Skip to main content

Posts

Showing posts from October 22, 2023

ஏக இறைவனே எல்லாமாக இருக்கிறான்.. அவனின்று எதுவும் இல்லை

ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை)அவர்கள் கூறுகிறார்கள்:-  இஸ்லாமிய நம்பிக்கை கொண்ட அன்பான சகோதர, சகோதரிகளே நானோ, அல்லது நீங்களோ நமது சுய விருப்பத்தின்படி தோன்றவில்லை. இந்த மிகப் பரந்த பிரபஞ்சமும் அதில் அடங்கியுள்ள அனைத்து படைப்பினங்களும் மற்றும் ஒவ்வொரு இனத்திற்கும், படைப்பிற்கும் தொகுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளும், சட்டங்களும் அந்த ஒரே ஒரு படைப்பாளன் மேற்கொண்ட செயல்முறையே ஆகும். அந்த தனித்தன்மையுடைய படைப்பாளன் அல்லாஹ்வே ஆவான். முதன்முதலில், படைப்பாளனைத் தவிர வேறு எந்த ஒரு படைப்பினமும் இருந்ததில்லை. பின்னர் மலக்குகள், ஜின்கள், மனிதர்கள் போன்ற உயிரினங்களைப் படைக்க அல்லாஹ் (ஸுப்ஹா) முடிவு செய்தான். இந்த படைப்பினங்களுக்கு மத்தியில், மிகவும் குறிப்பாக ஜின்களிலும் மனிதர்களிலும் தங்களுடைய வாழ்வை நல்லவற்றை செய்வதற்காக பயன்படுத்தும், அதே சமயம் இதற்கு நேர்மாறாக மற்றவர்கள் அதை தீமையை செய்வதற்காகப் பயன்படுத்துகின்றார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: "அந்த பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும் பெண்ணையும் படைத்ததை, சான்றாகக் காட்டுகிறேன். நிச்சயமாக உங்கள் முயற்சி...