Skip to main content

வாதம் செய்யாத வஹீயின் நிலை!

அவன் வானவர்களை "வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறு எவனும் இல்லை. எனவே எனக்கே அஞ்சுங்கள்" என எச்சரிப்பீராக என்ற வஹியுடன், அடியார்களுள் தான் விரும்பியோரிடம் தன் கட்டளை மூலம் இறக்குகிறான். (திருக்குர்ஆன் 16: 3 )

இந்த வசனத்திற்கு ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் தஃப்ஸீரே கபீரில் விளக்கம் அளிக்கும் போது இங்கே *الروح* (அர் ரூஹ்-இறை வெளிப்பாடு) என்பதன் பொருள் இறைவனின் உயிர் வழங்கும் வார்த்தை என்பதாகும். இது ஒரு நபியின் செய்தியை அதன் உயிர் வழங்கும் குணங்களை குறிப்பதற்கும் கூட பயன்படுத்தப்படுகின்றது.

'மக்களை எச்சரிக்க' என்ற வார்த்தைகள் இங்கே சுட்டிக் காட்டுகின்ற 'இறை வெளிப்பாடு' என்பதன் பொருள் ஒரு இறைத் தூதருக்கு வழங்கப்படுகின்ற சிறப்பு வெளிப்பாடாகும். இறை வெளிப்பாடு பொதுவாக இரண்டு வகையானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்:

(1) பெறக்கூடிய நபரைப் பற்றிய அவருடைய சொந்த வெளிப்பாடு. பொதுவாக அதனை வெளியிடுவதற்கு எந்த 'சிறப்பு தடை' யும் இல்லை. என்றாலும், அது அறிந்து கொள்ளப்பட்டு வெளியிட வேண்டிய தேவையில்லை.

(2) மனிதகுலத்திற்கான பரந்த அளவிலான இறை வெளிப்பாடு. பிந்தைய இந்த வகையிலான இறை வெளிப்பாட்டிற்க்கு பரந்த வகையில் அறிவிக்க வேண்டும், மேலும் அதனை வலுக்கட்டாயமாக அடக்குவது என்பது ஒரு தெளிவான பாவத்திற்குச் சமமாகும்.

முதல் வகையான வஹீ பொதுவானதாகும், இதையே ஹஸ்ரத் மஸீஹ்(அலை) அவர்கள் கூறும்போது ஜிப்ராயீலிய ஒளியின் 46 ஆவது பகுதி முழு உலகிலும் பரவி இருக்கிறது. இன்னும் கூறுவதென்றால், வேசிகளின் குழுவைச் சேர்ந்த மிகவும் துர் நடத்தையுடைய தன் இளமையை முழுவதும் தீய நடத்தையிலேயே கழித்த ஒரு பெண், சில நேரத்தில் உண்மையான கனவைப் பார்த்து விடுகிறாள் என்பது அனுபவத்தில் அறிந்த உண்மை என்பதுவரை நான் ஏற்றுக் கொள்கிறேன். இத்தகைய பெண் இரவில் குடித்து விட்டு அந்நிய ஆணுடன் படுக்கையில் கிடக்கும் போது கூட ஏதாவதொரு கனவைப் பார்க்கிறாள். அது உண்மையாகி நிறைவேறியும் விடுகின்றது என்பது இன்னும் ஆச்சரியமான விஷயமாகும். (ஆதாரம்:-குறிக்கோள் பற்றிய விளக்கம் பக்கம் 73)

ஆனால் இரண்டாவது வகை அறிவிக்கும் படியான வஹீ மார்க்கத்தின் உயிர் ஆகும். இந்த அருள் இப்போது இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கத்திற்கும் கிட்டாது.

மஸீஹ்(அலை) அவர்கள் கூறுகிறார்கள்:-

இறைவனிடமிருந்து இல்ஹாமை அதாவது இறைவெளிப்பாட்டைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை உண்மையான மார்க்கமாகிய உம்மதே முஹம்மதிய்யாவில் நிலைத்து நிற்பவர்களுக்கு அவன் அளிக்கிறான். இறைவனின் சக்திக்கு மட்டும் உட்பட்ட, மறைவான செய்திகளை அவர்களுக்கு அறிவிக்கின்றான். எவர் உண்மையான உள்ளத்துடன் திருக்குர்ஆனை இறைவசனம் என உறுதி கொண்டு, உண்மையான பற்றுடன் அதிலுள்ள கட்டளைகளின்படி நடந்து, நபிகள் நாயகம் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா(ஸல்) அவர்களை இறைவனின் உண்மையான முழுமை பெற்ற நபி என்றும், எல்லா நபிமார்களையும் விட மிகச் சிறந்த நபி என்றும் காத்தமுன் நபிய்யீன் என்றும் உறுதி கொள்கின்றாரோ, அத்தகு நம்பிக்கையாளர்களுக்கு மட்டுமே அந்தத் தூய்மையான இல்ஹாமைப் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தை இறைவன் அளிக்கின்றான். யூதர்கள், கிறித்தவர்கள், ஆரியர்கள், பிராமணர்கள் ஆகியோருக்கு அந்த இல்ஹாம் ஒருபோதும் கிட்டாது. எனினும் திருக்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றுபவர்களுக்கு அது அப்போதும் கிடைத்தது, இப்போதும் கிடைக்கிறது, இனிமேலும் கிடைக்கும். புதியதொரு ரிஸாலத்தைக் கொண்டுள்ள வஹி அவசியம் இல்லாததால் அது முடிவு பெற்று விட்டது. எனினும் ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களுக்கு அந்த இல்ஹாம் கிடைக்கிறது. அது ஒருபோதும் நிற்காது. நமக்குக் கிடைக்கும் இந்த இல்ஹாம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உண்மை நபி என்பதற்கு மிகப் பெரிய சான்றாகும். இந்த சான்றுக்கு முன்னால் இஸ்லாத்தை மறுப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இழிவும் அவமானமும் அடைகிறார்கள். (பராஹீனே அஹ்மதிய்யா தொகுதி 3 பக்கம் 216 அடிக்குறிப்பு 11)

மிகத்தெளிவாக அன்னார் அறிவிக்கும் படியான வஹீ தான் இஸ்லாத்தின் உயிர் என்றும்., வாதம் செய்யாத வஹீ தனி மனிதனுக்கு பொதுவாக அதாவது ஜிப்ரீலிய ஒளியின் நாற்பத்து ஆறில் ஒரு பங்கை இன்னும் சொல்ல போனால் இதுபோன்ற இறை வெளிப்பாடு மற்றும் கனவு ஒரு வேசிக்குக்கூட கிடைக்கின்றது என்று கூறுகின்றார்கள். ஆனால் அந்தோ! பரிதாபம்! இந்த முல்லாக்கள் அவர்களது கலீஃபாவை எந்த நிலைக்கு அழைத்து செல்கின்றனர் பாருங்கள்..,

மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் குறிப்பிடும் போது;

நிச்சயமாக உமது பகைவனே ஆண் சந்ததியற்றவன். (திருக்குர்ஆன் 108:4)

திருக்குர்ஆனின் கருத்துப்படி இறை அறிவிப்பை அதாவது இறைவஹீயை பெறும் கூட்டத்தினரே ஆன்மீக சந்ததிகளாவர். அப்படிப்பட்ட ஆன்மீக சந்ததியினரை முஹம்மது நபி (ஸல்) அவர்களாலேயே பெறமுடியும். அவர்களின் எதிரிகளால் பெற இயலாது, என்பது தெளிவாகின்றது.

இன்னும் ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது(ரலி) அவர்கள் கீழ்காணும் வசனத்திற்கு விளக்கம் அளிக்கும்போது,

அந்த இரவை அது மூடிக் கொள்ளும் போது சான்றாகக் காட்டுகிறேன். அந்தப் பகலை அது ஒளி வீசும் போது சான்றாகக் காட்டுகிறேன். ஆணையும், பெண்ணையும் படைத்ததை சான்றாகக் காட்டுகிறேன். (திருக்குர்ஆன் 92: 2-4 )

வருகின்ற முஜத்தித் ஆன்மீக ஆண்கள் என்ற பொருள் தருகின்ற, அதாவது முஜத்தித்மார்கள், நபிமார்களை போன்று ஆன்மீக ஆண்கள் அதாவது வாதம் செய்யும் ஆன்மீக சந்ததி என்று தெளிவாக ஹஸ்ரத் முஸ்லிஹ் மவூது (ரலி) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (ஆதாரம்:-HQ, 92: 2-4, pp. 2835)

மற்றுமொரு வியக்கத்தக்க ஆட்சேபனை என்னவென்றால், "இந்த மூட முல்லாக்கள் இறைபுரத்திலிருந்து தோன்றும் முஜத்தித்மார்கள் வாதம் செய்வதில்லை" என்ற கூற்றை முன் வைக்கின்றனர். ஆனால் திருகுர்ஆன் மற்றும் மஸீஹ்(அலை) அவர்களின் கூற்றின் அடிப்படையில் நாம் பார்த்தால் இந்த கூற்றும் தவறானது என்பதை அறியலாம்.

மேலும் ஹஸ்ரத் மஸீஹ் மவூது(அலை) அவர்கள் ஹகீகத்துல் வஹீயில் அன்னாரின் வருகையின் முதல் அடையாளமாக நூற்றாண்டின் முஜத்தித்மார்களின் வருகையை பற்றி குறிப்பாக "நூற்றாண்டின் தலைமையில் தோன்றும் இத்தகைய முஜத்தித் மார்கள் தத்தமது காலத்தில் வாதம் செய்துள்ளனர்." என்று தெளிவாக குறிப்பிட்டுளார்கள். (HaqIqatul-WaHI—The Philosophy of Divine Revelation page no:241)

எனவே திருமறை மிக தெளிவாக இறை வஹீயை வைத்து வாதம் செய்பவரே "ஆன்மீக ஆண்" என்று கூறுகின்றது. அப்படியானால், இந்த முல்லாக்கள் கருத்தின் படி அவர்களது கலீஃபாவின் நிலை கேள்விக்குறியே?!

எனவே எவர் தம் இறைவனின் தெளிவான பாதையில் இருக்கிறாரோ அவர், எவனுடைய செயலின் தீமை அவனுக்கு அழகாகக் காண்பிக்கப் பட்டுள்ளதோ, இன்னும், எவர்கள் தம் மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றார்களோ அத்தகையோருக்கு ஓப்பாவாரா? (அல்குர்ஆன் : 47:14)

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அய்) அவர்களது கனவு

(நாள்: 16-06-2022 தஹஜ்ஜுத் தொழுகைக்கு முன்பு) என்னிடம் ஒரு பெரிய வெள்ளை லாரி இருப்பதாக நான் கனவு கண்டேன். அது உலர்ந்த இலைகள் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது லாரியின் கேரியர் பகுதியில் இரண்டு நாய்களைப் பார்த்தேன். அதன் பிறகு உடனே அவற்றுக்குப் பதிலாக இரண்டு இளம் குதிரைகள் இருப்பதைக் கண்டேன். நான் சாலையை பார்த்தபோது வெறிச்சோடி இருப்பதைக் கண்டேன். பிறகு, வாகனங்கள், சொகுசு வாகனங்களும் கூட ஒதுக்கி வைக்கப்படும் ஒரு காலம் வரும் என்றும், அதனால் குதிரைகளும், பிற விலங்குகளும் போக்குவரத்து முறைகளாகவும், அதன் மதிப்பு/முக்கியத்துவம் அதிகரித்து விடும் என்றும் இது குறித்து நான் முன்பே கூறியிருந்தேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன். Then, I saw myself in a place where a tall [imposing] and great [in personality] woman in white appeared before me. She was the wife of a great prophet of Allah and was born in Hindustan [India]. Her name was Saraswati but in the dream I addressed her as Hajra [both names] and realised that she was the wife of Hazrat Ibrahi...