அல்லாஹ் (ஸுப்ஹானஹுதாலா) நமக்கு கூறுகின்றான் :
ஜமாத் உல் ஸஹீஹ் அல் இஸ்லாமை சார்ந்த என் அடியார்களே!
உங்கள் இறைவனிடமிருந்து வரும் உண்மை இதுவாகும். இந்த உண்மையை நிராகரித்தவர்களை நினைத்து அச்சமடையவேண்டாம். அவர்கள் மறுப்பாளர்கள். என் விருப்பத்தைப் பெற நீங்கள் எனக்கு மட்டுமே முற்றிலும் அஞ்சிக் கொள்ளுங்கள். என்னுடைய மாபெரும் அருளால் உங்களுக்கு நேர்வழியைக்காட்ட என்னுடையத் தூதர் உங்களிடையே உள்ளார். இன்னும் அவர் உங்களிலிருந்தே வந்துள்ளார். மேலும் உங்களிடையே உள்ள அவர் எமது செய்தியையும், எமது வசனங்களையும், எமது வஹீயையும் உங்களுக்கு அறிவித்து எமது மறைவான ஞானத்தை உங்களுக்குக் கற்றுக்கொடுத்து உங்களைத் தூய்மைப் படுத்துகின்றார். இதற்கு முன்னர் நீங்கள் அறியாமலும் பகிரங்க வழிகேட்டிலும் இருந்தீர்கள்.
மேலும் நான் உங்கள் மேல் பொழிந்த அருளை எண்ணிப்பாருங்கள், எனவே நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள் ஒருபோதும் நன்றிக் கெட்டவர்களாகிவிடாதீர்கள். இன்னும் எனது உதவிக்காக பொறுமையுடனும் துஆ உடனும் இரவும் பகலுமாக துதித்துக் கொண்டிருங்கள். இதில் உறுதியுடன் இருங்கள். நிச்சயமாக நான் உங்களை அச்சம், பசி, ஏழ்மை, உங்கள் குடும்பம் உங்கள் விவசாயம், உங்கள் வேலை மற்றும் உங்கள் சூழல் மூலமாக சோதிப்போம். எவர் பொறுமையுடனும், பயபக்தியுடனும் உறுதியுடனும் இருக்கிறாரோ அவருக்காக எனது மாபெரும் அருளால் என்னுடையத் தூதை அனுப்பி உங்களை நேர்வழிப் படுத்துகின்றேன். எவர் நம்பிக்கைக் கொண்டு அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுகின்றாரோ அவரை அல்லாஹ் நேசிக்கின்றான், ஆமீன்.
நாள் - 29.06.2018