(26/02/2021~5 முஹர்ரம் 1438 ஹி) உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் (மற்றும் அனைத்துமுஸ்லிம்களுக்கும்) தனது ஸலாத்தினைத் தெரிவித்தப் பின்னர் கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷ்ஹது தஅவூது மற்றும் சூரா ஃபாத்திஹா ஓதிய பிறகு “சீர்திருத்தம் & தாயி-ஏ-இல்லல்லாஹ்” என்ற தலைப்பில் தனது சொற்பொழிவை வழங்கினார்கள். அல்லாஹ்விற்காகவும், மனித சமுதாயத்திற்காகவும் சேவை செய்யுங்கள். உங்களை சுற்றியுள்ள மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழையுங்கள். எவ்வாறு “மரணித்துப் போனவர்களுக்கும் மரணித்துக் கொண்டிருந்தவர்களுக்கும்” உயிர் கொடுத்தாரோ அத்தகைய ஹஸ்ரத் இப்ராஹீமின் உதாரணத்தை பின்பற்றுங்கள். மக்களிடத்தில் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள். அவர்களதுத் தேவைகளை நிறைவேற்றுங்கள மேலும் அவர்களது துன்பம் துயரங்களில் கலந்து கொள்ளுங்கள். இதுவே ஒரு தாயி ஏ இலல்லாஹ்வாக மாறுவதற்குரிய மிகச் சிறந்த வழியாகும். وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَىٰ ۖ قَالَ أَوَلَمْ تُؤْمِن ۖ قَالَ بَلَىٰ وَلَـٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِي ۖ قَالَ فَخُذْ أَرْبَعَةً مِّنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَىٰ كُلِ...