Skip to main content

தப்லீக் மற்றும் தர்பியத் கூட்டம் - 2023

பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மானிர் ரஹீம்

தப்லீக் மற்றும் தர்பியத் கூட்டம் 2023

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..

வல்ல இறைவனின் மாபெரும் கிருபையால், ஜமாத்துல் ஸஹீஹ் அல் இஸ்லாம், தமிழ் நாடு சார்பாக, மாநில அளவிலான தப்லீக் மற்றும் தர்பியத் கூட்டம் 01.10.2023 ஞாயிற்று கிழமை அன்று கோயம்புத்தூரில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்..

முதல் அமர்வு

காலை சரியாக 9.40 மணியளவில், வல்ல இறைவனின் துணையுடன் 

1. மாநில அமீர் முகரம் ஜனாப். சலீம் சாஹிப் அவர்கள் தலைமையில் 

2. கோவை அமீர் ஜனாப். அப்துல் ரஹ்மான் சாஹிப் மற்றும் 

3. மாநில தர்பியத் செயலாளர் ஜனாப். நூர்தீன் சாஹிப் ஆகியோருடைய துணை தலைமையில்

ஜனாப். அலாவுதீன் சாஹிப் கோவை திருக்குரான் திலாவத் ஒதினார்கள்

ஜனாப். ஷா நவாஸ் சாஹிப் மேலப்பாளையம் அஹத் (உறுது மொழி) வாசித்தார்கள்

ஜனாப். சபீர் சாஹிப் மேலப்பாளையம் நஜம் வழங்க துவா உடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது

மாநில அமீர் முகரம் ஜனாப். சலீம் சாஹிப் அவர்கள் தலைமை

ஜனாப். அலாவுதீன் சாஹிப் கோவை திருக்குரான் திலாவத் 

ஜனாப். ஷா நவாஸ் சாஹிப் மேலப்பாளையம் அஹத் (உறுதி மொழி)

வரவேற்புரை : ஜனாப். நூர்தீன் சாஹிப் மேலப்பாளையம். மாநில தர்பியத் செயலாளர்

உரை 1 :

ஜனாப். முக்தாருதீன் சாஹிப் மாநில நாயிப் அமீர் சாஹிப் அவர்கள் "காலத்தின் இமாமின் தேவை" என்ற தலைப்பில் ஒவ்வொரு நூற்றாண்டிலும் இமாமின் தேவை என்பதை திருக்குரான் வசனங்களில் இருந்தும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹதீஸ் தொகுப்பு, ஹஸ்ரத் மசிஹ் (அலை) அவர்கள் கூற்றுகளில் இருந்தும் அழகிய முறையில் விளக்கினார்கள்.

ஜனாப். முக்தாருதீன் சாஹிப் மாநில நாயிப் அமீர் சாஹிப் அவர்கள் "காலத்தின் இமாமின் தேவை"

தேநீர் இடைவெளிக்கு பின் 

உரை 2 : ஜனாப். சலீம் சாஹிப் அவர்கள் மாநில அமீர்.

"திருக்குரானில் இருந்து சீர்திருத்தவாதி"

என்ற தலைப்பில் ஒரு புதிய முயற்சியாக ஒலி, ஒளி அமைப்புடன் கூடிய புதிய தொழில் நுட்பத்தில் ஒரு அறிக்கையை (Presentation) வழங்கினார். இஸ்லாம் மார்க்கத்தின் தோற்றம் மற்றும் ஹஸ்ரத் இப்ராஹிம் (அலை) அவர்களின் ஆன்மிக சந்ததிகளில் நபிமார்கள், முஜதித்மார்கள் மற்றும் மார்க்க சீர்திருத்தவாதிகளின் வருகை எவ்வாறு தொடர்கிறது என்பதை திருக்குரான் வசனங்கள் மற்றும் ஹதீஸ் தொகுப்புகள் மற்றும் ஹஸ்ரத் மசிஹ் (அலை) அவர்களின் கூற்றுகளிலிருந்து எடுத்து காட்டி, இந்த நூற்றாண்டில் இறைவனின் மாபெரும் அருளாக தோன்றி உள்ள காலத்தின் இமாம், முஜத்தித் ஹஸ்ரத் கலீபத்துல்லாஹ் முனீர் அஹமது அஜிம் (அலை) அவர்களின் வருகை எவ்வாறு பொருந்துகிறது என்பதை மற்ற பிற புரிவு ஜாமத்தில் இருந்து வந்திருந்த சகோதரர்களுக்கும் புரியும் படி அழகிய முறையில் விளக்கி கூறினார்கள். 

"திருக்குரானில் இருந்து சீர்திருத்தவாதி" என்ற தலைப்பில் ஜனாப். சலீம் சாஹிப் அவர்கள் மாநில அமீர் அவர்கள்

தப்லீக் பிரிவு மற்றும் அனைத்து சகோதரர்களுக்கும் இது அதிக பயனுள்ளதாக இருந்தது.. இது போன்ற அறிக்கைகள் இன்னும் அதிக அளவு நடைபெற வேண்டும். இன்ஷாஅல்லாஹ்...

மதியம் 12.45 மணிக்கு பாங்கு கூறி லுஹர் மற்றும் அஸர் தொழுகை ஜம்மு செய்து தொழபட்டது.

மதியம் 1.15 க்கு மணிக்கு ஆன்மீக உணவுக்கு மத்தியில் பௌதீக உணவும் சிறப்பாக வழங்கபட்டது.

Popular posts from this blog

இக்காலமும் இறை தண்டனையும்

மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020) இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா? அல்லது இக்கால  பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா? இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?  அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:- 63. سُ...

(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்

  24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி உலகெங்கிலும் உள்ள தனது அனைத்து ஸஹாபாக்கள் மற்றும்‌ அனைத்து முஸ்லீம்களுக்கும் இஸ்லாத்தின் அமைதிக்கான வாழ்த்தாகிய ஸலாத்தினைத் தெரிவித்த பிறகு, கலீபத்துல்லாஹ்(அய்) அவர்கள் தஷஹ்ஹுத், தவூஸ் மற்றும் சூரா அல்-ஃபாத்திஹா ஆகியவற்றை ஓதிய பிறகு, அரபு நாடுகளின் துயரமும், அநீர்திக்கு எதிரான கிளர்ச்சியும் என்ற தலைப்பில் தனது குத்பாவை வழங்கினார்கள்.

இறை வெளிப்பாடுகளும், அல்லாஹ்வினால் அனுப்பப்படும் தூதர்களின் வருகையும்

وَ مَا كَانَ لِبَشَرٍ اَنْ یُّكَلِّمَهُ اللّٰهُ اِلَّا وَحْیًا اَوْ مِنْ وَّرَآئِ حِجَابٍ اَوْ یُرْسِلَ رَسُوْلًا فَیُوْحِیَ بِاِذْنِهٖ مَا یَشَآءُؕ-اِنَّهٗ عَلِیٌّ حَكِیْمٌ வ மா கான லிபஷரின் அய் யுகல்லமஹுல்லாஹு இல்லா வஹ்யன்‌ அவ் மின் - வரா - இ ஹிஜாபின் அவ் யுர்ஸில ரஸூலன்‌ ஃப(f)யூஹிய பி - இத்னிஹி மா யஷாஉ இன்னஹூ 'அலீயுன் ஹகீம். வஹி மூலம் அல்லது திரைக்குப் பின்னாலிருந்து அல்லது தன் கட்டளையினால் தான் விரும்புவதை எடுத்துரைப்பதற்கு (வானவர்களுள்) ஒரு தூதரை, தான் அனுப்புவதன் மூலமேயன்றி அல்லாஹ் எந்த மனிதருடனும் பேசுவதில்லை. நிச்சயமாக அவன் உயர்ந்தவனும், நுட்பமான ஞானமுள்ளவனுமாவான். (அஷ்ஷுரா 42: 52) மேற்கூறிய திருக்குரான் வசனத்தை ஓதி காட்டியவர்களாக. ஹஸ்ரத் முனீர் அஹமத் அஸீம் (அலை ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:- "அல்லாஹ்வின் தூதர் என்பவர் எப்படிப்பட்ட இறை வெளிப்பாடுகளை பெறக்கூடியவர் என்றால், அவர் தன்னை முற்றிலும் இழந்தவராய் இருந்து கொண்டு, அதற்குப் பகரமாக அல்லாஹ்வின் விருப்பத்தால் நிரப்பப்படுகின்றார். அவர் தன்னை அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அர்ப்பணித்தவராய் இறை இயல்புகளைக் கொண்டு தனது செயல...