Sunday, July 3, 2022

30 ஜூன் 2021 புதன்கிழமை அன்று காலை 10.50 மணிக்கு ஹஸ்ரத் கலீஃபத்துல்லாஹ்(அய்) அவர்களால் பெறப்பட்ட இறைவெளிப்பாடுகள்.

 بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ 

நான், கலீஃபத்துல்லாஹ், ரசூலுல்லாஹ் என்ற முறையில், தொழில்நுட்ப பயன்பாட்டிற்கு எதிரானவன் அல்ல.

அது நமது சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்துகின்ற பிரச்சினைகளுக்கு எதிராகப் போராடுவது மிகவும் முக்கியமானது என்பதே எனது கருத்தாகும்.

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை செயல் படுத்துவதற்கு நான் எதிரானவன் அல்ல. அதற்கு மாறாக, இந்தக் காலத்தில் அவனது தேர்ந்தெடுக்கப்பட்ட அடியான் என்ற முறையில் உலகம் முழுவதும் அவனது ஏகத்துவத்தை பரப்பி மக்களை முழுமையான இருளிலிருந்தும் அகற்றி இறை ஒளியின் பக்கம் அழைப்பதற்காக

என்னை எழுப்பிய எனது படைப்பாளனிடத்தில் நான் மிகவும் திருப்திக் கொண்டவனாகவும், அங்கீகரித்தவனாகவும் நன்றி யுணர்வுக் கொண்டவனாகவும் இருக்கிறேன்.

இருளில் இருந்து வெளியே வர மக்களுக்கு உதவுவது என்பது எல்லா வகையிலும் அதாவது சிலை வழிப்பாட்டின் அனைத்து வடிவங்களான, போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல், பொறாமை, வெறுப்பு, தகராறு, ஊழல், ஏழை மக்களின் இரத்தத்தைக் கொண்டு தன்னை மேம்டுத்திக்‌ கொள்ளும் பொருட்டு அதிகாரத்தின் மீதான தாகம், ஆணவம், கருமித்தனம், கொடுங்கோன்மை, சூதாட்டம், குற்றங்கள், திருட்டுகள் இன்னும் பல, பட்டியல் மிக நீளமானது, (இவைகள் அனைத்தில்) இருந்தும் அகற்றுவதாகும்.

கம்பியில்லா தகவல் தொடர்பு(wire less) உட்பட தொழில் நுட்பங்களின் இராஜ்யம் வழங்குகின்ற கடைசி தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நான் ஆமோதிக்கிறேன்.

இது, இந்தக் கடைசி வகை உயர் தொழில்நுட்ப ஆய்வுக் கருவிகளைப் பயன்படுத்துகின்ற (அதே) வேளையில், நாம் நிரந்தரமான சங்கடங்களையும் எதிர்கொள்கிறோம்,​​ கம்பியில்லா உபகரணங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள், முகநூலை (ஃபேஸ்புக்) தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் உமிழப்படும் (வெளியாகும்) அலைக்கதிர்கள்(waves) குறித்து நமது சொந்த ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளையும் செய்த பின்னர், இவை அனைத்தும் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கானதும், நச்சுத் தன்மைக் கொண்டதும், கெடுதியை விளைவிக்கக் கூடியதும் ஆகும் என்று இறைவன் எனக்கு கற்பித்துள்ளான்.

(குறிப்பாக காதுகள், மூளை, நரம்பு மண்டலம் மற்றும் தாம்பத்தியத்தின் மூலம் சந்ததிகள் உருவாவதற்காகவும், அதாவது, கருத்தரிப்பதற்காகவும் இன்னும் நமதுப் பாதுகாப்பிற்காகவும் இறைவன் நமக்கு பரிசாக வழங்கியுள்ள நமது உயிரணுக்கள் உற்பத்தி ஆகியவற்றிற்கு தீங்கு விளைவிக்கும்). இறைவன் எனக்கு எதனைக் கற்பித்துள்ளானோ அதனை நான் முழுமையாக நம்புகிறேன்.

பகுதி 2:

கலீஃபத்துல்லாஹ்வே! தயக்கமின்றி எழுந்து நிற்பீராக! இந்த செய்தியை உலகம் முழுவதும் குறிப்பாக உமது ஸஹாபாக்களுக்கு வழங்குவீராக! இந்த இறைச் செய்தியை நிராகரிப்பவர்கள் உண்மையில் உம்மிடம் இருந்து அல்ல, (மாறாக) அல்லாஹ்விடம் இருந்து திரும்பிக் கொண்டவர்கள், உமது படைப்பாளனாகிய என்னிடம் (இருந்தே திரும்பிக் கொண்டவர்கள் ஆவர்)

கவலைப்படாதீர்! மிக விரைவில் நான் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வேன். அல்லாஹ் (ஸுப்ஹான) வின் கடுங்கோபத்தை ஈர்த்துக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வுக்கும் அவனது கலீஃபத்துல்லாஹ்-ரசூலுல்லாஹ்வுக்கு கீழ்ப்படியுங்கள். எனது நேசத்திற்குறிய கலீஃபத்துல்லாஹ்- ரசூலுல்லாஹ்வின் இதயத்திற்கும், உணர்வுகளுக்கும் ஒருபோதும் ஊறு விளைவிக்காதீர்கள்.

சோதனைகளின் நெருப்பு இங்கு இந்த உலகத்திலும், அதேப் போன்று மறுமையிலும் அவர்கள் மீது ஒளிரப்படும்.

உங்களது முழுமைப் பொருந்திய தந்தையாகிய, ஹஸ்ரத் முஹம்மது(ஸல்) அவர்களைப் போன்றே இந்த உன்னதமானக் கடமையைத் தொடர்ந்து உறுதியுடன் நிறைவேற்றுவீராக! உமது இதயத்தின் கண்ணீரைத் தொட்டு (உணர்ந்த) அனைவரோடும் அமைதியாகவும், பொறுமையுடனும் இருப்பீராக!. என் மீது நம்பிக்கை வைப்பீராக!, உமது படைப்பாளன் உண்மையையே கூறுகிறான். அவன் அல் ஹக் ஆவான். இது நான் ஆவேன்! அல்லாஹ், அவனே அவர்களின் கண்களில் இருந்து இரத்தம் வழிந்தால்,(அக்)கண்ணீரை உருவாக்குபவன்.

صبر کرو وقت آنے دو

"ஸப்ர் கரோ, வக்த் ஆனே தோ"

"பொறுமையுடன் இருப்பீராக!,(அதற்குரிய) நேரம் வரட்டும்"

(இறைவெளிப்பாடு காலை 11:25 மணிக்கு முடிவடைந்தது)

Copyright @ 2013 Sahih Al Islam .