Skip to main content

இறைத்தூதர்களுக்கெதிராக பிரிவினர்களின் போலியான ஒற்றுமை

இறைத்தூதர்களுக்கெதிராக பிரிவினர்களின் போலியான ஒற்றுமை:

ஒரு புதிய இறைத்தூதரின் வருகையானது, எதிரிகளிடையே போலியானதாெரு ஒற்றுமை நிலையை உருவாக்குகிறது. அவர்கள் சில காலத்திற்குத் தங்களிடையேயான சொந்த வேறுபாடுகளை மறந்து விட்டு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மார்க்க ஒழுங்கிற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகத் தம் சக்திகளை ஒன்றுதிரட்டுகின்றனர். வன்முறையுடன் கூடிய பகைமையை வெளிப்படுத்தியவாறு ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பை முன் வைக்கின்றனர். இறைத்தூதருக்காே எந்த விதமான மனித ஆதரவும் இருந்ததில்லை. பொதுமக்களின் ஆதரவும் அவருக்கு இருக்கவில்லை. சமூகத்தின் ஏதாவதொரு சக்திவாய்ந்த அமைப்பின் ஆதரவும் அவருக்கு இருக்கவில்லை. எந்தவொரு அரசியல் பதவியாலும் அவர் பாதுகாக்கப்படவில்லை. அவர் மறுக்கப்பட்டு, ஒதுக்கப்பட்டு, தனிமையில் விடப்பட்டார்.

மூடத்தனமான போக்குகளின் அதிவேக வளர்ச்சியினால் கலப்படத்திற்கு ஆளான சமூகங்களுக்கு எதிராக இத்தகைய மனிதர்களே எழுந்தனர். புதிய ஒழுங்கிற்கு வழிகாட்டியாக இருக்கும் இறைத்தூதர்கள், எப்போதுமே இறை ஏகத்துவத்தைப் போதித்தனர். மேலும் சிலைவணக்கத்தின் நேரடியான மற்றும் மறைமுகமான ஒவ்வொரு வடிவத்தையும் அடியோடு அகற்ற முயன்றனர். அவர்களது எதிரிகள் எந்த ஒற்றுமையைத் தங்களுக்கிடையே உருவாக்கினரோ அது நபிமார்களுக்கு எதிரான போலியான ஒற்றுமையாக மட்டுமே இருந்தது. அதே சமயம் தங்களுக்குள் அவர்கள் எப்போதும் போல ஆழமாகப் பிளவுபட்டவர்களாகவே இருந்தனர். ஏகத்துவத்தை நிலைநாட்டுபவர்கள் வெறும் இட்டுக்கட்டுபவர்களாக இருந்திருந்தால், பிறகு அவர்களது பணி சாத்தியமற்றதாகவே இருந்திருக்கும். தனக்கு அப்பாற்பட்ட தொலைவில் இருப்பதாகத் தெளிவாகத் தெரியும் இத்தகைய இலக்குகளை அடையும் முயற்சியில் இட்டுக்கட்டுபவர் எவரும் நிலைத்திருக்க முடியாது. இவர்களைப் போன்றவர்களது நம்பிக்கை, இறைவனின் உண்மைத்துவத்தின் அடிப்படையில் ஆழமாக நிலை பெற்றிருக்க வேண்டும். அவ்வாறில்லையாயின் அவர் அழிக்கப்பட்டு துடைத்தெறியப்படுவர். இறைவன் என்று ஒருவன் இல்லையென்றால் பிறகு அத்தகைய வாதம் புரிபவர்களை பைத்தியக்காரர்கள் என்று கூறி சமூகம் எளிதாக மறுத்திருக்கும். இதைத் தவிர மூன்றாவதொரு வழி ஏதும் இல்லை. அவர்கள் பைத்தியக்காரர்கள் இல்லையென்றால், ஒரு உண்மையற்ற பலனற்ற நோக்கத்திற்காக, தங்களிடமிருந்த அனைத்தையும் தியாகம் செய்யும் அளவிற்கு தங்களது நம்பிக்கையை உறுதிப்பாடுடன் அவர்கள் எவ்வாறு பற்றிப்பிடிக்க முடியும்? ஆனால் பைத்தியக்காரர்கள் என்று கூறி அவர்கள் ஒதுக்கப்பட முடியாது, ஏனெனில் பைத்தியக்காரர்கள் தங்களது உளறல்களில் இங்குமங்குமாகத் தாவிக்கொண்டே இருப்பர். நபிமார்களைப் பொருத்தவரை, சமூக மக்கள் தங்களது பாதங்களுக்குக் கீழே நிலம் வெடித்துவிட்டது போல ஒரு வன்மையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர். வன்முறையாளர்களாகிய எதிரகளின் ஒன்றுபட்ட கோபத்திற்கு எதிராக, ஏழை அல்லது செல்வந்தன், சக்திவாய்ந்தவர் அல்லது பலவீனர்களின் எந்த மனித ஆதரவும் அவர்களுக்கு ஒரு போதும் கிடைத்ததாகத் தெரியவில்லை. அவர்களது தூதுச்செய்தியின் உன்னதத் தன்மையும், அவர்களது நடத்தையின் கண்ணியமும், மிகக் கடினமான சூழ்நிலையிலும் கூட இறுதி வெற்றியின் மீது அவர்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை ஆகிய இவையே அவர்களது உண்மைக்குச் சாட்சி பகர்கின்றன.

(Revelation Rationality Knowledge and Truth)


Popular posts from this blog

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...

கலீஃபதுல்லாஹ் ஹஸ்ரத் முனீர் அஹ்மது அஸீம் (அய்) அவர்களது கனவு

(நாள்: 16-06-2022 தஹஜ்ஜுத் தொழுகைக்கு முன்பு) என்னிடம் ஒரு பெரிய வெள்ளை லாரி இருப்பதாக நான் கனவு கண்டேன். அது உலர்ந்த இலைகள் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் ஒரு மரத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது லாரியின் கேரியர் பகுதியில் இரண்டு நாய்களைப் பார்த்தேன். அதன் பிறகு உடனே அவற்றுக்குப் பதிலாக இரண்டு இளம் குதிரைகள் இருப்பதைக் கண்டேன். நான் சாலையை பார்த்தபோது வெறிச்சோடி இருப்பதைக் கண்டேன். பிறகு, வாகனங்கள், சொகுசு வாகனங்களும் கூட ஒதுக்கி வைக்கப்படும் ஒரு காலம் வரும் என்றும், அதனால் குதிரைகளும், பிற விலங்குகளும் போக்குவரத்து முறைகளாகவும், அதன் மதிப்பு/முக்கியத்துவம் அதிகரித்து விடும் என்றும் இது குறித்து நான் முன்பே கூறியிருந்தேன் என்று எனக்குள் கூறிக்கொண்டேன். Then, I saw myself in a place where a tall [imposing] and great [in personality] woman in white appeared before me. She was the wife of a great prophet of Allah and was born in Hindustan [India]. Her name was Saraswati but in the dream I addressed her as Hajra [both names] and realised that she was the wife of Hazrat Ibrahi...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.