ يَنظُرُونَ إِلَّا ٱلسَّاعَةَ أَن تَأۡتِيَہُم بَغۡتَةً۬‌ۖ فَقَدۡ جَآءَ أَشۡرَاطُهَا‌ۚ فَأَنَّىٰ لَهُمۡ إِذَا جَآءَتۡہُمۡ ذِكۡرَٮٰهُمۡ ()

எனவே இவர்கள் அறிந்து கொள்ளாத நிலையில் தங்களின் மீது திடீரென்று (தீப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன ஆகவே அது அவர்களிடம் வந்து விட்டால், அவர்களுக்கு நினைவூட்டும் நல்லுபதேசம் எவ்வாறு பயனளிக்கும். (47:19)

ஒரு (குறிப்பிட்ட) காலத்திற்காக அல்லது ஒரு இடத்திற்காக என்று வரையறுக்கப்படாத தனித்தன்மை கொண்ட ஒரே வேதம் திருக் குர்ஆன் மட்டுமே; (திருக் குர்ஆன்) பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே ஹஸ்ரத் எம்பெருமானார் நபி கரீம் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதும், என்றென்றும் நிலைத்திருப்பவனாகிய இறைவனின் வார்த்தையாக இருப்பதாலும், திருக்குர்ஆன் என்றென்றும் உண்மையானதாகும்.

இவ்வாறு, உலக முடிவு குறித்து அது [அதாவது திருக்குர்ஆன்] இந்த வசனத்தில் குறிப்பிடக்கூடிய (இறுதி)கால அடையாளங்களின் தோற்றம்-வெளிப்பாடு - இந்த பதினான்கு நூற்றாண்டுகள் முழுவதும் உண்மையாக நிகழ்ந்து

ள்ளது. இன்றும் உண்மையாக நிகழ்கிறது, மேலும் உலக முடிவு(நாள்) வரை எப்போதும் உண்மையாகவே இருக்கும். உண்மையில், இந்த அத்தாட்சிகளில் ஒன்று [பேச்சு வழக்கில் கூறுவதானால்] நேற்று எம்பெருமானார் திருநபி (ஸல்) அவர்களின் உறுதியான வருகையையும், பின்னர் அவர்களின் மரணத்தையும், பின்னர் (ஒட்டகப் போருக்கு அடுத்து (ஹிஜ்ரி 37இல்)) சிஃபினில் நடந்த நம்பிக்கையாளர்களுக்கிடையேயான மோதல், ஹிஜாஸில் உள்ள பயங்கரமான நெருப்பின் தோற்றம், மங்கோலிய படையெடுப்புகள், போன்றவற்றை உருவாக்கியது. இன்றோ அது அபரிமிதமான செல்வம் மற்றும் பொருட்களின் மிகுதி, உயரமான கட்டிடங்களை நிர்மாணித்தல், செல்வத்தை பெறுவதற்கு(பெருக்கிக் கொள்ள) போதைப்பொருள் பரிமாற்றம் (விற்பனைப்) போன்றவை(களின் வடிவிலும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது). உண்மையில் போதைப்பொருட்களின் கொடுமைகள் (அனைத்தையும்) சீர்குலைக்கின்றன. பல மக்கள், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் (சிறுவர்கள் மற்றும் சிறுமிகள்) போதைப்பொருட்களுக்கு அடிமையாகி விடுகின்றனர். மரணத்தின் வியாபாரிகள் இந்த இளைஞர்களின் சடலங்களின் மீதும் அல்லது குடும்ப அங்கத்தினரின் பிரிவினைகளின் மீதும் கூட தங்களது செல்வத்தை பெருக்கிக் கொள்கின்றனர்.

நேற்றுத் தான்] - கடந்த நூற்றாண்டில் - ஈஸா (அலை), கிருஷ்ணர் (அலை) ஆகியோரின் இரண்டாவது வருகை நிகழ்ந்தது, அதைக் கூறுவதென்றால், வாக்களிக்கப்பட்ட மஸீஹ் ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மத் (அலை) அவர்களின் வருகை நிகழ்ந்தது. அவர்களது வருகையுடன் உலகளவிலும், நாட்டளவிலும் பல விஷயங்கள் நிகழ்ந்தன. இன்று அது முஹையுத்தீன், அல்-கலீஃபத்துல்லாஹ், அல்-மஹ்தி, அல்-மஸிஹ், னுடைய வருகையுடன் மிக பயங்கரமான பல சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன. உண்மையில், இந்த நூற்றாண்டில் அல்லாஹ் இந்த எளிய அடியானை எழுப்பியுள்ளதால், இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து அதாவது, 2001 ஆம் ஆண்டு முதல் இன்று வரை, பல விஷயங்கள் நிகழ்ந்துள்ளன, இன்னும் வரக்கூடியது மிகவும் பயங்கரமானதாகவே இருக்கும், உலகெங்கிலும் நிலைமை எல்லா விதத்திலும் மிகவும் கடுமையானதாகவும், அச்சத்திற்குறியதாகவும், கவலைக்குரியதாகவுமே இருக்கும்.

எனது பேருரையின் ஆரம்பத்தில் நான் மேற்கோள் காட்டிய வசனத்தில், (இறுதி) காலத்தின் அடையாளங்களில் சில ஏற்கனவே தோன்றிவிட்டதை, குர்ஆனில் இறைவன் அறிவித்துள்ளான் என்றால், இந்த அடையாளங்களின் தன்மை பற்றிய எந்த விவரங்களையும் அவன்

வழங்கவில்லை. இறைவனின் வார்த்தைகளின் விரிவுரையாளர்கள் என்ற முறையில் எங்களது தகுதிகளின் திறனுக்கேற்ப அனைத்து நபிமார்களின் தலைவரான, அவனது திருநபி(ஸல்) அவர்கள் மற்றும் அவனது மற்ற இஸ்லாமிய நபிமார்களே அதனை விளக்கவேண்டும், மேலும் நமது நேசத்திற்குரிய திருத்தூதர் ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்கள் அவர்களின் ஹதீஸ்களில் (இறைவனின் வார்த்தையை முழுமையாகவும் விரிவாகவும் விளக்குகின்ற நபி(ஸல்) அவர்களின் வார்த்தை) இந்த அத்தாட்சிகளில் பலவற்றை குறிப்பிட்டுள்ளார்கள்.

பூமியின் மீது இவ்வுலகம் உருவாக்கப்பட்டதிலிருந்து, அனைத்து தூதர்களும் அந்தந்த மக்களுக்கு இந்த பயங்கரமான நாளை பற்றி அறிவித்துள்ளனர், ஆனால், எம்பெருமானார் திரு நபி(ஸல்) அவர்களோ, பூமியின் மீது தோன்றிய இறைவனின் தூதர்கள் அனைவருக்கும் அவர்களே முத்திரையாக இருப்பதால், தங்களது மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மனித குலத்திற்கும் உலகத்தின் (அந்த)முடிவு எந்த மாதத்தில், ஆண்டில் நூற்றாண்டில் நிகழும் என்பதை இறைவனை அன்றி வேறு யாரும் அறிய மாட்டார்கள் என்றபோதிலும், தற்போது அது அருகில் இருப்பதையும், அதற்கு முன்னோடியாக இருக்கக்கூடிய பல அத்தாட்சிகளும் அதனை அறிவிக்கும் என்பதையும் அறிவித்துள்ளார்கள். வேறு எந்த தூதர்களையும் விட, அவர்களே உலக முடிவின் இந்த அத்தாட்சிகளைப் பற்றி முடிந்தவரை தனது மக்களுக்கு கூறியுள்ளார்கள்.

மேலும் இன்று இந்த நூற்றாண்டின் கலீஃபத்துல்லாஹ்,அல்-மஸீஹின் [உங்களுக்கு முன்னால் இருக்கும் இந்த எளியவனின்] நோக்கம் என்னவென்றால் உலகம் முழுவதும் உள்ள தனது எல்லா ஸஹாபாக்களை மட்டுமே எச்சரிப்பதல்ல, மாறாக, அனைத்து மனிதகுலமும் அதாவது நீங்கள் அனைவரும் மரணத்திற்கு பிறகுள்ள வாழ்க்கையைப் பற்றி கவலைப்பட வேண்டும், உங்கள் செயல்களைத் திருத்திக்கொள்வதில் நீங்கள் அக்கறை கொள்ள வேண்டும், பூமியின் மீதான இன்பங்களின் பக்கம் உங்களது உடலையும் ஆன்மாவையும் வீழ்த்தி விடக் கூடாது என்(று எச்சரிப்)பதாகும். இவை அனைத்தும் மிகவும் முக்கியமானதாகும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் ஒரு ஹதீஸ் எனக்கு நினைவிருக்கிறது. இது அன்னார்(ஸல்) அவர்கள் இந்த அடையாளங்களைக் குறிப்பிடும் (அவர்களது) அக்கறையைப் பற்றிய ஒரு கருத்தை நமக்குத் தருகின்றது. ஹுஸைஃபா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடையே நீண்ட நேரம் நின்று கொண்டு, யுக முடிவு நாள் ஏற்படும் வரையிலான எந்தத் தகவலையும் ஒன்றுவிடாமல் குறிப்பிட்டார்கள். அதை மனனமிட்டவர்கள் மனனமிட்டுக் கொண்டார்கள். அதை மறந்தவர்கள் மறந்து விட்டார்கள். இதோ இந்த என் தோழர்கள் அதை அறிந்துகொண்டனர். அவற்றில் ஏதேனும் ஒன்றை நான் மறந்துவிட்டிருந்தாலும் அதை நேரில் காணும்போது, அது என் நினைவிற்கு வந்துவிடும்; தம்மைவிட்டு மறைந்துவிட்ட ஒருவரது முகத்தை (மீண்டும்) பார்க்கும்போது அவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்வதைப் போன்று (முஸ்லிம்)

சில அடையாளங்கள் ஹதீஸ்களில் மிகச் சுருக்கமாக மட்டுமே குறிப்பிடப் பட்டிருந்தாலும் கூட, மற்றவை, மிக விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு தஜ்ஜால் தொடர்பான முன்னறிவிப்புகளை எடுத்துக் கொண்டால், அதற்கு காரணம் எளிமையானது ஆகும்: தஜ்ஜாலின் வருகை ஒரு நிகழ்வை உருவாக்குகிறது‌, அங்கு நம்பிக்கையாளர்கள் கடுமையாக சோதிக்கப்படுவார்கள், அதைக் குறித்து தனது மக்களை சரியான முறையில் எச்சரிக்கவும் அவர்களது தோழர்களிடம் அதைக்குறித்து தனிப்பட்ட அக்கறையுடன் பேசவும் நபி (ஸல்) அவர்களுக்கு இயல்பானதாக இருந்தது.

உதாரணமாக அல்-நவாஸ் இப்னு சமன் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்: "புனித நபி (ஸல்) அவர்கள் ஒரு பகலில் தஜ்ஜாலைக் குறித்து பேசினார்கள். அவர்கள் சில நேரங்களில் (அவர்களது குரலை) உயர்த்தினார்கள் மற்றும் சில நேரங்களில் அதனை தாழ்த்தினார்கள்,எந்த அளவிற்கு என்றால் விரைவில், [அவர்களுடைய வார்த்தைகளால் ஈர்க்கப்பட்டு], பக்கத்து பனை தோப்பில் தஜ்ஜால் இருப்பதாக (நினைத்து) நாங்கள் பயப்பட ஆரம்பித்தோம்! பின்னர் நாங்கள் புனித நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, "உங்களுக்கு என்ன நடக்கிறது? என்று அவர்களின் வார்த்தைகளின் விளைவை எங்களில் கண்டு, அவர்கள் எங்களிடம் வினவினார்கள்.

நபி (ஸல்) அவர்களின் புனித (ஹஜ்) இறுதி பயணத்தின் போது பிரசித்திப்பெற்ற இறுதிப் பேருரைகளுக்கு மத்தியிலும் கூட தஜ்ஜாலின் குழப்பம் குறித்து தனது மக்களுக்கு உரையாற்றினார்கள்.

இந்த குறிப்பிட்ட ஹதீஸ்களின் முக்கிய நோக்கம் என்னவென்றால் இந்த உலகிற்கு வரவிருக்கும் முடிவையும் மற்றும் மறுமை வாழ்க்கைக்காக தங்களை தயார் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் நினைவூட்டுவதாகும்.

இன்று இந்த நூற்றாண்டில் வாழ்வைக் குறித்து உங்களை அச்சமூட்டவோ அல்லது வெறுப்படையச் செய்யவோ நான் இங்கு வரவில்லை. என் படைப்பாளனுக்கு முன்னால் எனது நோக்கம் என்னவென்றால்

இந்த உலகம் நிலையற்றது என்பதையும் எதிர்கால வாழ்க்கையை நினைவில் கொள்ள வேண்டும் என்பதையும் உங்களுக்கு நினைவூட்டுவதாகும். உலகின் முடிவும் அதன் அடையாளங்களும் யதார்த்தமானவை, ஆனால் யார் இறந்தாலும், அவருடைய உலகின் முடிவு ஏற்கனவே நிகழ்ந்ததைப் போன்றதாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

[தனிப்பட்ட ஒருவரின் பார்வையில்] மரணம் என்பது உலகின் முடிவுக்கு சமமானது ஏனென்றால் யார் இறந்தாலும், அவரது உலகின் முடிவு ஏற்கனவே அங்குள்ளது.

இந்த அனைத்து அத்தாட்சிகளில் எவற்றிற்கும் எந்த தேதியையும் எந்த ஹதீஸும் குறிப்பிடவில்லை என்பதையும் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் முன்னறிவிக்கப்பட்ட இன்னின்ன அத்தாட்சிகள் இந்த வருடத்தில் நிறைவேறும் என்று முழு உறுதியுடன் அறிவிப்பது தவறானதாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அடையாளங்களைப் பேசுகின்ற அனைத்து நிகழ்வுகளும் பாவங்கள் அல்ல என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். (அவற்றில்-சில பாவங்கள் என்பதும் உண்மைதான், ஆனால் மற்றவை புனித நபி (ஸல்) அவர்களால் கணிக்கப்பட்ட உண்மைகளே ஆகும். அவை உலக முடிவிற்கு முன்பு நிகழக்கூடியதும், (அது) அறிவிக்கக் கூடியதும் ஆகும். எனவே, ஹலாலானப் பொருட்களை அதிகரிப்பதோ அல்லது அரேபிய பாலைவனத்தில் பசுமையை நடவு செய்வதோ இஸ்லாத்தில் தவறானது என்று நினைக்காதீர்கள்.

நபி(ஸல்) அவர்கள் முன்னறிவித்த அத்தாட்சிகளில் பல ஏற்கனவே நிகழ்ந்துவிட்டதையும் அல்லது நம் கண் முன்னே நிகழ்ந்து கொண்டிருப்பதையும் நீங்கள் உணரும் போது நீங்கள் குழப்பத்தில் இருப்பீர்கள், இல்லையென்றால் முற்றிலும் அதிர்ச்சியில் இருப்பீர்கள் என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

இன்றைக்கு நான் இத்துடன் முடித்துக் கொள்கிறேன். இது மிகவும் பரந்த விஷயமாகும். இந்த விஷயத்தைக் குறித்து இன்னும் விரிவாக விவரிக்க,அல்லாஹ் எனக்கு தௌஃபீக்கையும் ஞானத்தையும் வழங்குவானாக!, ஏனென்றால் இன்றைய நாட்களில் இது மிகவும் முக்கியமானதாகும். நிச்சயமாக, உலக முடிவின் வரவிருக்கும் அத்தாட்சிகளில் சிலவற்றைக் குறிப்பாக பேசுகையில்,அல்லாஹ் தனது தூய திருமறையில், உன்னத குர்ஆனில் கூறுகிறான்:

هَلۡ يَنظُرُونَ إِلَّآ أَن تَأۡتِيَهُمُ ٱلۡمَلَـٰٓٮِٕكَةُ أَوۡ يَأۡتِىَ رَبُّكَ أَوۡ يَأۡتِىَ بَعۡضُ ءَايَـٰتِ رَبِّكَ‌ۗ يَوۡمَ يَأۡتِى بَعۡضُ ءَايَـٰتِ رَبِّكَ لَا يَنفَعُ نَفۡسًا إِيمَـٰنُہَا لَمۡ تَكُنۡ ءَامَنَتۡ مِن قَبۡلُ أَوۡ كَسَبَتۡ فِىٓ إِيمَـٰنِہَا خَيۡرً۬ا‌ۗ قُلِ ٱنتَظِرُوٓاْ إِنَّا مُنتَظِرُونَ ()

"மலக்குகள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ அல்லது உம் இறைவனே (அவர்களிடம்) வருவதையோ அல்லது உம் இறைவனின் அத்தாட்சிகளில் சில வருவதையோ அன்றி (வேறெதனையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம்முடைய இறைவனின் அத்தாட்சிகளில் சில வரும் அந்நாளில், இதற்கு முன்னால் நம்பிக்கை கொள்ளாமலும், அல்லது நம்பிக்கைக் கொண்டிருந்தும் யாதொரு நன்மையையும் சம்பாதிக்காமலுமிருந்து விட்டு, அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை எவ்வித பலனையும் அவர்களுக்கு அளிக்காது - ஆகவே அவர்களை நோக்கி “(அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர்பாருங்கள்; நாமும் எதிர்ப் பார்க்கின்றோம்” என்று (நபியே!) நீர் கூறும்." (அல் அன்ஆம் 6:159).

என்னைப் பின்பற்றுபவர்கள் அனைவரையும், அனைத்து நம்பிக்கை கொண்டவர்களையும் மற்றும் அனைத்து மனித இனத்தையும் அல்லாஹ் தனது நேர் வழியில் வைத்திருப்பானாக!, இந்த உலகில் அல்லாஹ்வின் வெற்றி ஓங்கி நின்று, தீமை அழியட்டுமாக!. எனவே நாம் நம் இலக்கை அடையவும் நமதுப் பணியை நிறைவேற்றவும் -நமக்கு செய்வதற்கு ஏராளமான பணிகள் உள்ளன. உட்புறம் மற்றும் வெளிப்புற சீர்திருத்தம் தேவைப்படுகிறது, அதனால் தஜ்ஜாலின் தீமைகளும் இந்த உலகின் அனைத்து மனவேதனைகள்\துயரங்களும் நம்மைத் தீண்டாது, இன்ஷா-அல்லாஹ். அல்லாஹ் தனது உண்மையான அடியார்கள் அனைவரிடத்திலும் மற்றும் அனைத்து மனிதகுலத்தின் மீதும் கருணை காட்டுவானாக!.

இன்ஷா-அல்லாஹ், ஆமீன்.


Copyright @ 2013 Sahih Al Islam .