Monday, June 6, 2022

நம்பிக்கை கொண்டோர்களுக்கு அழகிய கூலி!

காலத்தின் இமாம் ஹஸ்ரத் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் கூறுகின்றார்கள்:-

ரமலானில் நீங்கள் அல்லாஹ்வே.. உங்களுக்கு வெகுமதியாகக் கிடைப்பதற்காக நோன்பு நோற்கின்றீர்கள். தற்போது நினைவில் வைக்கவேண்டியது: எவர் இறைவனின் தூதரை ஏற்றுக் கொள்கின்றார்களோ, மேலும் இந்த உலகில் இஸ்லாத்தின் முன்னேற்றத்திற்குரிய வழிகளில், இஸ்லாத்தின் உண்மைக்காக, உண்மை இஸ்லாத்திற்காக அவருக்கு உதவுகின்றார்களோ, அவர்களே இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றி பெறுவார்கள். அவர்களின் வாழ்நாளில், இப்பூமியில் அவர்கள் செய்த எல்லா தியாகங்களுக்காகவும் அல்லாஹுவையே நற்கூலியாக பெற்றுக்கொள்வதால், அவர்களே உண்மையில் அதிர்ஷ்டசாலிகள் ஆவார்கள். ரமலான் மாதத்தைப் போன்றே அவர்கள் பிற மாதங்களிலும் அதிகமான தியாகங்களைச் செய்தார்கள் அல்லது பல விஷயங்களில் இருந்தும் தங்களை விலக்கி வைத்திருந்தார்கள், அதற்குப் பரிகாரமாக அல்லாஹ்வையே அவர்களுக்குரிய கூலியாகப் பெற்றுக் கொள்வார்கள், இன்ஷா அல்லாஹ்!

-ஜுமுஆ உரை 07.06.2019

Copyright @ 2013 Sahih Al Islam .