பிஸ்மில்லா ஹிர் ரஹ்மான் நிர்ரஹீம் நபித்துவத்தின் முத்திரை இமாம் புஹாரி அவர்கள் பதிவு செய்துள்ள ஒரு ஹதீஸில், ‘ஹஸ்ரத் அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கின்றார்கள். எம்பெருமானார்(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். ‘எனக்கும் எனக்கு முன்னர் தோன்றிய நபிமார்களுக்கும் இடையிலுள்ள நிலைமை ஒரு கட்டிடத்திற்கொப்பானதாகும். அதன் அமைப்பு மிகவும் அழகுள்ளதாக இருக்கிறது. ஆனால் அதில் ஒரு செங்களுக்கான இடம் விடப் பட்டிருக்கிறது. மக்கள் இந்தக் கட்டிடத்தைச் சுற்றிப்பார்த்து அதன் அழகைக்கண்டு வியப்படைகின்றனர். ஒரு செங்களுக்கான இடம் ஏன் விட்டு வைக்கப்பட்டிருக்கிறதென மனதிற்குள் கேட்டுக் கொள்கின்றனர். விட்டு வைக்கப்பட்ட அந்த இடத்தை நிரப்புவதற்கான செங்கல் நான்தான். என்மூலம் அந்தக் கட்டிடம் முழுமை பெற்றுவிட்டது. இதன் காரணமாகத்தான் ரஸுல்மார்களின் முத்திரையாக ஆக்கப்பட்டிருக்கிறேன் என்று கூறினார்கள். எம்பெருமானார் ஹஸ்ரத் முஹம்மது நபி(ஸல்) அவர்கள்தான் கடைசி செங்கல் ஆவார்கள் (என்பதிலும்), தீன் - மார்க்கத்தின் வீட்டை முழுமையாக்குகின்றார்கள் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை. உண்மையில், அன்னார் தோன்றியதால் (வருகையினால்) அவர்கள...