Skip to main content

ஆலிம்களே! அஹ்மதி மௌலவிகளே! உங்களிடம்தான் கூறுகின்றார்கள்!

ஹஸ்ரத் மிர்ஸா குலாம் அஹ்மது (அலை) அவர்கள் ஆலிம்களை நோக்கி கூறுகின்றார்கள்:

"நான் என்னை எதிர்க்கின்ற உலமாக்களிடமும் அவர்களைச் சார்ந்தவர்களிடமும் கூறுவேன், ஏசுவதும், தர குறைவாக பேசுவதும் நல்ல பண்பாடாகாது. அது வெட்கக்கேடானது. ஆயினும், இதுவே உங்களின் இயல்பானால் அது குறித்துக் கூறுவதற்கு ஒன்றுமில்லை.

நீங்கள் என்னை ஒரு பொய்யன் என்று கருதினால் பள்ளி வாயில்களில் கூடி கூட்டாகவோ, தனித்தனியாகவோ எனக்கெதிராக துஆ செய்யுங்கள்.

நான் ஒரு பொய்யன் என்றால் நிச்சயமாக உங்கள் துஆ ஏற்றுக் கொள்ளப்படும். நீங்கள் எனக்கெதிராக துஆ செய்து கொண்டுதான் இருப்பீர்கள். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள், உங்களுடைய நாவுகள் புண்ணாகும் வண்ணம் நீங்கள் வேண்டினாலும், உங்கள் மூக்கு தேய்ந்துவிடும் அளவுக்கு சஜ்தாவில் விழுந்து அழுது துஆ செய்தாலும்,

கண்ணீர் வழிந்து கண்கள் அழுகி போகும் நிலை ஏற்பட்டாலும்,

காக்கை வலிப்பு ஏற்படும் அளவுக்கு நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு துஆ செய்து வந்தாலும் நிச்சயமாக உங்களின் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

ஏனெனில், நான் இறைவன் புறமிருந்து வந்தவனாவேன்.

எனக்கெதிராக எவர் சாபமிடுவாரோ அது அவரிடமே திரும்பும். பாருங்கள்!

நூற்றுக்கணக்கான நல்லறிஞர்கள் உங்களிலிருந்து வந்து நமது ஜமாத்தில் இணைகின்றனர்.

வானத்தில் ஓர் ஓசை எழுப்பப்டுகிறது.

வானவர்கள் தூய இதயமுள்ளவர்களை என் பக்கம் கொண்டு வருகின்றனர்.

இந்த ஆன்மீக நடவடிக்கைகளை மனிதனால் தடை செய்ய இயலுமா?

உங்களால் முடியுமானால் செய்து பாருங்கள்.

நபிமார்களுடைய எதிரிகள் செய்த எல்லா முறைகளையும் தந்திரங்களையும் நீங்களும் செய்து பாருங்கள்.

எதையும் விட்டு வைக்காதீர்கள்...

பின்னர் உங்களால் என்ன செய்ய முடிந்தது என்பதை பாருங்கள்.

இறை அடையாளங்கள் மழையைப் போல் இறங்கிக் கொண்டிருக்கின்றன.

ஆனால் நற்பேரிழந்த மனிதன் தொலைவில் நின்று மறுப்பு தெரிவிக்கிறான்.

எவருடைய உள்ளத்தில் முத்திரையிடப் பட்டுள்ளதோ அவர்களுக்கு என்ன மருத்துவம் பார்க்க முடியும்? இறைவா நீ இந்த சமுதாயத்தின்மீது கருணை கட்டுவாயாக! ஆமீன்." (அர்பயீன்)

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...