Monday, June 6, 2022

அல்லாஹ்வின் மஸீஹை ஏற்றுக்கொண்டதால் ஏற்பட்ட அருள்!

ஹஸ்ரத் முதல் கலீஃபத்துல் மஸீஹ் தொடர்பாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதை நாம் பலமுறை கேட்டுள்ளோம். அவர்களிடம் ஒருவர் கேட்டார்.

ஹஸ்ரத் மவ்லவி சாஹிப் நீங்கள் முதலிலேயே சிறந்த சான்றோராகத் திகழ்ந்தீர்கள். நீங்கள் மிர்ஸா சாஹிபிடம் பைஅத் செய்ததன் காரணமாக உங்களுக்கு என்ன கிடைத்தது. என்று கேட்டார்.

முதல் கலீஃபத்துல் மஸீஹ் அவர்கள், பாருங்கள் இன்னும் பல பலன்களும் எனக்கு இந்த பைஅத்தால் கிடைத்துள்ளன. அவற்றில் ஒன்றைப் பற்றி உங்களுக்குக் கூறுகின்றேன். பைஅத் செய்வதற்கு முன்னால் நான் ஹஸ்ரத் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டு வந்தேன். இப்போது எனது கண்கள் விழித்திருக்கும் நிலையில் கஷ்ஃப் காட்சியில் நான் ஹஸ்ரத் ரஸூலுல்லாஹ் (ஸல்) அவர்களைச் சந்திக்கின்றேன். இந்தப் புரட்சியைத்தான் என்னிடம் மிர்ஸா சாஹிப் உருவாக்கியுள்ளார்கள். என்று பதில் கூறினார்கள். அல்லாஹு அக்பர்!!

Copyright @ 2013 Sahih Al Islam .