Skip to main content

நேர்வழி பெறுபவர் யார்?

ஹஸ்ரத் முஹையூதீன் அல் கலீஃபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

அல்லாஹ்வின்‌ பிரதிநிதியாகிய நான் கூறியதை, அவர்‌ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால்‌ என்னையும்‌ என்மீது நேர்மையான முறையில்‌ நம்பிக்கை கொண்ட மக்களையும்‌ அல்லாஹ்‌ பாதுகாத்தான்‌. இன்று வரையில்‌ அந்த பாதுகாப்பு தொடர்கிறது. இன்ஷா அல்லாஹ்‌! வரும்‌ காலங்களிலும்‌ அவன்‌ தனது அருட்கொடைகளை நம்மீது பொழிவான்‌. இஸ்லாத்தில் என்றென்றும் மகத்துவம்‌ நிலைநிற்கும்‌. மேலும் நம்‌ வழியாக - ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாம்‌ வழியாக அதனை அவன்‌ நிலை நாட்டுவான். இன்ஷா அல்லாஹ்‌

ஹஸ்ரத்‌ மஸீஹ்‌ மவூத்‌ (அலை) அவர்கள்‌ தனது ஒரு கட்டுரையில் விவரித் திருப்பதை போன்று! அதாவது ஹஸ்ரத்‌ அஹ்மது (அலை) அவர்கள்‌ கூறுகின்றார்‌:-

“பலதரப்பட்ட மத நிறுவனர்களாகிய மதிப்புமிக்க நபர்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தும்‌ செயலானது, மிக இழிவானதும், தீயதும்‌ ஆகும்‌. இறைவன்‌ தனது எண்ணற்ற ஞானத்தால்‌, தனது பிரத்யோகமான விருப்பத்தால்‌ மக்களுக்கு நேர்வழியினை காட்டுவதற்கு இமாம்கள் மற்றும்‌ சீர்திருத்தவாதிகளை நியமிக்கின்றான்‌. அதன்‌ விளைவாக அந்த ஆன்மீக ஒளி பரிணமிக்கும், இன்னும் ‌அவர்களின்‌ ஆன்மாக்கள்‌ காரணமாக உலகம்‌ அருளுக்குரியதாக மாறிவிடுகிறது. அதுமட்டுமின்றி அவர்கள்‌ வாயிலாக இறைவனின்‌ ஏகத்துவமும்‌, இறைவணக்கமும்‌ உலகெங்கும்‌ ஒளிர்கிறது. அவர்களின்‌ ஆற்றல்‌ வாய்ந்த போதனைகள்‌ காரணமாக சிலைவணக்கம்‌, இறைவனுக்கு இணை வைத்தல்‌ போன்றவற்றின்‌ வேர்‌ அறுந்துவிடுகிறது. சிலைவணக்கம்‌, இறைவனுக்கு இணைவைத்தல்‌ போன்றவை எல்லாவகையான தீமைகளுக்கும் தாயாக இருக்கிறது. இந்த போதனைகள்‌ மூலமாக இவ்வாறான தீமைகள்‌ (அதாவது சிலை வணக்கம்‌) உலகின்‌ பல பகுதிகளிலிருந்தும் நீங்கி விடுகிறது. வரண்டு போன மரம்‌ புத்துயிரை பெறுவதைப்‌ போன்று அவர்கள்‌ ஏக இறை வழிப்பாட்டின்‌ நினைவை பூமிக்கு அழைத்துவருகின்றனர்‌. இடிந்து போன ஏக இறை வழிபாடு என்னும்‌ கட்டிடத்தை, அவர்கள்‌ மேலும்‌ திடமான அஸ்திவாரத்தால்‌ அமைக்கின்றனர்‌. அவன்‌ மிக்க மகிழ்ச்சியுடன்‌ அவர்களுக்கு பாதுகாப்பை அளிக்கின்றான்‌. மிக சிறந்த முறையில்‌ அவர்களுக்கு ஆதரவையும் வழங்குகின்றான்‌. இலட்சகணக்கான மக்கள்‌ அவர்களுக்கு எதிராக எழுந்துநின்றால்‌ கூட அவர்கள்‌ அஞ்சமாட்டார்கள்‌. அவர்களின்‌ அப்பணியில்‌ உறுதியுடன்‌ நிலைத்திருப்பார்கள்‌ . எல்லா விதமான அபாயங்களிலிருந்தும்‌ இறைவன்‌ அவர்களை பாதுகாப்பான்‌. பகைவர்களின்‌ திட்டங்களை அவன்‌ தோற்கடிப்பான்‌. இறுதியில்‌ அவர்கள்‌ உண்மையினை இப்பூமியில்‌ நிலை நாட்டுவார்கள்‌.. இத்தகைய இறைப்பிரதிநிதிகள்‌ மீது சாபவார்த்தையினை கூறுவது இறையச்சம் இல்லாதவர்களின் செயலாகும்‌.” (P.110: பராஹீனே அஹ்மதிய்யா Part I and II, UK: இஸ்லாம் International Publications Ltd 2012)

சிந்திக்கும்‌ மக்களுக்கு இவற்றில்‌ படிப்பினை உள்ளது எவர்‌ இதிலிருந்து பயன் பெறுவார்? உண்மையை தேடும் மற்றும்‌ நல்லறிவைப் பயன்படுத்துகின்றவர்கள்‌ இதிலிருந்து பலன்‌ பெறுவார்கள்‌. அவர்களுக்கு சிலவேளை உயர்ந்த கல்வித்தகுதி இல்லாமல்‌ இருக்கலாம்‌. எழுதுவதற்கும்‌ படிப்பதற்க்கும்‌ தெரியாதவர்களாக இருக்கலாம்‌ . ஆனால்‌ அவர்கள்‌, தங்களது மனதை சுத்தம்‌ செய்து வைத்திருப்பார்கள்‌. உண்மையினை ஏற்றுக்கொள்வதற்கும்‌ அங்கீகரித்துக்‌ கொள்வதற்குமான ஆற்றலை அல்லாஹ்‌ அவர்களுக்கு அளித்திருப்பான்‌. அல்லாஹ்வின்‌ அனுமதியின்றி, எவருக்கும்‌ நம்பிக்கை கொள்ள இயலாது. அல்லாஹ்‌ நாடுகின்றவர்களை அவன்‌ நோ்வழியில்‌ செலுத்துகின்றான்‌.

இன்ஷாஅல்லாஹ் ஆமீன்

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...