" இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள். அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தனது (இறை) வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (ஆல இம்ரான் 3:104) மேலே கண்ட திருக்குறான் வசனத்தை ஓதிக்காட்டியவர்களாக, ஹஸ்ரத் கலிஃபத்துல்லாஹ் முனீர் அஹமது அஜீம் (அலை) அவர்கள் இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்கள். "அல்லாஹ் திருக்குரானில் கூறுகிறான், ஒன்றுபட்ட ஓர் உடல் போன்று ஒன்றிணைந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றி பிடித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவராக அல்ல! மாறாக, அதனை கூட்டாக ஒன்றிணைந்து பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். உண்மையில், நான் உங்கள் முன் தற்போது ஓதிக் காட்டிய இவ்வசனத்தில் அல்லாஹ் கயிற்றை வெறு...