24 மே 2024~ 15 துல் கஃதா 1445ஹி
Friday, August 23, 2024
(இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்
இஸ்லாம் அல்லாத நடத்தைகளைப் பின்பற்றிச் செல்லும்) அரபுகளின் குளிர்காலமும், அநீதிக்கு எதிரான கிளர்ச்சியும்
Friday, August 9, 2024
மேற்கத்தியமயமாகும் (இஸ்லாமிய) உம்மத்
Monday, August 5, 2024
அல்லாஹ்வும் அவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவரும்
Tuesday, July 23, 2024
அல்லாஹ்வின் கயிறு (பாகம் 2)
Thursday, November 23, 2023
அல்லாஹ்வின் கயிறு (பாகம்-1)
"இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள். நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள். இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள். அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் - நீங்கள் நேர் வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தனது (இறை) வெளிப்பாடுகளை உங்களுக்கு தெளிவாக்குகிறான். (ஆல இம்ரான் 3:104)
மேலே கண்ட திருக்குறான் வசனத்தை ஓதிக்காட்டியவர்களாக, ஹஸ்ரத் கலிஃபத்துல்லாஹ் முனீர் அஹமது அஜீம் (அலை) அவர்கள் இவ்வாறு விளக்கம் அளிக்கிறார்கள்.
"அல்லாஹ் திருக்குரானில் கூறுகிறான், ஒன்றுபட்ட ஓர் உடல் போன்று ஒன்றிணைந்து அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றி பிடித்துக்கொள்ளுங்கள். ஒவ்வொருவராக அல்ல! மாறாக, அதனை கூட்டாக ஒன்றிணைந்து பற்றிப் பிடித்துக்
உங்கள் அனைவருக்காகவும், திருக்குர்ஆனை நேரடியாக நடைமுறைப் படுத்துவதற்காகவும், இந்த விஷயத்தை ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களது மேற்கோளுடன் விளக்குகிறேன். அதற்கு ஒருவர் நேரடியாக குர்ஆனைப் பற்றிய ஞானத்தைப் பெற்றால் மட்டுமே அது சாத்தியமாகும். திருகுர்ஆனும், நபி (ஸல்) அவர்களும் நமக்குக் கட்டளையிட்டுள்ள அனைத்தையும் மேற்கொள்வதற்கும், அவர்கள் தடை செய்தவற்றிலிருந்து விலகியிருப்பதற்கும், திருகுர்ஆனைப் பற்றிய ஆழமான ஞானம் அவசியமாகும். அந்த போதனைகளை அல்லாஹ் விரும்புகின்ற வழியில் நடைமுறைப்படுத்துவதற்கு, இந்த ஆழமான ஞானத்தை நாம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த ஆழமான ஞானம் உங்களிடம் இல்லையென்றால், நீங்கள் கடைபிடிப்பதற்கு அவசியமற்ற விஷயங்களையும், இன்னும் கடைபிடிக்கின்ற அவ்வாறான விஷயங்களை எவ்வாறு நிறுத்துவது, அதற்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் அவற்றை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதையெல்லாம் உங்களால் புரிந்து கொள்ள முடியாது;
அது தவிர, குர்ஆனில் ஓர் ஆன்மா உள்ளது அதாவது (குர்ஆனின் ஆன்மா). பலர் இந்த ஆன்மாவை நேரடியாகப் பெறுவதில்லை. இந்த ஆன்மாவானது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் ஆன்மாவுடன் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆகவே, உண்மையில், இது இரண்டு பெயர்களால் அறியப்படக் கூடிய ஒன்றும், ஒரே பொருளை, அதாவது திருக்குர்ஆனையும், மற்றும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் குறிக்கக்கூடியதுமாகும்.
நீங்கள் அன்னாரை திருக்குர்ஆன் என்று அழைத்தாலும் சரி, முஹம்மது நபி (ஸல்) என்று அழைத்தாலும் சரியே, அவை இரண்டும் ஒன்றுதான்.
உதாரணமாக, ஹஸ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் "ஸீரத்" அதாவது வாழ்க்கை மற்றும் குண நலன்கள் குறித்துக்
ஹஜ்ரத் ஆயிஷா(ரலி) அவர்கள், தங்களிடம் கேள்வி கேட்டவரிடம், அன்னாரது குணத்தை திருக்குர்ஆனில் தேடுமாறு கூறவில்லை.
மாறாக அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அன்னாரது குணநலமானது திருக்குர்ஆனாகவே இருந்தது என்று கூறினார்கள். அன்னார் திருக்குர்ஆனின் உருவகமாகவும், எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்தார்கள். திருக்குர்ஆனே அன்னாராவார்கள். அதனால்தான் நபிமார்கள் வர வேண்டும் என்று நாம் கூறுகிறோம், ஏனென்றால்
திருக்குர்ஆனை, அதனைக் கற்பிப்பதற்கு எந்த ஒரு தீர்க்கதரிசியும் இல்லாமலேயே, அதனை உறுதியாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று கூற முடியாது. நீங்கள் திருக்குர்ஆனைப் பற்றி பிடித்துக் கொண்டீர்கள் என்றும் அதன் காரணமாகவே உங்களுக்கு எந்த நபியும் அவசியமில்லை என்றும் கூறி விட முடியாது. சில சமயங்களில் நபியின் மீதான பிணைப்பு மற்றும் பந்தமானது, நபியின் மீதான உருவகமான அன்பின் மூலம் உருவாக்கப்படுகிறது. சில நேரங்களில் நீங்கள் நபியின் பெயரில் தியாகங்களை செய்கின்றீர்கள். சில சமயங்களில் நபிக்காக உங்கள் உயிரையே தியாகம் செய்கின்றீர்கள். இன்னும் சில சமயங்களில், நீங்கள் குற்றவியல் ரீதியாகக் கூட, மற்றவர்களின் உயிர்களையும் பறிக்கின்றீர்கள். நீங்கள் அதைச் செய்யும்போது, நீங்கள் எம்பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பிணைப்பை மற்றும் ஒரு பந்தத்தை ஏற்படுத்திவிட்டீர்கள் என்பதாகவும் நினைக்கின்றீர்கள். மேலும் நீங்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்காக மட்டும் சில உற்சாகத்தையும், அன்றாட வாழ்வின் போது ஒரு மரியாதை உணர்வையும் வெளிக்காட்டுகின்றீர்கள், நீங்கள் நபியுடன் அந்த இணைப்பையோ அல்லது பந்தத்தையோ ஏற்படுத்தியிருக்கவில்லை.
ஆகவே, அந்த இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள, ஒரு குறிப்பிட்ட தொடர்பு, ஒரு குறிப்பிட்ட பாதை உள்ளது. அப்படிப்பட்ட இந்த தொடர்பின் மூலம் மட்டுமே அன்னாருடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.
ஒரு நபர் அல்லது ஒரு ஜமாத் அல்லது முழு உம்மத் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுடன் அந்த தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்றால், அவர்களால் திருக்குர்ஆனுடனும் உண்மையான தொடர்பினை ஏற்படுத்தி கொள்ள முடியாது. அவர்களால் உண்மையில் திருக்குர்ஆனைப் புரிந்துகொள்ளவும் முடியாது. திருக்குர்ஆன் மீது அவருக்கு அல்லது அவர்களுக்கு உண்மையான நேசம் இருக்கவும் முடியாது. ஏனெனில் திருக்குர்ஆன் மீது நேசம் கொள்ள, ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் சிறந்த ஒழுக்கப் பண்புகளை பெற்றிருப்பது அவருக்கு அவசியமாகும். ஏனென்றால் அப்படிப்பட்ட அந்த சிறந்த ஒழுக்கப் பண்புகளே நேசத்தின் சுடரைப் பற்றவைக்க முடியும். அப்படிப்பட்ட இந்த நேசம் இல்லாமல், நீங்கள் திருக் குர்ஆனைப் பற்றி பேசினாலும், அந்த பேச்சுகள் வீணானதாகவே அமையும். அது யதார்த்தத்துடன் அல்லது உண்மையுடன் எந்த தொடர்பும் இல்லாத பயனற்ற பேச்சுகளாகவே இருக்கும்.
நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் உண்மையான இணைப்பின்றி பிரிந்திருந்தால், உங்களால் திருக்குர்ஆன் மீதும், நபி (ஸல்) அவர்கள் மீதும் உண்மையான நேசத்தை பெற்றுக் கொள்ள இயலாது. அது ஒன்றுக்கொன்று பிரிக்க இயலாத ஒரே பொருளின் இரண்டு பெயர்கள் ஆகும்.
ஆக, பொதுவாகவே மக்களுக்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது மட்டுமன்றி, அன்னாருடைய ஒவ்வொரு ஒழுக்கக் குணங்களின் மீதும் நேசம் கொண்டிருக்க வேண்டும். அன்னாரது ஒழுக்க குணங்களின் மீது நீங்கள் நேசம் செலுத்துகின்ற தருணத்திலிருந்தே, நீங்கள் அந்த குணங்களை ஏற்று செயல்படுத்த இயலும். அவ்வாறு இல்லையென்றால், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் ஒழுக்கப் பண்புகளை நீங்கள் பின்பற்ற விரும்பினாலும் கூட, நீங்கள் அதனை எவ்வாறு மேற்கொள்ள இயலும்? ஆனால் இந்த ஒழுக்க குணங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் தருணத்திலிருந்தே ஓர் இணைப்பு மற்றும் தொடர்பு நிறுவப்பட்டு விடுகிறது. அதே காரணத்தினால் தான், ஒருவர் மற்றொரு நபருடன் மகிழ்ச்சியுடன் இருந்தால், அந்த நபரின் நல்ல பழக்கவழக்கங்களையும் குணங்களையும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அவர் அதை மேற்கொள்ளவும் வேண்டும். அதே காரணத்திற்காகவே ஒரே மாதிரியான ஒழுக்க குணங்களைக் கொண்டுள்ள அனைத்து மக்களும் ஒரு தொடர்பினை உணர்கின்றார்கள். அவர்கள் நெருக்கமாக உணர்வதால், ஒன்றாக நெருங்கி வருகின்றார்கள்.
பொய்யர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எப்போதும் தங்களைப் போன்ற பொய்யர்களுடன் நெருக்கமாக இருக்கின்றார்கள். உண்மையுடனும், உண்மையாகவும் நடப்பவர்கள் எப்போதும் உண்மையின் மீது இருப்பவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஆவார்கள். மனிதசமுதாயத்தை நேசிக்கக் கூடியவர்கள் அனைவரும் இயற்கையாகவே ஒன்றிணைந்து கொள்வார்கள். அவ்வாறு தான், வெவ்வேறான விஷயங்களின் அழகினை வெளிப்படுத்துபவர்கள் இருந்தால், அவர்கள் அனைவரும் அந்தந்த விஷயங்களின் ஒன்றிணைந்த குழுவாக இணைந்து கொள்வார்கள்.
உதாரணமாக, ஒரு கலை நிபுணர் தன்னைப் போன்ற மற்ற கலை நிபுணர்களுடன் நெருங்கி வருவார். பறவைகள் கூட, ஒரே இயல்புடையவையாக இருந்தால் அவை ஒன்றாகக் குழுவாகி விடும்.
எனவே ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களுடன் ஒன்று சேர்ந்து ஒன்றாகி விடுவது என்பது ஒரு கற்பனை கதையல்ல. நீங்கள் இந்த மேன்மையான ஒழுக்கங்களை, இந்த மேன்மையான நடத்தைகளை கடைப்பிடிப்பீர்கள் என்றால், நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுடனான நெருக்கத்தைப் பெற்றுக் கொள்வீர்கள், அதற்குப் பகரமாக நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் நேசத்தை வெல்வீர்கள். அந்த நேசமானது அல்லாஹ்விடம் இருந்து வருகின்ற நேசமாகும். அது அல்லாஹ்வின் மூலமே அனைத்து நேசமும் வெளிப்படுகிறது என்பதே இதற்கு காரணமாகும். மேலும் அதே விதத்தில், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுடனான உங்கள் தொடர்பும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும். இதுவே
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ "வ'-தஸிமூ பி-ஹப்லில்-லாஹ்"
என்பதன் உண்மையாகும். இந்த உண்மையை நீங்கள் மறந்தீர்கள் என்றால், இந்தக் கயிற்றை எவ்வாறுப் பற்றி இறுக்கப் பிடித்துக் கொள்வது என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். அவ்வாறு இல்லையென்றால், திருக்குர்ஆனைப் பற்றிபிடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் மட்டுமே உள்ளது. அதனால் ஒற்றுமைக்கான அவசியம் இல்லை என்று கூறுபவர்கள் ஏராளமானவர்கள் இருக்கின்றார்கள். இது உண்மை அன்று! ஒற்றுமை தேவைப்படுகிறது.
எனவே, இஸ்லாம், இஸ்லாத்தின்
இது ஒரு சமூகத்தின் ஒற்றுமையை மட்டும் குறிக்காது, மாறாக இது ஒரு உம்மத்தின் ஒற்றுமையை, அனைத்து முஸ்லிம்களின் ஒற்றுமையை, இஸ்லாத்தின் ஒற்றுமையை குறிக்கிறது. ஏனெனில் இந்த வசனத்தில் ஒரு சமுதாயம் பற்றிய-முஸ்லிம்கள் ஒரே சமுதாயமாக ஒன்றுபட்டது பற்றிய குறிப்பு உள்ளது. ஒவ்வொரு நபரும் தனித்தனியாக குர்ஆனைப் இறுக்கமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும் என்பது இதற்கு பொருள்படாது. மாறாக, குர்ஆன் அனைத்து மக்களையும் ஒரே கையில் அல்லாஹ்வின் கரத்தில் ஒன்று திரட்டுகிறது. அது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் கரமாகும் அன்னார் அல்லாஹ்விடமிருந்து வந்த, அவனுடைய பிரதிநிதி ஆவார்கள்.
மேலும் அது, அதாவது திருக்குர்ஆன், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுடன் தொடர்புடைய, பிரிக்க முடியாத பிணைப்பைக் கொண்ட "ரூஹூல் குத்தூஸுடன் எழுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர்" ஒருவரின் கையில் மக்களை ஒன்று சேர்க்கிறது.
திருக்குர்ஆன் அழைக்கக் கூடிய சமூகம் இதுவேயாகும். ஏனெனில் அல்லாஹ்வின் கயிற்றை உறுதியாகவும் ஆனால் ஒற்றுமையுடன் அதாவது ஒரே உடல் போன்று பற்றி பிடித்துக்கொள்வது குறித்து இது வலியுறுத்துகிறது.
இந்தக் கயிற்றை நாம் எவ்வாறு உறுதியாகப் பற்றிப் பிடிப்பது? நான் இதை விரிவாகக் குறிப்பிடுகிறேன் அதாவது ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களுடனான நமது பிணைப்பை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஒற்றை இணைப்பு போதுமானதன்று. ஈமான் அதாவது நம்பிக்கை மூலம் பெறப்படும் பிணைப்பும் உள்ளது. நம்பிக்கையின் இணைப்பைப் பெற்ற பின்னர், அந்த நொடியில், ஒருவர் மற்ற இணைப்புகளை நிலைநிறுத்துவதற்காக மற்ற தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
உண்மையைப் பேசியவர்களில் ஹஜ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களே மிகவும் உண்மையாளர் ஆவார்கள்.
எனவே, அந்த உண்மையாளரை நீங்கள் நேசிக்கின்ற, அதே வேளையில் நீங்கள் உண்மையை வெறுத்தால், பின்னர் அந்த நொடியில் நீங்கள் ஒரு பொய்யராகி விடுவீர்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொய்யர்களிடையே நிலைத்து நிற்பது என்பதும், அவ்வாறான மக்கள் சாந்தியையும் சமாதானத்தையும் பெற்றுக் கொள்வது என்பதும் சாத்தியமற்றதாகும். அல்லாஹ் அவ்வாறான மக்களுக்கு ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களின் உண்மையான தொண்டர்களுடன் ஒன்றிணைந்து இருப்பதற்கோ அல்லது அன்னாரது உண்மையான தொண்டர்கள் ஆவதற்கோ வாய்ப்பு கூட வழங்குவதில்லை.
எனவே, ஹஸ்ரத் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் ஒன்றிணைவதைப் பொறுத்தவரை, அது அனைத்து சகாப்தங்களையும் விட மேலான ஒரு விஷயமாகும். இது வெறும் ஒரு சகாப்தத்தை மட்டும் குறித்ததல்ல.
ஒவ்வொரு காலகட்டத்திலும், மக்கள் தாங்களாகவே ஒன்றுகூடி ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களுடன் இணைந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளது. அவர்கள் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் மேன்மையான நடத்தையையும், மேன்மையான ஒழுக்கங்களையும், கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள் சிறியவர்களிடம் கருணை காட்டுவதை கண்டால், அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றுங்கள், மேலும் அந்த மேன்மையான நடத்தையை உங்களுக்குள்ளும் மற்றவர்களிடமும் பிரதிபலித்து வெளிப்படுத்திக் காட்டுங்கள். ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுக்கு வயதானவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய இருதரப் பினரிடமும் மரியாதை இருந்தது. அவர்கள் எப்போதும் தியாகம் செய்யக் கூடியவர்களாகவே இருந்தார்கள். அவர்கள் ஒரு அசாதாரணமான மனிதராக இருந்தார்கள். ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் அந்த நல்ல குணங்கள் அனைத்தையும் அறிந்திருந்த பின்னரும் கூட, நீங்கள் அந்த நல்ல குணங்களை விட்டு விலகி வெகு தொலைவில் உள்ளீர்கள் என்றால் - நீங்கள் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களுக்கு நெருக்கமானவர் என்று நம்புகிறீர்கள் என்றால், அந்த நொடியிலேயே அது உங்களுடைய முழுமையான கற்பனையாகவே இருக்கும். அது ஒருபோதும் உண்மையல்ல!
ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களைப் பற்றி பேசும் போதோ அல்லது அன்னாரின் மீது தரூத் ஓதும் போதோ அவர்களின் நினைவாக உங்கள் கையை முத்தமிட்டு உங்கள் நெஞ்சை தொடுவது அல்லது நீங்கள் "நாரே தக்பீர்" என்று கூறி ஹஜ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் நபித்துவத்தின் மகத்துவத்தை உறுதிப்படுத்துவதே போதுமானது என்று நினைத்து விடாதீர்கள்.
இல்லை!, அது போதுமானதல்ல!. நீங்கள் அதை மட்டும் செய்து விட்டாலே ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களிடம் நெருங்கிவிடுவீர்கள் என்று நினைத்து விடாதீர்கள். இதை போன்று, நீங்கள் வெறும் "அல்லாஹு அக்பர்" என்று கூறினாலே, இது உங்களை அல்லாஹ்விற்கு அருகில் கொண்டு சென்று விடாது.
நீங்கள் உங்களுக்குள் அல்லாஹ்வின் பண்புகளை வெளிப்படுத்தும் போது, அதுவே உங்களை அல்லாஹ்விற்கு அருகில் அழைத்து சென்று விடுகிறது.
அல்லாஹ்வின் பண்புகளை தனக்குள் அதிகமாக வெளிப்படுத்திக் காட்டியவர் என்றால் அது ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா(ஸல்) அவர்களே ஆவார்கள்.
எனவே அந்த நல்ல குணங்களைத் தேடிப் பார்த்து, அவற்றை கடைப்பிடித்து, முயற்சி செய்து அந்த குணங்களின் நேசத்தை பெற்றுக் கொள்வீராக!. எது போலவென்றால் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களுடனான உங்கள் பிணைப்பை அல்லது தொடர்பை அதிகரிக்கும் அதாவது நன்றாக நிலைநிறுத்தும். ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் குணங்களைப் பின்பற்றுவதன் மூலம், ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களுடனான தனது பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய ஒருவரால், தனது சகோதரர்களிடம் இருந்து பிரிந்து இருந்திட முடியாது; ஏனெனில் அவருடைய அதாவது இந்த நபரின் நல்ல குணங்கள் மூலம் இவர்கள் அனைவரும் ஹஸ்ரத் முஹம்மது (ஸல்) அவர்களுடன் நெருக்கத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். எனவே, அவர்களும் உங்களைப் போலவே, தங்களுக்குள்ளேயும் அந்தக் குணங்களை வெளிப்படுத்தத் தொடங்குகிறார்கள். அந்த நொடியில், நீங்கள் ஹஸ்ரத் முஹம்மது நபி (ஸல்) அவர்களுடன் நெருக்கத்தைப் பெறுவதோடு மட்டுமல்லாமல், அதே வேளையில், உங்கள் சகோதரர்கள் அனைவருடனும் கூட நீங்கள் நெருங்கிவிடுவீர்கள்.
ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் மேம்பட்ட ஒழுக்கப் பண்புகளை வெளிப்படுத்தவும், ஆன்மீகப் பண்புகளும் அதே போன்று திருக்குர்ஆனும் உங்களுக்குள் பிரதிபலிக்கவும் அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் - எனது அனைத்து ஸஹாபாக்களுக்கும் மற்றும் இந்த ஒட்டுமொத்த உம்மத்திற்கும் உதவி புரிவானாக!.
ஹஸ்ரத் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் பல நடைமுறைகளிலும், அவர்களது பல நல்லொழுக்கங்களையும் நீங்கள் பின்பற்றும் போது, நீங்களும் மேன்மையுடையவர்களாக ஆகிவிடுகிறீர்கள். மேலும் அந்த நொடியில் தான் உம்மத் ஒன்றுபட்டு சிறந்து விளங்கும். மேலும் பூமியின் அனைத்து மனிதர்கள் மற்றும் தீர்க்கதரிசிகள் மத்தியில், அல்லாஹ்வின் தூதர் ஹஸ்ரத் முஹம்மது முஸ்தஃபா (ஸல்) அவர்களின் இந்த பரிபூரணமான உதாரணத்தின் மூலம் நாம் ஒன்றுபட்டுள்ளோம் என்பதால் எதனாலும், எவராலும் நமது ஒற்றுமையை தகர்த்திட முடியாது, இன்ஷா அல்லாஹ், ஆமீன்.
ஆதாரம் : 4 ஆகஸ்ட் 2023 ஜும்மா குத்பா
தலைப்பு : அல்லாஹ்வின் கயிறு (பாகம் -1)
Monday, November 6, 2023
இக்காலமும் இறை தண்டனையும்
மக்களே! மார்க்த்தில் வரம்பு மீறுவதை விட்டும் உங்களை எச்சரிக்கிறேன். உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் மார்க்கத்தில் வரம்பு மீறுவது தான்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம்: இப்னுமாஜா (3020)
இறைவனின் இறுதி வேதமான திருக்குரானில் பல்வேறு சமுதாயங்களுக்கு இறைவன் புறமிருந்து இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு சமுதாயங்கள் வாழ்ந்ததற்கான எந்த சுவடுமின்றி முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன, இது வெறும் வரலாறு மட்டும் தானா? தற்காலத்தில் இது போன்ற இறை தண்டனைகள் இறங்குவதில்லையா? மனித குலம் முற்றிலும் தூய்மை அடைந்துவிட்டதா? அல்லது அல்லாஹ் ஒவ்வொரு சமுதாயத்துடனும் இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்பவனா?
அல்லது இக்கால பெயர் தாங்கி ஆலீம்கள் கூறுவது போன்று அனைத்து தண்டனைகளும் மறுமையில் மட்டும் தானா?
இக்காலத்தில் பேரழிவுகள் நடக்கவே செய்கின்றன, முற்காலத்தில் நிகழ்ந்தவை மட்டும் இறை தண்டனைகள் தற்கால பேரழிவுகள் அனைத்தும் இயற்கை சீற்றங்களா?
அல்லாஹ் தன்னுடைய நடைமுறையை குறித்து திருக்குரானில் இவ்வாறு கூறுகின்றான்:-
63. سُنَّۃَ اللّٰهِ فِی الَّذِیۡنَ خَلَوۡا مِنۡ قَبۡلُ ۚ وَ لَنۡ تَجِدَ لِسُنَّۃِ اللّٰهِ تَبۡدِیۡلًا ﴿﴾
முன்னர் காலஞ்சென்றவர்களிடத்து அல்லாஹ்வின் செயல்முறை இதுவே. அல்லாஹ்வின் செயல்முறையில் எந்த மாற்றத்தையும் உம்மால் ஒருபோதும் காண முடியாது. ( திருக்குர்ஆன் 33: 63 )
இந்த வசனம் அல்லாஹ்வின் நடைமுறை நிலையானது என்பதை தெளிவுப்படுத்துகிறது, பிறகு இக்காலத்தில் இறை தண்டனை குறித்து முஸ்லீம் சமுதாயம் உட்பட அனைவரும் இத்தகைய அனைத்து நிகழ்வுகளையும் "இயற்கை சீற்றம்" என்று கூறுவதற்கான காரணம் தான் என்ன?
இதற்கு விடை மிக்க எளிதானதாகும் இவர்கள் காலத்தின் இமாம்களை மறுப்பதும் அந்த இறை அடியார்களுக்கு இறை புறமிருந்து கிடைக்கும் இறைவெளிப்பாடுகளுள் செய்யப்படும் முன்னறிவிப்புகளையும் மறுப்பதின் விளைவுகளாகும்.
முந்தைய சமுதாயங்களில் இறைவனின் நடைமுறை பற்றி திருக்குரான் வசனங்கள் உங்கள் பார்வைக்கு....
97. وَ لَوۡ اَنَّ اَهۡلَ الۡقُرٰۤی اٰمَنُوۡا وَ اتَّقَوۡا لَفَتَحۡنَا عَلَیۡهِمۡ بَرَکٰتٍ مِّنَ السَّمَآءِ وَ الۡاَرۡضِ وَ لٰکِنۡ کَذَّبُوۡا فَاَخَذۡنٰهُمۡ بِمَا کَانُوۡا یَکۡسِبُوۡنَ ﴿﴾
அந்த ஊர்களில் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் நம்பிக்கை கொண்டு (இறை) அச்சத்தை மேற்கொண்டிருந்தால், நாம் வானங்களிலிருந்தும், பூமியிலிருந்தும் அவர்கள் மீது அருள்களின் வாயில்களைத் திறந்திருப்போம். ஆனால் அவர்கள் (நபிமார்களைப்) பொய்ப்படுத்தினர். எனவே நாம் அவர்களை அவர்களது செயல்களின் காரணமாகத் தண்டனையைக் கொண்டு பிடித்தோம். ( திருக்குர்ஆன் 7: 97)
131. وَ لَقَدۡ اَخَذۡنَاۤ اٰلَ فِرۡعَوۡنَ بِالسِّنِیۡنَ وَ نَقۡصٍ مِّنَ الثَّمَرٰتِ لَعَلَّهُمۡ یَذَّکَّرُوۡنَ ﴿﴾
ஃபிர்அவ்னின் இனத்தினர் அறிவுரையினைப் பெறும்பொருட்டு, (இன்னல் நிறைந்த) பல வருட வறட்சியினாலும் பழங்களின் குறைவினாலும் (குழந்தைகளின் மரணத்தினாலும்) நாம் அவர்களைப் பிடித்தோம். ( திருக்குர்ஆன் 7: 131 )
68. وَ اَخَذَ الَّذِیۡنَ ظَلَمُوا الصَّیۡحَۃُ فَاَصۡبَحُوۡا فِیۡ دِیَارِهِمۡ جٰثِمِیۡنَ ۙ﴿﴾
அநீதியிழைத்தவர்களை கொடுங்காற்று பற்றிக் கொண்டது. எனவே , அவர்கள் தங்கள் வீடுகளில் முகங்குப்புற விழுந்தனர் . ( திருக்குர்ஆன் 11: 68 )
65. فَکَذَّبُوۡهُ فَاَنۡجَیۡنٰهُ وَ الَّذِیۡنَ مَعَهٗ فِی الۡفُلۡکِ وَ اَغۡرَقۡنَا الَّذِیۡنَ کَذَّبُوۡا بِاٰیٰتِنَا ؕ اِنَّهُمۡ کَانُوۡا قَوۡمًا عَمِیۡنَ ٪﴿﴾
(ஆனால்) இதன் பிறகும் அவர்கள் அவரைப் பொய்யாக்கினர். எனவே நாம் அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் ஒரு கப்பலில் காப்பாற்றினோம். நம்முடைய அடையாளங்களைப் பொய்யாக்கியோரை நாம் மூழ்கடித்து விட்டோம். அவர்கள் ஒரு பார்வையற்ற சமுதாயத்தினராக இருந்தனர். ( திருக்குர்ஆன் 7: 65 )
5. وَ کَمۡ مِّنۡ قَرۡیَۃٍ اَهۡلَکۡنٰهَا فَجَآءَهَا بَاۡسُنَا بَیَاتًا اَوۡ هُمۡ قَآئِلُوۡنَ ﴿﴾
நாம் எத்தனையோ ஊர்களை அழித்து விட்டோம். அவர்கள் இரவில் தூங்கும் போதோ, நண்பகலில் ஓய்வெடுக்கும் போதோ நம் தண்டனை அவர்களிடம் வந்தது. ( திருக்குர்ஆன் 7: 5 )
இவை சில உதாரணங்கள் மட்டுமே இன்னும் ஏராளமான வசனங்கள் உள்ளன, எனவே இவை வெறும் கதைகளோ அல்லது வரலாற்று சம்பவங்கள் மட்டும் அல்ல, இது இக்காலத்திலும் உயிருள்ள முன்மாதிரிகளாகும்.
இனி இக்காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் (அய்) அவர்களால் கூறப்பட்ட இறை ஆக்கினை பற்றிய முன்னறிவிப்பையும் அது நிறை வேறிய சான்றுகளையும் முன் வைக்கின்றோம்.
O humanity, the decrees of God will be inevitably executed, and you will see the coming days as the days of Noah...” (Friday Sermon of 26 January 2018---08 Jamad'ul Awwal 1439 AH).
ஓ மனிதகுலமே, இறைவனின் கட்டளைகள் தடுக்க இயலாமல் நிறைவேற்றப்படும், மேலும் வரும் நாட்களை நூஹ்வின் நாட்களாக நீங்கள் காண்பீர்கள்...” (26 ஜனவரி 2018-08 ஜமாதுல் அவ்வல் 1439 ஹிஜ்ரி ஜும்மா குத்பா).