Tuesday, June 7, 2022

உண்மை இஸ்லாம் - Essence of Islam என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பாகம் -1 பதிவு-192

பாடம்:தூய நபி முஹம்மத்(ஸல்) அவர்கள்.

நபி(ஸல்) அவர்களின் மேலான தகுதி


பூமியில் வாழும் மனித இனமே, மேற்கிலு, கிழக்கிலும் வாழும் மனித ஆன்மாக்களே, நான் மிக அழுத்தமாக இதனை அறிவிக்கின்றேன். அதாவது, இப்பொழுது பூமியில் உண்மையான நெறி

இஸ்லாம் மட்டுமே ஆகும். திருக்குர்ஆன் கூறும் இறைவனே உண்மையான இறைவன் ஆவான். நிலையான ஆன்மீக வாழ்வைப் பெற்றுள்ள இறைத்தூதர், ஆற்றல் மற்றும் தூய்மை ஆகியவற்றின் அரியணையில் வீற்றிருக்கும் ஹஸ்ரத் முஹம்மத் முஸ்தபா (ஸல்) அவர்களே ஆவார்கள். அவர்களின் ஆன்மீக வாழ்விற்கும் அன்னாரது தூய்மையான கம்பீரத்திற்கும் சான்று என்னவெனில், அவர்களைப் பின்பற்றுவதாலும் அவர்களை நேசிப்பதாலும் நாம் பரிசுத்த ஆவியைப் பெறுபவர்களாகவும், இறைவனோடு உரையாடுதல் என்ற அருட்கொடையைப் பெறுபவர்களாகவும், விண்ணின் அடையாளங்களைக் காண்பவர்களாகவும் ஆகிவிடுகின்றோம்.

-(தரியாகுல் குலூப், ரூஹானி ஹஸாயீன், தொகுதி 15, பக் 141)

Copyright @ 2013 Sahih Al Islam .