இந்நிலையில் உங்களுக்கு நான் கூறுவேன், உறுதியாகத் தெரிந்து கொள்ளுங்கள்! மார்க்க சம்பந்தமான காரியங்களைச் சீர்படுத்தி விருத்தி செய்வதற்காக ஒருவர் உங்களிடம் வந்துவிட்டார். ஆனால் நீங்கள் அவரை அடையாளம் கண்டு கொள்ளவில்லை. இதோ உங்கள் முன்னால் உங்களோடு பேசிக் கொண்டிருப்பவர் அவரே உங்களுடைய கண்கள் கனத்த திரையினால் மூடப்பட்டுள்ளன. உங்கள் உள்ளங்கள் உண்மையைத் தேடுகிறதென்றால் "இறைவனோடு உரையாடுவதாக வாதம் புரியும் ஒருவரைச் சோதிப்பது மிகவும் எளிதாகும்."அவரிடம் வாருங்கள், அவருடன் இரண்டு மூன்று வாரங்கள் வாழ்ந்து பாருங்கள். இறைவன் நாடினால் அவர் மீது பொழிந்து கொண்டிருக்கும் இறையருள்களின் மழையையும், அவர் மீது இறங்கிக் கொண்டிருக்கும் உண்மையான இறைவெளிப்பாட்டின் ஒளிகளையும் நீங்கள் உங்கள் கண்களாலேயே கண்டு கொள்வீர்கள். தேடுகிறவன் கண்டு கொள்வான். தட்டுகிறவனுக்குக் கதவு திறக்கப்படும். மூடப்பட்ட ஓர் இருண்ட அறையினுள் ஒளிந்து கொண்டு சூரியன் எங்கிருக்கிறது என்று குற்றம் சாட்டினால் அது வீணானது. முழுக்க முழுக்க நீயே வீணாக்கிய காரியமாகும். முட்டாளே உனது கண்களை மறைக்கும் திரையை அகற்று. அப்போது நீ சூரியனைக் காண்பது மட்டுமல்லாமல் அதனால் ஒளியூட்டவும் பெறுவாய். (இஸ்லாத்தின் வெற்றி பக்கம் 66, 67)
وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன் அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன் ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...
