Wednesday, June 29, 2022

ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய விரோதப்போக்கு(இஸ்லாமோஃபோபியா)

இந்தியாவிலும், மற்ற பல்வேறு நாடுகளிலும் மிகக் குறிப்பாகவும், இரக்கமின்றியும் பிரான்ஸ் நாட்டிலும் பள்ளிக்கூடங்களில் உள்ள சிறுமிகளும், பெண்களும் ஹிஜாபைக் கடைப்பிடிப்பது குறித்துக் கடுமையான விவாதம் நடைபெற்று வருகிறது. பெரும்பான்மை யானவர்கள், ஹிஜாப் (முக்காடு) அணிவது பொதுப் பள்ளிக் கூடங்களின் கொள்கைக்கு முரணானதாக, அதாவது அரசு நிதியுதவி-(பெறும்)பள்ளிகள் மதம் சம்பந்தமான விஷயத்தில் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று நினைப்பதாகத் தோன்றுகிறது.

கலீஃபத்துல்லாஹ் என்ற நிலையில், ஒரு முஸ்லீம் மாணவி தலையின் மேல் அணியும் "முக்காடு" போன்ற ஒரு சிறிய விஷயத்திற்காக ஏன் இவ்வளவு பரபரப்பு என்பது எனக்குப் புரியவில்லை.

முஸ்லீம்களும் [அந்தந்த நாடுகளின்] மாநில நிதிகளுக்கு விகிதாச்சார அளவில் வரிச் செலுத்தி உள்ளனர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்! என் கருத்துப்படி, பள்ளி வழக்கத்தை சீர்குலைக்கவோ அல்லது ஒழுக்கத்திற்கு அச்சுறுத்தலாகவோ இல்லாதவரை பள்ளிகள் மாணவர்களின் மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளை மதிக்க வேண்டும். இருப்பினும், நாம் பிரான்ஸை உதாரணமாகப் பார்த்தால், அதிகரித்து வரும் வேலையின்மையை அவர்கள் வெளிப்படையாக எதிர்கொண்டனர், இன்னும் அரபுத் தொழிலாளர்களின் குடியேற்றம் பற்றி அவர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்ந்தனர். மேலும் அவர்களின் நகரங்களிலும், பள்ளிகளிலும் ஹிஜாபின் காட்சியானது அவர்களின் பாதுகாப்பின்மை உணர்வை அதிகப்படுத்தியது.

அந்த பாதுகாப்பின்மையானது இஸ்லாத்தின் மீது ஒரு கடினமான அச்சமாக உருமாறியது, இதை நாம் இஸ்லாமிய விரோதப் போக்கு(இஸ்லாமோஃபோபியா) என்று அழைக்கிறோம் - (இது) உலக மக்கள் தொகையின் அங்கமாக இருக்கின்ற முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரின் இதயத்திலும் அச்சத்தையும் பாதுகாப்பின்மையையும் உருவாக்குவதற்கு இஸ்லாத்தின் எதிரிகளால் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடுக் கையாளப்படும் சூழ்ச்சி முறையாகும். இஸ்லாம் குறித்த இந்த அச்சம் மற்றும் பாதுகாப்பற்ற நிலை‌யானது, அதாவது இஸ்லாமோஃபோபியா என்பது அவர்களின் (அதாவது எதிரிகளின்) பணியை நிறைவேற்றுவதற்காக செயல்படுத்தப்பட்டுவருகின்றது. பல கன்னியாஸ்திரிகள் மற்றும் கிறிஸ்தவப் பெண்கள் தலையில் முக்காடு அணிந்துள்ளனர், என்ற உண்மையை இவர்கள் அலட்சியம் செய்கிறார்கள், இது ஒரு சிறிய கூற்று வேறொன்றும் இல்லை, ஆனாலும் அவர்கள் தலையில் முக்காடு அணிகிறார்கள், (அதற்காக) அவர்களிடம் எதுவும் பேசப்படுவதோ அல்லது அவர்கள் அச்சப்படுவதோ இல்லை என்ற நிலையில் இருக்கிறோம்.

புடவை அணிந்த ஒரு பெண், கண்ணியமாகவும், கலாச்சாரமாகவும் இருக்க முயற்சி செய்து தனதுச் சேலையைக் கொண்டு அவளதுத் தலையை மூடிக்கொண்டால், அவர்களைப் பற்றி எதுவும் கூறப்படுவதில்லை. ஆனால் முஸ்லீம் சிறுமிகள் மற்றும் பெண்கள் தங்கள் உடலை அந்நியர்களின் பார்வைகளிலிருந்தும் பாதுகாக்க முயற்சிக்கும் போது, சுதந்திரமற்றவர்கள், கைதிகள், அறிவற்றவர்கள் மற்றும் தாழ்வு மனப்பான்மை கொண்ட பாலினங்கள் என்று அவர்கள் முத்திரைக் குத்தப்படுகிறார்கள்.

பிரான்சிலும் அதேப் போன்று சிறிது சிறிதாக மற்ற நாடுகளிலும் (ஹிஜாப்) தடை செய்யப்பட்டதில் இருந்து. அரபு சமூகங்களில் மேற்கத்திய மதச்சார்பின்மை வேரூன்றுவதால் அது (ஹிஜாப்) மறைந்துவிடும் என்பது பல அரேபியர்கள் மற்றும் அரபி அல்லாதவர்கள் ஆகியோரின் எதிர்பார்ப்புகளாக இருந்தபோதிலும், அரபு நாடுகளில் உள்ள அதிகமதிகமான இளம் வயதினர் மற்றும் உள்ளூர் முஸ்லிம்களும் ஹிஜாப் அணிகிறார்கள்.

அதிகமதிகமான முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பின்பற்ற விரும்பும் இஸ்லாமிய நடைமுறைகளின் அத்தகைய ஒரு மறுமலர்ச்சியானது - முஸ்லிம்களால் தங்களின் பெருமை மற்றும் அடையாளத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாகவேப் பெரும்பாலும் கருதப்படுகிறது. இவை இரண்டும் குடியேற்றக் கோட்பாடு ஆதிக்கத்தால் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஜப்பானில், இதை பழமைவாதப் பாரம்பரியமாக அல்லது மேற்கத்திய எதிர்ப்பு உணர்வின் விளைவாகக் கண்டுகொண்டுப் புரிந்துக் கொள்ளப்பட்டது, மெய்ஜி சகாப்தத்தின் போது மேற்கத்திய கலாச்சாரத்துடனான முதல் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஜப்பானியர்கள் தாங்களே அனுபவித்த ஒன்றாகும்; அவர்களும் பாரம்பரியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மேற்கத்திய உடைக்கு எதிராக எதிர்வினையாற்றினர் (செயல்பட்டனர்). தங்கள் வழிகளில் பழமைவாதமாக இருக்க வேண்டும் என்றும் புதியது மற்றும் அறிமுகமில்லாத எதையும் அது நல்லதா அல்லது கெட்டதா என்று பார்க்க கூட நேரம் ஒதுக்காமல் அதற்கு எதிராக செயல்படும் மனப்பான்மை மக்களில் உள்ளது. நல்லதாக இருக்கும் மாற்றங்கள் இருப்பதைப் போன்றே தீயதாக இருக்கக் கூடிய மாற்றங்களும் உள்ளன.

மேற்கத்திய உணர்வுகளைப் பொறுத்தவரை, முஸ்லீம் பெண்கள் பாரம்பரியத்திற்கு அந்தளவுக்கு அடிமையாக இருக்கின்ற காரணத்தால் (தான்)அவர்கள் ஹிஜாப் அணிகிறார்கள் என்ற உணர்வுகள் முஸ்லிம் அல்லாதவர்களிடையே இன்னும் நீடிக்கின்றன, அதனால் அது அடக்குமுறையின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பெண்களின் விடுதலை மற்றும் சுதந்திரம் என்பது, அவர்கள் முதலில் ஹிஜாபை அகற்றாத வரை சாத்தியமற்றது என்றும் அவர்கள் நம்புகிறார்கள். இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கானக் காரணம் பற்றியும் அவர்களுக்கு எதுவும் தெரியாது. இஸ்லாத்தைப் பற்றிய அறிவு சிறிதளவு அல்லது கொஞ்சமும் இல்லாத முஸ்லிம் பெயர் தாங்கிகளால் இத்தகைய ஒரு ஞானமின்மை பகிரப்படுகிறது. அவர்கள் பெயரளவில் மட்டுமே முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.

மதச்சார்பின்மைக்கு மிகவும் பழக்கப்பட்டவர்களாய் இருந்துக் கொண்டு, மதம் குறித்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆலோசனைகளைப் பெறுவதற்கான நடைமுறையை (அங்கும் இங்குமாக) [குறிப்பாக முஸ்லிம் பெயர் தாங்கிகள் உட்பட தங்களின் அசல் போதனைகளை கைவிட்டுவிட்ட இஸ்லாத்தைத் தவிர மற்ற அனைத்து மதங்களில் இருந்தும்] எடுத்துக் கலந்து கொண்டவர்களால், இஸ்லாம் உலகளாவியதும், நிலையானதுமாகும் என்பதை அவர்களால் [நவீனகால முஸ்லீம்களில் பெயருக்கு மட்டும் முஸ்லிம்களாக இருப்பவர்களால்] புரிந்துக் கொள்ள முடியவில்லை. இவை தவிர, அரேபியர்கள் அல்லாத உலகெங்கிலும் உள்ள பெண்கள், இஸ்லாத்தைத் தழுவி 'பாரம்பரியம்' என்று தவறாக வழிநடத்தப்பட்ட உணர்வினால் அல்லாமல் மார்க்கத் தேவைக்காக ஹிஜாப் அணிகிறார்கள். பெண்களுக்கான ஹிஜாப் என்பது அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிவதன் அடையாளமும் இறைநம்பிக்கையின் வெளிப்பாடும் ஆகும்.

ஹிஜாப் மற்றவர்களுக்கும் அந்தந்த பெண்களுக்கும் தாங்கள் சொந்த உடல்களில் பாதுகாப்பாக இருப்பதைக் [நன்மையான மற்றும் பாதுகாப்பான உணர்தலை] காட்டுகிறது மேலும் அது [அதாவது. ஹிஜாப் மற்றும் முழுமையான இஸ்லாமிய ஃபர்தா என்பது] உலகத்தில் உள்ள அனைத்துத் துன்பங்களுக்கும் எதிராக ஒரு பெண் மற்றும் சிறுமி தங்களைத் தாங்களே இறை பாதுகாப்பின் கீழ் வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் என்பதற்கான ஒரு உறுதிமொழியாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இன்று நாம் என்ன பார்க்கிறோம்? தங்கள் அழகை வெளிப்படுத்துகின்ற வெட்கமில்லாத பெண்களைப் போல் அந்தப் பெண்களும் சிறுமிகளும் அவர்களின் ஹிஜாபைக் கழற்றி தங்கள் அழகை வெளிப்படுத்திக்காட்டிடக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்த ஹிஜாப் அணிவது முற்றிலும் தன்னார்வமானது என்ற உண்மையை முஸ்லிமல்லாதவர்கள் அங்கீகரிக்கவில்லை. மேலும் இது ஒரு பெண் இறைக் கட்டளைகளுக்கு அடிபணிதலுக்கான ஓர் அடையாளமாகும். ஏனெனில் முஸ்லீமாக இருப்பதன் பொருள் என்னவென்றால் நீங்கள் உங்களை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு முழுமையாக சமர்ப்பித்தல் என்பதாகும். ஒரு பெண்ணை ஹிஜாப் அணிய எவராலும் கட்டாயப்படுத்த முடியாது. ஒரு பெண் உண்மையான நம்பிக்கையாளராக இருந்தால் இந்த நடைமுறையை செயல்படுத்துவது என்பது பெண் அவளிடமிருந்து (தானாகவே) வர வேண்டும். அவள் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றவில்லை என்றால்,அவள் அல்லாஹ்வின் முன் அதற்காகப் பதிலளிக்க வேண்டும்.

ஒரு ஹதீஸின் கூற்றுப்படி: "எந்த ஒரு பெண் தனது உடையை தன்னுடைய சொந்த வீட்டில் அல்லாமல் வேறொரு வீட்டில் கழற்றுவாளோ, அல்லாஹ்வும் தன்னுடைய பாதுகாப்பின் திரையை அவளிடமிருந்து விலக்கிக் கொள்கிறான்." (அஹ்மத், அல்-ஹகீம், தபரானி, பைஹகி).

அல்லாஹ் பெண்களை ஒழுங்காக, கண்ணியமான முறையில் உடை அணியுமாறும் மேலும் அவளது அழகை [அதாவது,அவளுடைய உடல் அங்கங்களை] வெளிப்படுத்தக் கூடாது என்றும் கட்டளையிடுகிறான். இதனால், இஸ்லாமிய ஃபர்தாவின் பாதுகாப்பில், அவர்கள் தங்களது தீனை நடைமுறைபடுத்தவும் மேலும் கண்ணியமான முறையில் சமுதாயத்தில் வேலை செய்ய [இயல் வதற்கும்] [தங்களின் கணவர்கள் மற்றும் வீடு/குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்பதற்காக அவர்கள் எப்போதாவது வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால்] அவர்கள் சுதந்திரமாகவும் இருக்கிறார்கள். இவ்வாறு, இந்த கண்ணியமான உடை மற்றும் அவர்களது நன்னடத்தையின் மூலம் அவர்கள் இஸ்லாத்தின் அழகை வெளி ப்படுத்திக்காட்டுகிறார்கள்.

பொதுவாக ஹிஜாப் மற்றும் இஸ்லாமிய ஃபர்தா என்பது, அல்லாஹ்வின் இருப்பின் யதார்த்தத்திற்கு சாட்சியாகவும் அதனை அங்கீகரிக்கவும் மக்களுக்கு உதவுகிறது, மேலும் இந்த நடைமுறையை விதித்தவன் அல்லாஹ்வே. இதன் பின் விளைவுகளுக்கு அஞ்சாமல் அந்த இறை கட்டளைகளை பின்பற்றும் அனைத்து முஸ்லீம் பெண்களையும், சிறுமிகளையும் அல்லாஹ் அவனே பாதுகாப்பான். ஏனெனில் முதன்மையாக அல்லாஹ்வின் திருப்திக்காகவும் தங்கள் சுய மானத்தை [ஹயா] காப்பாற்றிக் கொள்ளவும் அவர்கள் இதனைச் செய்கிறார்கள்.

நமது நேசத்திற்குரிய ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒரு முறை தன் மகள் ஹஸ்ரத் பாத்திமா (ரலி) அவர்களிடம் "பெண்களுக்கு சிறந்தது எது?" என்று கேட்டார்கள். அதற்கு அன்னார் (ரலி) அவர்கள் "ஆண்களைப் பார்க்கக் கூடாது, (ஆண்கள்) அவர்களால் பார்க்கப்படவும் கூடாது" என்று பதிலளித்தார்கள். ஹஸ்ரத் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்தப் பதிலை கேட்டு மகிழ்ச்சி அடைந்து "நீ உண்மையிலேயே என் மகள் ஆவாய்" எனக் கூறினார்கள்.

ஒரு பெண் வீட்டிலேயே இருப்பதும், அந்நிய ஆண்களுடன் தொடர்புக் கொள்வதை முடிந்தவரைத் தவிர்ப்பதும் அவளுக்கு சிறந்தது என்பதை இது காட்டுகிறது. ஒரு முஸ்லீம் பெண் தன் கணவனின் தனிப்பட்ட உடைமை என்பதால் தன்னை மறைத்துக் கொள்கிறாள் என்று நினைப்பது சிந்தனையில் ஏற்பட்டத் தவறாகும். உண்மையில், அவள் தனதுக் கண்ணியத்தை பாதுகாத்திடவும் எந்த அந்நியர்களாலும் ஆக்கிரமிக்கப்படுவதையும் மறுக்கிறாள் என்பதாகும்.

அது முஸ்லீமல்லாத பெண்கள் (மற்றும் இஸ்லாத்தின் போதனைகளை விட்டும் வெளியேறிய விடுதலைப் பெற்ற (வர்களாய் கருதிக் கொள்ளும்) முஸ்லிம் பெண்கள்) தங்களின் தனிப்பட்ட அழகுகளை அனைவரும் பார்க்கும் வகையில் வெளிப்படுத்தியதற்காக (உண்மையில்) பரிதாபப்பட வேண்டும்.

வெளியில் இருந்து ஹிஜாபைக் கவனிக்கும் போது, ​​அது மறைத்து வைத்திருப்பதைப் பார்ப்பது சாத்தியமற்றதாகும். வெளியே இருந்துக் கொண்டு உள்ளேப் பார்ப்பதற்கும், உள்ளே இருந்துக் கொண்டு வெளியேப் பார்ப்பதற்கும் இடையேயான இடைவெளியானது, இஸ்லாம் பற்றிய புரிதலில் உள்ள வெற்றிடத்தை ஓரளவு விளக்குகிறது. ஒரு வெளிநபர்/ அந்நியர் இஸ்லாம் முஸ்லிம் சிறுமிகளையும், பெண்களையும் கட்டுப்படுத்துவதாக ஒரு வெளிநபர்/ அந்நியர் கருதலாம். இருப்பினும், அதை [அதாவது. ஹிஜாபை] அனுபவிப்பவர்கள் அது அவள் இஸ்லாத்தில் பிறந்த ஒரு முஸ்லீம் சிறுமியாகவோ அல்லது அல்லாஹ்வால் வழிநடத்தப்பட்ட பிறகு அதாவது அல்லாஹ் அவர்களின் இதயங்களைத் திறந்த பிறகு இஸ்லாத்திற்குத் திரும்பும் பெண்களாக இருந்தாலும் சரி அவர்களுக்குள்ளே அமைதி, சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவை உள்ளன. எனவே அவர்கள், தாமே இஸ்லாத்தை உண்மையாகவும் முழுமையாகவும் தேர்ந்தெடுத்து, மேற்கத்திய நாடுகள் பெண்களுக்காகவும் அவர்கள் சமூகத்தில் எவ்வாறு இருக்க வேண்டும் [அவர்கள் தங்களை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்]

என்பதற்காகவும் கண்டுபிடித்த 'பெயர் தாங்கிய சுதந்திரத்திற்கு' அடிபணிய அவர்கள் மறுக்கிறார்கள். மேற்கத்தியம் முன்வைத்துள்ள சுதந்திரத்தின் உருவமானது வெறும் ஒரு மாயையாகும். உண்மையான சுதந்திரம், விடுதலை என்பது ஆன்மீகத்தில், இறைக் கட்டளைகளை பின்பற்றி அந்நியர்களின் உலகில் கண்ணியமான விதத்தில் உங்களைத் தற்காத்துக்கொள்வதில் தான் காணப்படுகிறது.

ஹிஜாப் உண்மையிலேயே பெண்களுக்கு எதிரான அடக்குமுறையின் அடையாளமாக இருந்திருந்தால், ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் உலகின் பிறப் பகுதிகளில் உள்ள அதிகமானப் படித்த பெண்பிள்ளைகளும், பெண்களும் இந்த பெயர் தாங்கிய "சுதந்திரம்" மற்றும் "விடுதலை" என்று அழைக்கப்படுவதைக் கைவிட்டு விட்டு ஏன் இஸ்லாத்தைத் தழுவுகின்றார்கள்?

பல முஸ்லிமல்லாதவர்கள் மற்றும் சில முஸ்லிம்களுக்கு மத்தியில், ஹிஜாப் அல்லது இஸ்லாமிய முக்காடு, பெண்களை அடிமைத்தனத்தில் வைத்திருக்க வடிவமைக்கப்பட்டுள்ளது என்ற ஒரு தவறான கருத்து உள்ளது. "தனிமை" மற்றும் "பிரித்தல்" என்பது முக்காடின் சூழலில் பயன்படுத்தப்படும் சிலச் சொற்கள் ஆகும், அவை முஸ்லீம் பெண்களை ஆண் அந்நியர்களின் பார்வையில் இருந்து திரையிட்டு பாதுப்பதற்காக பயன்படுத்தப் படுகின்றது.

இஸ்லாம் பெண்களை ஆண்களின் அடிமைத்தனத்திற்குள் வைத்து பராமரிக்கவில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். மாறாக, இஸ்லாமிய ஃபர்தா அவளை விடுவித்தது. சில சமூகங்களில் முன்பு பெண்களுக்கு மறுக்கப்பட்ட வாரிசுரிமைத் தொடர்பான இஸ்லாமியச் சட்டங்கள் தொடர்பாக அவர் ஓர் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார், எனவே இஸ்லாமிய நெறிமுறைகளின்படி, ஒரு பெண்ணுக்கு செல்வம் / சொத்துக்கள் மற்றும் சமூகத்தின் கட்டமைத்தல் மற்றும் பரிணாம வளர்ச்சியில் தனது கருத்துக்களையும் யோசனைகளையும் வழங்கவும் முழு உரிமை உள்ளது. மேலும் அவள் சமூகத்திலிருந்தும் பாதுகாக்கப்படுவதற்காக அல்லாஹ் அவளை அடக்கத்தின் மூலம் பேணி நடக்குமாறு அறிவுறுத்தியுள்ளான்.

இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்பட்ட சமூகத்தின், மற்றும் அவளைக் கடைப்பிடிக்க, சமூகத்திலிருந்து அவளைப் பாதுகாக்க அல்லாஹ் அவளுக்கு அறிவுறுத்திய அடக்கத்தின் மூலம். இவ்வாறு அல்லாஹ் அவளை இஸ்லாத்தில் ஆயத்தப்படுத்தியுள்ளான், அதனால் அவள் தனது தீனைப் பாதுகாப்பாக கடைப்பிடிக்க சுதந்திரமாக இருக்கிறாள், மேலும் இஸ்லாம் அவளது அனைத்து முஸ்லிம் உரிமைகளையும் பாதுகாக்கிறது. ஆக, இஸ்லாத்தின் பாதையிலும், பெண்ணின் உரிமைகளிலும், இஸ்லாம் பெண்ணுக்கு வகுத்துள்ள கண்ணியத்தின் வரம்புகளை மதிக்கும் வரை, ஹிஜாப் ஒரு பெண்ணுக்குத் தடையாக இருக்காது. முக்காடு (ஹிஜாப்) அடக்கத்துடன் ஒத்துப்போகிறது, முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது: "அடக்கமும் நம்பிக்கையும் ஒன்றோடு ஒன்றாக பிணைக்கப்பட்டுள்ளன, (இவற்றில்) ஒன்று உயர்த்தப்பட்டால், மற்றொன்றும் உயர்த்தப்படும்." (அல்-ஹகீம்)

முக்காடு (ஹிஜாப்) மற்றும் - ஒரு பொதுவான விதியாக - இஸ்லாமிய ஃபர்தா அல்லாஹ்வுக்கும் அவனது நபிக்கும் கீழ்ப்படிவதைப் பிரதிபலிக்கிறது.

திருக்குர்ஆன் கூறுகிறது:

وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا

"அல்லாஹ்வும் அவனது தூதரும்(ஏதாவது) ஒன்றில் தீர்ப்பு வழங்கி விட்டால், (அதன் பின்னர்) நம்பிக்கைக் கொண்ட எந்த ஆணுக்கும், நம்பிக்கைக் கொண்ட எந்தப் பெண்ணுக்கும், தங்கள் பிரச்சினைக்குத் தங்கள் விருப்பத்திற்கேற்பத் தீர்ப்பளிப்பதற்கு உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் கட்டுபடாதவர், நிச்சயமாக மிகத் தெளிவான வழிகேட்டில் சென்று விடுகின்றார். (அல் அஹ்ஸாப் 33: 37.

ஆன்மீகத்தில் தங்கள் சுதந்திரத்தை/ விடுதலையைத் தேடுகின்ற அனைத்துப் பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் அல்லாஹ் உதவிப் புரிவானாக! மேலும் அவனது கட்டளைகளை (எழுத்துக்கு எழுத்து) அதன் சொற்பொருளின் படி பின்பற்றவும் இவ்வுலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நல்லொழுக்கத்தின் முன்மாதிரியாக ஆவதற்கும் அல்லாஹ் உதவி செய்வானாக. அல்லாஹ் இந்த உலகத்தில் சமாதானத்தை நிலைநாட்டுவானாக. இதைச் செயல்படுத்த, முதலில் நமக்குள் அமைதி இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதுமாகும், இந்த அமைதியானது நம் வீடுகளிலும், குடும்பங்களிலும் சுற்றுப்புறங்களிலும், நாம் வாழுகின்ற சமூகத்திலும் உலகத்திலும் பரவுகிறது. உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு, அல்லாஹ் உதவி செய்வானாக!, அல்லாஹ்வால் அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமைகள் பறிக்கப்பட்டு இஸ்லாத்தை அழிப்பதற்கு, வன்முறையின் மூலம் கட்டுப்படுத்தி உலகில் இஸ்லாமிய விரோதப் போக்கை (இஸ்லாமோஃபோபியாவை) வலுப்படுத்த கொடுங்கோலர்கள் முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் முடிந்த அளவு அவர்கள் முயற்சி செய்யட்டும். ஆனால் இன்ஷா அல்லாஹ், ஆன்மீகப் புரட்சியின் அலை வெடித்துக்கிளம்பும் (கிளர்ந்தெழும்). அங்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இஸ்லாத்தின் உண்மைத் தன்மையை அங்கீகரித்து (ஒப்புக்கொண்டு) இஸ்லாத்தை அவர்களின் அன்றாட வழக்கமாக [அவர்களின் வாழ்க்கை/வாழும் முறையாக] நடைமுறைப்படுத் வார்களாக! இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் இஸ்லாத்தை வலுப்படுத்தி முஸ்லிம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் உதவுவானாக! அதனால் ஒன்றாக நாம் வெற்றி பெறலாம், அது வன்முறையைத் தொடர்ந்து அமைதியின் வெற்றியாகவும், வெறுப்பை தொடர்ந்து அன்பின் வெற்றியாகவும் ஆகட்டுமாக!. இன்ஷா அல்லாஹ், ஆமீன்

Copyright @ 2013 Sahih Al Islam .