Thursday, June 9, 2022

இறை வஹீ

09 மார்ச் 2020 அன்று ஹஸ்ரத் முஹையூதீன் அல் கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம்(அலை) அவர்களுக்கு இறங்கிய இறை வஹீ:-

பிஸ்மில்லாஹி ரஹ்மானிர் ரஹீம்

Wa maa kaana li-nafsin ‘antu’ mina ‘illaa bi-’Iz-nillaah: wa yaj-’alu-rijsa ‘alal-laziina laa ya’- qiluun.

(எல்லா நாடுகளிலும் தன்னுடைய இந்த ஜமாஅத்தை அதாவது ஜமாஅத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாத்தை அவன் பரப்புவான் என்பதையும், சான்றுகள் மற்றும் ஆற்றல் மிக்க வாதத்தின் அடிப்படையில் மற்ற அனைவருக்கும் மத்தியில் மேலோங்க செய்வான் என்பதையும் அல்லாஹ் இன்று எனக்கு வெளிப்படுத்தியுள்ளான்.)

"என்னுடைய கலீஃபா முனீர் அஹ்மது அஸீமே! உலகம் முழுவதும் பயணம் செய்யுங்கள். உமது படைப்பாளனின்பால் மக்களை அழையுங்கள். இதற்காகவே உம்மை அனுப்பியுள்ளோம். நீர் என்னுடைய கலீஃபாவாக இருக்கின்றீர்கள். எனவே படைப்பினங்களை விட்டு விட்டு படைத்த எனக்கே கட்டுப்படுவீராக! அந்த நாட்கள் வந்து கொண்டிருக்கின்றன. இன்னும் அவை வாசலின் அருகே உள்ளன. இந்த மார்க்கம் மட்டுமே முழு உலகிலும் பிரதானமாக இருக்கும். உலகின் அனைத்து நாடுகளும் உமக்கு கீழ் வந்துவிடும். உம் மீது நம்பிக்கை கொள்ளும் அனைத்து மக்கள் மீதும் நான் அருட்கொடைகளை பொழிவேன். மேலும் எல்லோரும் உங்கள் மீது மிகுந்த மரியாதையை செலுத்துவார்கள். உங்கள் எதிரிகள் அனைவரும் அழிவையும், தோல்வியையும் எதிர்கொள்வார்கள். நான் உம்முடன் இருக்கிறேன். எனக்கு மட்டுமே கிழ்படியுங்கள்”.

Copyright @ 2013 Sahih Al Islam .