இந்தியாவிலும், மற்ற பல்வேறு நாடுகளிலும் மிகக் குறிப்பாகவும், இரக்கமின்றியும் பிரான்ஸ் நாட்டிலும் பள்ளிக்கூடங்களில் உள்ள சிறுமிகளும், பெண்களும் ஹிஜாபைக் கடைப்பிடிப்பது குறித்துக் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மை யானவர்கள், ஹிஜாப் (முக்காடு) அணிவது பொதுப் பள்ளிக் கூடங்களின் கொள்கைக்கு முரணானதாக, அதாவது அரசு நிதியுதவி-(பெறும்)பள்ளிகள் மதம் சம்பந்தமான விஷயத்தில் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாகத் தோன்றுகிறது. கலீஃபத்துல்லாஹ் என்ற நிலையில், ஒரு முஸ்லீம் மாணவி தலையின் மேல் அணியும் "முக்காடு" போன்ற ஒரு சிறிய விஷயத்திற்காக ஏன் இவ்வளவு பரபரப்பு என்பது எனக்குப் புரியவில்லை. முஸ்லீம்களும் [அந்தந்த நாடுகளின்] மாநில நிதிகளுக்கு விகிதாச்சார அளவில் வரிச் செலுத்தி உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! என் கருத்துப்படி, பள்ளி வழக்கத்தை சீர்குலைக்கவோ அல்லது ஒழுக்கத்திற்கு அச்சுறுத்தலாகவோ இல்லாதவரை பள்ளிகள் மாணவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை மதிக்க வேண்டும். இருப்பினும், நாம் பிரான்ஸை உதாரணமாகப் பார்த்தால், அதிகரித்து வரும் வேலையின்மையை அவர்கள் வெளிப்படை...