Monday, June 6, 2022

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு 8 முறை இறங்கிய வஹீ

ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்களுக்கு 2010 ஆம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி மதியம் 12:05 மணிக்கு, கிட்டதட்ட 8 முறை இறங்கிய வஹீ

இப்போது உலகின் நிலை என்னவென்றால், அது இன்னும் அதிகமான பேரழிவுகளை சாட்சியாகக் காண்பிக்கும். இது இவர்கள் இறை கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாததற்காக மற்றும் என் வழிபாட்டை விட்டு விலகிவிட்டார்கள் என்பதால் இது இவர்களுக்கு ஒரு பாடம் ஆகும். . ஹெய்டி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதைப்போல மற்ற நாடுகளும், ஏனென்றால் உலகத்தின் அழுக்குகள் படிந்து இந்த மக்கள் எனது வழிபாட்டை விட்டு விட்டனர். மேலும் நினைவில் கொள்ளுங்கள் என் கலீஃபத்துல்லாஹ்வே நான் பலமுறை கூறிவிட்டேன் அழிவு அழிவு! பேரழிவு. இதனால் இரத்த ஆறுகள் ஓடும் விதவைகளின் கூக்குரல் எங்கும் ஒலிக்கும் இதை அல்லாஹ் விதித்திருக்கின்றான்.

எந்த மனித சக்தியாலும், மற்றும் எந்த மனிதனாலும் அல்லாஹ்வின் வடிவமைப்பை நிறுத்த முடியாது.

Copyright @ 2013 Sahih Al Islam .