Skip to main content

வைரமே வைரத்தை வெட்டும்

ஹிஜ்ரி 1443 முஹர்ரம் மாதம் பிறை 4, 2021 ஆகஸ்ட் 12 வியாழக்கிழமை மாலை 6.05 மணியளவில் இறை புறத்திலிருந்து பெற்று இறைச் செய்தியை வழங்கிய படி...

ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹ்மத் அஜீம் (அலை) அவர்கள் அறிவிக்கிறார்கள்..

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானுர் ரஹீம்

அளவற்ற அருளாளனும் மென்மேலும் கருணை காட்டுபவனும் ஆகிய அல்லாஹ்வின் பெயரால்...

இவ்வுலகின் அனைத்து தேசங்களிலிருந்து, பூமியில் வாழும் எனது அன்பான மனித இனமே, கேளுங்கள்! முதலில், ஏகனாகிய, ஒரே ஒருவன் நமது உண்மையான படைப்பாளன் மற்றும் பிரபஞ்சத்தின் அனைத்து தற்காலிக மற்றும் போலி தெய்வங்களுக்கும் இறைவனாகிய அந்த ஒரே ஒருவனுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவனே (வல்ல இறைவன்), நம்மையும், தாங்கள் பல சோதனைகளை கடந்து சென்றாலும், மக்கள் அவர்களை ஏளனம் செய்தாலும் அவர்கள் மீது பழிகளை சுமத்தினாலும் அவனது கலீபத்துல்லாஹ்வை நேசித்து, அவனது கலீபத்துல்லாஹ்வுக்கு கீழ்படிந்து, அவனது கலீபத்துல்லாஹ்‌வுடன் நெருக்கமாக பணிகளை மேற்கெள்கின்றவர்களையும் (இறைவன்) நேசிக்கிறான். நான் உங்களிடம் அல்லாஹ் (தபாரக)வின் பெயரில் சத்தியம் செய்து கூறிக் கொள்கிறேன்: அல்லாஹ் என்னுடன் பேசுகிறான் என்றும், மேலும் அவனுடைய காரியத்திற்காக உழைப்பவர்களை நேசிக்குமாறும் எனக்கு வெளிப்படுத்தினான் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உண்மையில், கலீபத்துல்லாஹ் உங்களை நேசிக்கிறார், உங்களது பணிகளில் மகிழ்ச்சியடைகிறார், அல்லாஹ் (தபாரக)வும் அவனது வானவர்களும் கூட உங்களது பணிகளில் மகிழ்ச்சி அடைகிறார்கள். அவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட

ஒருவரை, இக்காலத்தின் அவனது கலீபத்துல்லாஹ்வையும் நேசிப்பவர்களாகிய உங்களையும் கூட அல்லாஹ்(தபாரக) நேசிக்கிறான். ஆயினும், உங்கள் மீதான அந்த இறை நேசத்தை நிலைநாட்டுங்கள், நீங்கள் ஒருபோதும் அவனை அதாவது அல்லாஹ்-சர்வ வல்லமையுள்ள இறைவனை மறந்து விடாதீர்கள்! அவனது கலீபத்துல்லாஹ் உடன் இணைந்து பணியாற்ற அல்லாஹ்(தபாரக) உங்களுக்காகத் தேர்ந்தெடுத்த தீன் மற்றும் மார்க்கப் பணிகளை ஒருபோதும் மறுத்து விடாதீர்கள் என்று அல்லாஹ் நேசிக்கின்ற உங்கள் அனைவரிடத்திலும் நான் அறிவுறுத்துகிறேன். இந்த இறை அருளை இழந்து விடாதீர்கள்! இது அதாவது இந்த அருள் மீண்டும் உங்களிடத்தில் வராது. குறிப்பாக இக்காலத்தில் பல சோதனைகள் வரும், ஆனால் உங்கள் நம்பிக்கையை, ஈமானை திடமாக்கிக் கொள்ளுங்கள்! உங்களுக்கு மத்தியில் அல்லாஹ் (தபாரக)வின் தூதர் இருந்து கொண்டிருப்பதனால் நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் ஆவீர்கள்.

கீழ்ப்படியாத கவனக்குறைவான மக்களாக மாறி விடாதீர்கள்!, ஆனால் காலத்தின் இந்த இறை அருளைக் கொண்டு அல்லாஹ் (தபாரக) உங்களையும், நம் அனைவரையும் பாதுகாக்கவும், இறுதி நாளுக்கு அதாவது மறுமை நாளுக்கு முன் வாக்குறுதி அளித்தபடி இந்த உலகத்தில் சுவர்க்கத்தின் ராஜ்யத்தை மற்றும் ஆட்சியை நமக்கு காட்டவும் அல்லாஹ்(தபாரக) முடிவு செய்துள்ளான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!.

எனவே, நமது இரட்சகனான, ஒரே ஒரு படைப்பாளனாகிய அந்த இறைவன், அவனது மாபெரும் பணிக்காக அவனது கலீபத்துல்லாஹ் முஹையுத்தீன், மஸீஹ், மஹ்தி மற்றும் ரசூலாக என்னை இக்காலத்தில் தேர்ந்தெடுத்துள்ளான். எனது 7வயதிலிருந்து எனக்கும் அவனுக்கும் அதாவது இறைவனுக்கும் இடையேயான எனது ஆன்மீக நேசத்தின் உறவை வெளிப்படுத்த நான் ஒருபோதும் விரும்பவில்லை. நான் உங்களைப் போன்றவன், உங்கள் அனைவரையும் போன்ற ஒரு மனிதனாவேன். எனது குழந்தை பருவத்திலிருந்தே, இப்போது வரை நான் பல வகையான சோதனைகளை கடந்து சென்று கொண்டிருக்கிறேன். ஆயினும் சோதனைகள் எதுவாக இருந்தாலும், எவ்வளவு பெரிய பிரச்சனைகளாக இருந்தாலும் சரியே, நான் ஒருபோதும் சோர்வடையவோ அல்லது எனது படைப்பாளன் மீதான எனது நம்பிக்கையை இழக்கவோ இல்லை.

இறைவன் நம் அனைவரையும் நேசிக்கிறான், ஆனால் எனது இறைவன் எனது நேசத்திற்குரிய இறைவன் இக்காலத்தில் என்னை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளான் என்று எனது இறைவனாகிய அல்லாஹ்வின் பெயரில் நான் சத்தியம் செய்கிறேன், மேலும், சோதனைகள், பிரச்சனைகள் பூகம்பங்கள் போன்றவற்றைக் கொண்ட கடைசி காலமாகும் இது என்பதை நான் உங்களிடம் கூறிக்கொள்கிறேன். மேலும் நான் இக்காலத்தின் பிர்அவ்ன்கள் பலருடனும் போராட வேண்டும். பலமுறை ஆன்மீக வெளிப்பாட்டின் ஆரம்பத்திலிருந்தே இறைவன் எனக்கு இதனை

"வைரமே வைரத்தை வெட்டும்"

என்று வெளிப்படுத்தியிருந்தான். முதலில் எனக்கு அது புரியவில்லை. ஆனால் இப்போது, அது வார்த்தைக்கு வார்த்தை நடந்து கெண்டிருப்பதை நான் புரிந்து கொண்டேன். மேலும் அல்லாஹ்வின் வழியில் எனது முழு வாழ்வையும் விட்டுவிட வேண்டியது ஏற்பட்டாலும்.., எனது இரத்தத்தை சிந்த வேண்டியது ஏற்பட்டாலும்... அல்ஹம்துலில்லாஹ்...!!!

ஆதாரம் : 13.8.21 ஜும்மா குத்பா

தலைப்பு : சைத்தானின் திட்டமும் அவனது படையும்

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...