Skip to main content

Posts

Showing posts from May 29, 2022

கிரகணங்கள் இறைவனின் மாபெரும் அத்தாட்சி

ஹஸ்ரத் முஹையுதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:- இந்துக்கள் மற்றும் தமிழர்களுக்கு மத்தியில், குறிப்பாக நாளைய தினமான 3-11-2013 ஞாயிறு அன்று நிகழும் சூரிய கிரகணம் குறித்து அதிகமான அனுமானங்களும் ஊகங்களும் காணப்படுகின்றன. இதற்கான காரணம், மீண்டும் ஒருமுறை தீபாவளியன்று மொத்த சூரிய கிரகணம் நிகழும் என்பதே ஆகும். எனினும் இம்முறை, மொரிஷியஸில் கிரகணம் ஓரளவு கண்களுக்குத் தென்படும். ஆனால், அதே சமயம் கடந்த ஆண்டு (13-14 நவம்பர் 2012) இவ்வாறு அந்த சூரிய கிரகணம் கண்களுக்குத் தென்படவில்லை. எனவே மொரீஷியஸை சார்ந்த இந்து / தமிழ் மத நம்பிக்கையாளர்கள் பின்வருமாறு கேள்வி ஒன்றை எழுப்புகிறார்கள்: இதனால் என்ன நிகழும்? இருண்ட சக்திகளுக்கு எதிராக ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் விடுமுறை நாளான தீபாவளி அன்று சூரிய கிரகணம் அடைவது எதன் அறிகுறி ? என்பதே அவர்களின் கேள்வியாகும். 1762 ஆம் ஆண்டு முதல், விளக்குகள் திருவிழா (தீபாவளி அல்லது தீப ஒளி ) தினத்தில் சூரியனின் மொத்த கிரகணம் வெளிப்படுவது இது நான்காவது முறையாகும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும் : • அக்டோபர் 17, 1762 •...

நபி (ஸல்) அவர்களது உம்மத்தின் சிறப்பு!

ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:- “இறைவனிடமிருந்து இல்ஹாமை (இறை அறிவிப்பைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை, உண்மையான மார்க்கமாகிய இஸ்லாத்தில் - உம்மத்தே முஹம்மதிய்யாவில் நிலைத்து நிற்பவர்களுக்கே அவன் வழங்குகிறான்; மறைவான செய்திகளை அவர்களுக்கு அறிவிக்கின்றான். உண்மையான மனத்துடன் திருக்குர்ஆனை இறைவசனம் என்று உறுதி கொண்டு, உண்மையான பற்றுடன் அதிலுள்ள கட்டளைகளின்படி நடந்து, ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனின் உண்மையான - முழுமை பெற்ற நபி என்றும் எல்லா நபிமார்களையும் விட மிகச் சிறந்த நபி என்றும் காத்தமுன்னபிய்யீன் என்றும் அவர்களே நேரான வழியைக் காட்டித் தருபவர்கள் என்றும் உறுதி கொள்கின்ற நம்பிக்கையாளருக்கு மட்டுமே அந்தத் தூய்மையான இல்ஹாமைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை அவன் வழங்குகிறான். யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஆரியர்கள், பிராமணர்கள் முதலிய வகுப்பினர்களுக்கு அந்த இல்ஹாம் ஒருபோதும் கிடைக்காது. ஆனால் திருக்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றி நடப்பவர்களுக்கு அது எப்பொழுதும் கிடைத்தது; இப்போதும் கிடைக்கிறது; இனிமேலும் கிடைக்கும். புதியதொரு ரிஸாலத்தை (புதியதொரு ஷரீஅத்துச் சட்டத்தை)க் கொண...

உங்கள் காலத்தில் தோன்றும் நபிமார்களை ஏற்றுக்கொள்ளுங்கள்!

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) அவரகள் போதிக்கின்றார்கள். அல்லாஹ் சமூது சமுதாயத்தை ஓர் உதாரணமாகக் குறிப்பிட்டு, அவர்கள் தமது இயல்பிலேயே காணப்பட்ட வரம்பு மீறும் பண்பின் காரணத்தால் தமது காலத்தின் நபியைப் பொய்ப்படுத்தினர் எனக் கூறுகின்றான். மேலும் அவரைப் பொய்ப்படுத்துவதற்காக அவர்களிலிருந்தே பெரும் பாக்கியங்கெட்ட ஒருவன் முன் வந்தான். அந்தக் காலத்தின் ரஸூல் (இறை தூதர்) அவர்களுக்கு அறிவுரையாக, அல்லாஹ்வின் ஒட்டகமாகும். நீர் அருந்தும் இடத்திலிருந்து இதை நீங்கள் தடுக்காதீர்கள். எனக் கூறினார். ஆனால் அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் ஒட்டகத்தின் கால்களை வெட்டினர். எனவே, இந்தக் குற்றத்தின் தண்டனையாக அல்லாஹ் அவர்களின் மீது அழிவை ஏற்படுத்தினான். மேலும் அவர்களை மண்னோடு மண்ணாக்கினான். அவர்களின் மரணத்திற்குப் பிறகு, அவர்களின் விதவைப் பெண்கள், அநாதை சந்ததிகள் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களின் நிலை என்ன வாகும் என்பதைப் பற்றி இறைவன் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை. இந்த இடத்தில் இறைவன், மனிதனின் ஆன்மாவை அல்லாஹ்வின் ஒட்டகத்துடன் ஒப்புமைப் படுத்துவதற்காகக் குறிப்பிட்டிருப்பது ஒரு மிகவும் நுட்பமான ஓர் உதாரணமாகும். இதன் கருத...

தவறான ஷைத்தானிடம் தூண்டுதலில் இருந்து பாதுகாப்பு தேடுவதற்கு!

ஹஸ்ரத்  கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்: ஆகவே, மனித குலமே, எனது முஸ்லீம் சகோதரர்களே சகோதரிகளே, அன்புக்குரிய குழந்தைகளே! இன்னும் உலகெங்கிலும் உள்ள எனது ஸஹாபிகளே! அனைவரும் அல்லாஹ்வு(தபாரக்) விற்கு முற்றிலும் அடிபணிந்து விடுங்கள்! ஷைத்தானை எதிர்த்து நில்லுங்கள். அதனால், அவன் உங்களை விட்டும் ஒடிவிடுவான். அல்லாஹ்(தபாரக்)வின் அதிதீவிர வீரர்களாகி உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும் அவனது ஏகத்துவத்தை மிகுந்த வீரியத்துடன் பாதுகாப்பவர்களாகி விடுங்கள். நல்லதைச் செய்யுங்கள், நல்லதையேப் பாருங்கள், நல்லவர்களாகவே நடந்து கொள்ளுங்கள். முஸ்லிம்களை நல்ல முறையில் பயிற்சி செய்யுங்கள், முஸ்லிம்கள் என்று வெறும் பெயரளவில் மட்டுமே இருந்துவிடாமல், அதனை செயல்படுத்திக் காட்டும் நல்ல முஸ்லிம்களாக நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (தபாரக்)விற்கு அருகில் வாருங்கள்! தினசரித் தொழுகைகளை மேற்கொள்ளுங்கள்!, திருக்குர்ஆனைப் படியுங்கள்! படைப்பினங்களுடன் அல்லாமல் அல்லாஹ்(தபாரக்)வுடன் நெருங்கிய நட்பு கொள்ளுங்கள், பிறகு அதற்கு பிரதிபலனாக அல்லாஹ் (தபாரக்) உங்களை எந்த அளவுக்கு நேசிப்பான் என...

நேர்வழி பெறுபவர் யார்?

ஹஸ்ரத் மஸீஹ் (அலை) கூறுகின்றார்கள் :- “ஓர் இறை தூதர், நபி, முஹத்தஸ் படைப்பினங்களின் சீர்திருத்தத்திற்காக வானத்திலிருந்து இறங்கும் போது அவருடன் கண்டிப்பாக வானவர்கள் இறங்குகின்றனர். அவர்கள் நல்ல உள்ளங்களில் நேர்வழியை இட்டுச் செல்கின்றனர். நன்மையைத் தூண்டுகின்றனர். இறை மறுப்பு, வழிகேடு எனும் இருள் நீங்கி ஈமான், நேர்வழி எனும் உண்மையான விடியற்காலை தோன்றும்வரை வானவர்கள் இறங்கிக் கொண்டிருக்கின்றனர். அல்லாஹ்வின் வழக்கம் இப்படித்தான் நடந்து வந்திருக்கின்றது.” (ஃபத்ஹே இஸ்லாம் பக்கம் : 18 அடிக் குறிப்பு)

இறைவஹீ இல்லையென்றால் இறைவன் உங்களிடம் உரையடாவில்லை என்றால் அதுவும் ஒருவகை சிலை வழிபாடே!

ஹஸ்ரத் மவ்லானா ஹக்கீம் நூருத்தீன் (ரலி) (முதலாவது கலீபஃதுல் மஸீஹ்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள் :- அல்லாஹ் ஸுபுஹானஹு தஆலா முற்காலத்தில் தனது நேசர்களிடமும் தூதர்களிடமும் பேசியதைப் போன்று இப்போதும் எப்போதும் தான் விரும்பியவர்களுடன் உரையாடுகின்றான். இறைவா! உனது அருள் கிடைத்தவர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக! என்ற வேண்டுதலை இறைவனே கற்றுத் தந்துள்ளான். அதாவது, நபி, சித்தீக், ஷஹீத், மற்றும் ஸாலீஹீன் ஆகியோர்களின் வழியில் எங்களை நடத்துவாயாக என்பதாகும். இறைவன் உரையாடுவது என்பது அந்த வழியை சேர்ந்ததே ஆகும். இஸ்ரவேலர்கள் (மூசா நபியுடைய காலத்தில்) கன்றுகுட்டியை வணங்கி வந்தார்கள் இதனை கண்டிக்கும் வகையில் அவர்கள் வணங்கக் கூடியவை அவர்களிடம் உரையாடுவதில்லை; அவர்களுக்கு நேர்வழி காட்டுவதும் இல்லை என்று இறைவன் கூறுகின்றான். இவ்வாறிருக்க இறைவன் பேசுகின்றான் என்பதை முஸ்லிம்கள் ஏன் ஏற்க மறுக்கின்றார்கள்? (மிர்க காத்துல் யக்கீன் 24-27) அப்போது அன்னார் முஸ்லீம்களை பார்த்து கேட்டதை இன்று அஹ்மதிகளை பார்த்து கேட்பது போன்று உள்ளது. அல்லாஹு அக்பர். உடனே மௌலவிகள் கூறும் அடிப்படை ஆதாரம் இல்லாத வாதத்தை அதாவது ...

பொருள் தியாகத்தை பற்றி காலத்தின் இமாம் அவர்கள்

பொருள் தியாகத்தை பற்றி காலத்தின் இமாம் ஹஸ்ரத் முஹையதீன் அல் கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகிறார்கள்: நமது ஜமாத்தை (ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்) சேர்ந்த மக்கள் எப்போதும் இந்த அருளின் பக்கம் நினைவு கூற்ந்தவர்களாக இந்த தியாகத்தின் அருள்களையும் பயன்களையும் புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். எனது சகோதரர்களே நமது மறைவானவற்றை அவனை தவிர யார் அறிந்து கொள்ள முடியும்! எனவே நாம் இந்த தியாகத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்ற முழு விழிப்புணர்வு மற்றும் உண்மையான உணர்வும் நம்மிடையே உருவாக வேண்டும். நாம் உளப்பூர்வமாக நல்ல எண்ணத்தில் இந்த தியாகத்தில் ஈடுபடுத்திக் கொண்டால் அந்த ஏக இறைவனின் அருளுக்கும் அன்பிற்கும் பாத்திரமாகலாம். இதை சொற்களால் கூறுவது கடினமான விஷயமாகும். இன்னும் சில வேளைகளில் மக்கள் பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கும்போது நம்மை சிலர் தொந்தரவு செய்வதிலிருந்து தவிர்க்க அல்லது குழந்தைகள் அடம்பிடிப்பதை நிறுத்தும் நோக்குடன் அவர்களுக்கு ஏதாவது ஒன்றை கொடுப்பது போல பிச்சைக் காரனுக்கு பிச்சை கொடுக்கின்றனர், ஆனால், எனது அன்புக்குரியவர்களே! நீங்கள் பிறருக்கு கொடுக்கும் போது கூட...

உண்மை இஸ்லாம்

இஸ்லாம் இரண்டு நிலைகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது :- ஒன்று மறைவான அம்சத்தையும், இரண்டாவதாக வெளிப்படையான நிலையையும் உள்ளடக்கியது. அதாவது முதல் நிலையை பொருத்தளவில், அந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களின் மீது ஈமான், நேசம், நம்பிக்கை மற்றும் உண்மைத் தன்மையை குறிக்கின்றது. இரண்டாவது நிலை, முதல் நிலையை வெளிப்படையாக பிரதிபலிக்கக் கூடிய, இன்னும் குறிப்பாக இதில் எந்த அளவிற்கு நாம் மதிப்பு மற்றும் பற்றுதலுடன் இருக்கின்றோம் என்பதை நமது தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற அமல்களும், மேலும் புனித திருக்குர்ஆன் கூறும் சுன்னத்துகள், ஹராம் மற்றும் ஹலால் ஆகியவற்றை பேணுவதையும் குறிக்கிறது. இங்கு நாம் உணர வேண்டிய விஷயம் என்னவென்றால் நாம் ஒரு போதும் மறைவானவற்றில் இருந்து வெளிப்படையான நிலையை பிரிக்க முடியாது. இன்னும் கூறவேண்டும் என்றால் இவ்விரண்டையும் சேர்த்துதான் முழுமையானதொரு இஸ்லாம் என்று அழைக்கப்படுகிறது இத்துடன் எனது இந்த ஜும்ஆ குத்பாவை நிறைவு செய்கின்றேன். இன்ஷா அல்லாஹ்! அல்லாஹ் நாடினால் இதன் தொடர்ச்சியை அடுத்த வாரமும் தொடர்வேன், மேலும் அல்லாஹ் உங்களுக்கு இந்த ஜும்ஆ ச...

மாற்று மத சகோதரர்கள் கொண்டாடும் ஒரு பண்டிகையை போல் மாபெரும் ஆன்மீக அருளான முஸ்லிஹ் மவ்வூது தினத்தை நாம் கொண்டாடலாமா?

முஸ்லிஹ் மவ்வூது பற்றி ஹஸ்ரத் மஸீஹ்  (அலை)  அவர்களின் முன்னறிவிப்பு :-- ராஜுல் ஹக் (ரலி) அறிவிக்கின்றார்கள் ஒருமுறை வாக்களிக்கப்பட்ட மஸிஹ் (அலை) கூறினார்கள் : இறைவன் என்னிடம் இவ்வாறு தெரிவித்தான்; அதாவது, இந்த உலகத்தில் மிகப்பெரிய எழுச்சி ஒன்று உருவாகும் அது முதல் எழுச்சியாக இருக்கும். அரசர்களுக்கு அரசர்கள் படையெடுப்பார்கள் அப்போது இந்த பூமியே நிரம்பும் அளவுக்கு ரத்த ஆறு ஓடும். அந்த அந்த அரசர்களின் குடிமக்களும் தங்களுக்கிடையே உள்ள அச்சத்தினால் போராடுவார்கள். அப்பொழுது உலகளாவிய அளவில் மிகப் பெரிய அழிவு ஏற்படும். இந்த அணைத்து நிகழ்வுக்கும் மையப்புள்ளியாக சிரியா தோன்றும். இதுவே வாக்களிக்கப்பட்ட மகன் தோன்றும் காலம் ஆகும். இறைவன் இந்த நிகழ்ச்சிகளை வாக்களிக்கப்பட்ட அவர் வருகையுடன் தொடர்பு படுத்தியுள்ளான். இதற்கு பிறகு என்னுடைய இந்த இயக்கம் உலகத்தில் பரவத் தொடங்கும் இன்னும் கூறுவதென்றால் அரசர்களும் இதன் உறுப்பினர் ஆவார்கள். அப்பொழுது நீங்கள் வாக்களிக்கப்பட்டவரை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். [Tadhkiratul-Mahdi, part 2, new ed., p. 274], Cited from Tadhkirah, pp.1065-66, ...

இந்த நூற்றாண்டில் அருளுக்குரிய இந்த ரமலானின் கடைசி 10 இரவில் இரண்டு லைலத்துல் கத்ர்

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஜிம் (அலை) கூறுகின்றார்கள்:- என் அருமை ஸஹாபிகளே! மற்றும் அனைத்து முஸ்லீம் பெருமக்களே! திருகுர்ஆன் மற்றும் சுன்னத்தை பின்பற்றுவது தலையாய முக்கியத்துவம் என்பதை நீங்கள் அனைவரும் நன்றாக புரிந்துகொள்ளுங்கள். இதிலும் முக்கியமாக அந்த ஏக இறைவன் நமக்கு மற்றுமொரு ரமலான் மாதத்தை அடையச்செய்து அதை சாட்சி ஆக்கியுள்ளான், எனவே இத்தகைய அருளுக்குரிய *இரவையும் பகலையும் வீணாகக்கழித்து விடாதீர்கள்* இந்த நேரங்களில் உங்கள் இபாதத்துகளை அதிகப்படுத்தி அந்த மேலான கண்ணியம்மிக்க இரவுகளின் அருள்களை நீங்கள் பெறுவீர்கள் என்று திட்டமாக நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களிடம் விருப்பமும் அல்லாஹ்வின் மீது திட்டமாக நம்பிக்கையும் இருக்கும் என்றால், அல்லாஹ் சுபஹானஹு தாலா நிச்சயமாக அவனது அருளை உங்கள் நம்பிக்கையின் மீது வைத்து, அவனுடைய கருணையையும் அருள்களையும் அவனது மேலான மன்னிப்பையும் பெறக்கூடியவர்களாக ஆக்கிவிடுவான். இன்னும் அவன் உங்களுக்கு நரக நெருப்பிலிருந்து மேலான பாதுகாப்பு அளிப்பான், இத்தகைய பாதுகாப்பு நீங்கள் உங்களுடைய நப்ஸ்சை கட்டுப்படுத்தும்போது அதாவது உங்களுடைய பொறாமை மற்றும் உண்ர்ச்ச...