Saturday, June 4, 2022

தவறான ஷைத்தானிடம் தூண்டுதலில் இருந்து பாதுகாப்பு தேடுவதற்கு!

ஹஸ்ரத்  கலீஃபதுல்லாஹ் முனீர் அஹ்மத் அஸீம் (அலை) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள்:

ஆகவே, மனித குலமே, எனது முஸ்லீம் சகோதரர்களே சகோதரிகளே, அன்புக்குரிய குழந்தைகளே! இன்னும் உலகெங்கிலும் உள்ள எனது ஸஹாபிகளே! அனைவரும் அல்லாஹ்வு(தபாரக்) விற்கு முற்றிலும் அடிபணிந்து விடுங்கள்! ஷைத்தானை எதிர்த்து நில்லுங்கள். அதனால், அவன் உங்களை விட்டும் ஒடிவிடுவான். அல்லாஹ்(தபாரக்)வின் அதிதீவிர வீரர்களாகி உங்களுக்குள்ளும் உங்களைச் சுற்றியும் அவனது ஏகத்துவத்தை மிகுந்த வீரியத்துடன் பாதுகாப்பவர்களாகி விடுங்கள். நல்லதைச் செய்யுங்கள், நல்லதையேப் பாருங்கள், நல்லவர்களாகவே நடந்து கொள்ளுங்கள். முஸ்லிம்களை நல்ல முறையில் பயிற்சி செய்யுங்கள், முஸ்லிம்கள் என்று வெறும் பெயரளவில் மட்டுமே இருந்துவிடாமல், அதனை செயல்படுத்திக் காட்டும் நல்ல முஸ்லிம்களாக நடந்து கொள்ளுங்கள். அல்லாஹ் (தபாரக்)விற்கு அருகில் வாருங்கள்! தினசரித் தொழுகைகளை மேற்கொள்ளுங்கள்!, திருக்குர்ஆனைப் படியுங்கள்! படைப்பினங்களுடன் அல்லாமல் அல்லாஹ்(தபாரக்)வுடன் நெருங்கிய நட்பு கொள்ளுங்கள், பிறகு அதற்கு பிரதிபலனாக அல்லாஹ் (தபாரக்) உங்களை எந்த அளவுக்கு நேசிப்பான் என்பதையும், எந்த அளவுக்கு நெறுங்கி வந்துவிடுவான் என்பதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும், நீங்கள் உங்களது உள்ளத்தை உங்களால் பார்க்க முடியும். உங்கள் இதயத்தின் நிலையை உங்களுக்குக் காண்பிப்பதற்காக அல்லாஹ்(தபாரக்) உங்களுக்குள் இருக்கும் இறை ஒளியை இயக்குவதற்கு ஏற்றி வைப்பதற்கு அனுமதியுங்கள். உங்கள் பாவங்களை ஒப்புக் கொள்ளுங்கள். இன்னும் அவனின் இருப்பை மறுக்காதீர்கள், ஏனென்றால் இறைவனின் தூய வார்த்தைகளையே நமது மனதில் நிறுத்தும்படி கட்டாயப்படுத்த வேண்டும்:

"எங்களிடம் எந்த பாவமும் இல்லை என்று கூறினால், நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். நம்மில் எந்த உண்மையும் இல்லை என்று பொருள். ஆனால் நாம் அல்லாஹ்(தபாரக்)விடம் நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும். அப்போது அவன் தனது வாக்குறுதியை நிறைவேற்றி, நமக்கு உகந்ததை நிறைவேற்றுவான். அவன் நம்முடைய பாவங்களை மன்னித்து நாம் செய்த அனைத்துத் தவறான செயல்களிலிருந்தும் நம்மைத் தூய்மைப் படுத்திவிடுவான்."




ஜுமுஆ பேரூரை 13.08.2021

Copyright @ 2013 Sahih Al Islam .